இடுகைகள்

டிசம்பர், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இந்தக் கதை எழுதியதற்கு நான் வெட்கப்படுகிறேன். மன்னித்து விடுங்கள் :-((

ஆக்ரோஷத்துடன் இருந்த அந்த இளைஞர்கள் கூட்டத்தைப் பார்க்கும்போதே மனதுள் கொஞ்சம் கிலி பரவியது.  இத்தனை நாட்களுக்குப் பிறகும் இதெப்படி இந்த நெருப்பு இன்னும் அணையாமல் இருக்கிறது என அர்விந்த் ரதோர் ஆச்சர்யப்பட்டான்.  கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் முடியப் போகிறது, அக்கோரச் சம்பவம் நடந்து.  நேர்மையான, துணிவான அதிகாரிதான் இந்தக் கொடூரத்தை விசாரிக்கவேண்டும், இதற்கு சரியான ஆள் இவர்தான் என்று பலரின் ஏகோபித்த ஆதரவுடன், கடைசியாய் அர்விந்த் தேர்ந்தெடுக்கப்பட்டான்.  அதன்படியே, அர்விந்த் மிகச் சரியான கோணத்தில், எந்த அரசியல் இடையூறுமின்றி, சாட்சிகளை சரியாகச் சேர்த்து, அந்தக் கொடுமைக்காரர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்களை அடுக்கி வைத்திருந்தான்.  நாடு முழுக்க பெருங்கோபத்தை கிளறி விட்ட இந்த பாலியல் வன்முறை வழக்கு, விரைவு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு வருவதால், இன்னும் ஓரிரு வாரத்தில் தீர்ப்பு வரும் நிலையை எய்தியுள்ளது.  நிச்சயம் ஒரு குற்றவாளி கூட தப்ப முடியாத அளவு, வலையைப் பின்னியிருந்தான் அர்விந்த்.  செண்டிமெண்ட் கேஸ் வேறு என்பதால் அதிகபட்ச தண்டனையை பெறுவார்கள் என அர்விந்த் உறுதிபட இருந்தான்.  ஆனால்,