இடுகைகள்

மே, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இறைவனிடம் கையேந்துங்கள் !!!

படம்
ஊடக நடுநிலைவாதிகள், அறிவுஜீவிகள், மாமேதைகள்.......எப்போதுமே சினிமாக்காரர்களை நோக்கி கேட்கும்/கேட்ட சில கேள்விகள் :- // இப்படியெல்லாம் இவர்களை மோசமாக சித்தரிக்கிறார்களே.........’பாமர ரசிகன்’ இவர்களைப் பற்றி என்ன நினைப்பான் ? // // எங்களை கட்டி வைத்து அடித்ததைப் போல் வலிக்கிறதே, இப்படி அராஜகமாய்ப் படமெடுப்பவர்களின் படத்தை கூட்டம் கூட்டமாய் பார்க்கும் ’முட்டாள்களே’ திருந்தமாட்டீர்களா ? // // சினிமாவில் பயங்கரவாதிகளாக எங்களையே காட்டுவதால், எங்களுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பதில்லை, வேலை கிடைப்பதில்லை, சமூகத்தில் ஒதுக்கிவைக்கப்படுகிறோம்,   ’இரக்கமேயில்லையா’ உங்களுக்கு ? // உண்மையில், சமீபத்தில் பெங்களூருவில் வெடித்த குண்டுவெடிப்பை ஒரு நாடகமாகத்தான் நினைத்தேன்.  வீழ்ச்சி நிலையில் இருந்த பா.ஜ.க தான், பச்சாதாப அலைகளை உருவாக்கி, சட்டசபையைக் கைப்பற்ற இந்த ‘வெடிகுண்டு’ விளையாட்டை நடத்தியிருக்கக் கூடும் என நம்பினேன். ஆனால், இந்த வெடிகுண்டு வழக்கில், கர்நாடக போலீஸ் எடுக்கும் தொடர் நடவடிக்கைகளை பார்க்கும்போது மிகவும் மனம் வலிக்கிறது.  ஒருவரைக் கைது செய்வதாலேயே அவர் குற்றவாளி அல்ல என்பதெ

துன்பியல் சம்பவம் :(

படம்
இந்த நாளை அவ்வளவு எளிதில் எப்படி மறந்து போனேன் எனத் தெரியவில்லை.  இன்று காலை அலுவலகத்திற்கு வரும்வழியில், சாலை நெடுக வைத்திருந்த ராஜீவ்காந்தியின் நினைவஞ்சலி பதாகைகளைப் பார்த்தவுடன் நினைவு 22 வருடங்களுக்கு முன்னோக்கிச் சென்றது. 1991 மே 21 செவ்வாய், இதே மாலை வேளையில், கருணாநிதி வடசென்னை மிண்ட் அருகே, தன்னுடைய இறுதிப் பிரச்சாரத்தை, ஒரு கை ரிக்சாவில் நின்றவாறே, சவுகார்பேட்டை மார்வாடி வாக்குகளைச் சேகரித்துக் கொண்டிருந்தார்.  அவர் அப்போது துறைமுகத் தொகுதியில் போட்டியிட்டார்.  அப்போது எப்போதுமே தேர்தல் நிறைவுநாள்  கூட்டத்தை மின்ட் பகுதியில்தான் நடத்துவார்.  இம்முறை கூட்டம் போடாமல், வாக்கு மட்டும் சேகரித்தார்.   மிக மிக எளிமையான பிரச்சாரமது.  அப்போது கருணாநிதியின் ஆட்சியை சந்திரசேகர் டிஸ்மிஸ் செய்திருந்தார்.  பரிதாப வாக்குகள் சராமாரியாக விழுந்து, மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என வெகுவாக நம்பினார்.  அப்போது சென்னை திமுகவின் கோட்டையல்லவா ?  ஊரெங்கும் உதயசூரியன் கட்- அவுட்கள், விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, மங்கிய மாலையை வண்ணமயமாக்கி இருந்தது. அன்றைய தூர்தர்ஷனில் மாலை வேளைகளில் ப

தகிக்கும் நெஞ்சம் !

படம்
ச்சே......இந்த பொறுப்பில்லாத அரசியல்வாதிகளையும், அவர்களின் அல்லக்கைகளின் செய்கைகளையும் கண்டு வெதும்பி நிற்கிறேன் :( நகரத்தில் வைக்கும் ஒரு மேடைக் கூட்டத்திற்கு எதற்கு சாலை ஓரங்களிலும், சாலையின் நடுவிலும் குழல் விளக்குகள் ? அதற்கு மேல் அவர்களின் சின்னத்தை வெளிக்காட்ட அலங்கார சீரியல் விளக்குகள்,  மினுமினுக்கும் வண்ண விளக்குகளின் வரிசைகள், சந்து பொந்துகளை மறைத்து பெரும் பதாகைகள், ராட்சத பேட்ஜ்கள், வாழை மரங்கள், தோரணங்கள், கொடிக் கம்பங்கள்.   இவைகளின் நீளமெல்லாம், சில கிலோமீட்டர்கள் தூரம் வரை கூட, வரும் தலைவர்களின் தகுதி பொறுத்து வளர்கிறது.  இதற்கான மின்சாரம் திருடப்படுகிறது என்று பொதுவான குற்றச்சாட்டு உண்டு.  என் கேள்வி, அது திருடப்படாத மின்சாரமேயாகக் கூட இருக்கட்டுமே...........அருகிலிருக்கும் எளிமையானவர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டிய மின்சாராமாக அல்லவா அது இருக்கும் ?  இது போன்று உறிஞ்சப்படும் மின்சாரத்திற்காக அக்கம்பக்கத் தெருக்களில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது, வேறு சில இடங்களில் அழுத்தம் குறைவாக விநியோகிக்கப்படுகிறது. இத்துணைக்கும் இன்று எங்கள் பகுதிக்கு வரும் தலைவர் எதிர்க்கட்