இடுகைகள்

ஜூலை, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் ?

படம்
நெல்சன் ஷேவியர் என்னை விட வேகமிக்கவர்.  நேற்றே எழுத ஆரம்பித்த இக் கட்டூரையை சாவகாசமாக இன்றைய வெள்ளிக்கு உபயோகிக்கலாம் என்றிருந்த என் சோம்பலுக்கு சம்மட்டி அடி.  அழகாக இன்றைய சன் செய்தி விவாததிற்கு பயன்படுத்திக் கொண்டார் !!! சுதேசி விதேசி என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியும்.   இருந்தாலும் சுதேசி எனில்  உள் நாட்டு ரசிகர் என்றும் விதேசி வெளி நாட்டு(பொருட்களின்) ரசிகர் என்றும் எளிதில் அவதானிக்கலாம். நம் நாடு, இருபதாம்  நூற்றாண்டின் தொடக்கங்களில், பெருமளவு அன்னியப் பொருட்களின் மோகத்தில் திளைத்துக் கொண்டிருந்தது.  வெளிநாட்டு உடைகள், வெளிநாட்டு தின்பண்டங்கள், அலங்கார ஆபரண ஆடம்பர அணிகலன்கள், என மக்கள் ஃபாரின் பொருள் எனில் அதை உசத்தியாகவும், தரமாகவும் கருதிக் கொண்டிருந்தார்கள். உள் நாட்டுப் பொருள்களை ஏளனம் செய்தும், அதை உதாசீனப்படுத்தியும் அறவே புறக்கணித்தனர்.  விளைவு, வெள்ளைக்காரன் ஏற்கனவே சுரண்டிய இந்தியப் பொதுச் சொத்துக்கள் போதாதென, எல்லா இந்தியர்களிடமிருந்தும் மறைமுகமாக கொள்ளையடித்தான்.  நெல் & கோதுமை விளைந்த மண்ணெல்லாம் பருத்தி விதைக்க மிரட்டி, அப் பருத்தியை விவசாயிகளிடமி

ஊழல் நம் பிறப்புரிமை :(

படம்
என் லேப்டாப்பின் வலது மூலையில் சில நாட்களாக, இப்படி ஒரு ’குழுமம்’ இயங்குவதாகக் காட்டிக்கொண்டே இருந்தது.  என்னுடைய உற்ற தோழர்கள் வேறு அதன் முகப்பு படங்களில் என்னைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்துக்கொண்டிருந்தனர்.  ஏதோ ஒர் உறுத்தல், என்னை அந்தக் குழுமத்தில் இணைய விடாமல் தடுத்துக் கொண்டேயிருந்தது.  இதோ கீழேயுள்ள இந்தக் குழுமம்தான் அது.  நீங்களும் இதில் உறுப்பினராய் இருக்கக்கூடும், வாழ்த்துகள் :))) // நாங்கள் ஊழலுக்கு எதிரானவர்கள். 4,387 members Closed Group அரசு அதிகாரத்தை பயன்படுத்தி தனது சொந்த நலனுக்காகவோ தனது உற்றார் உறவினர்களின் நலனுக்காக துளி அளவு கூட ஆதாயத்தை அடைந்து இருந்தாலும் அது ஊழலே, அது இந்த நாட்டின் மிகப்பெரிய கேடாக உள்ளது. அப்படிப்பட்ட ஊழல்வாதிகளை தோலுரித்து காட்டுவோம். வாருங்கள் நண்பர்களே // சரி, விஷயத்துக்கு வருகிறேன்.  இந்த ஊழல் பற்றி ஒரு சுவையான விவாதம் நடந்தது என் நண்பரின் அலுவலகத்தில் !  அது, ’யாரால் ஊழல் இந் நாட்டில் பெருகியது ?’  மூன்று நண்பர்கள் அவரவர்களாக ஆளுக்கொரு தலைப்பை எடுத்துக்கொண்டு பேச ஆரம்பித்தனர். முதலாமவர், ’அரசியல்வாதிகளால்தான் இந்தியா

’குட்டி’ பேய்க்கதை !!!

படம்
தடக்...தடக்...தடக்....கென இயல்புக்கு மாறாக வேகமாகத் துடித்துக் கொண்டிருக்கும் இதயம், பக்கென்று தொண்டை வரை வந்தடைக்கும் ’பயத்தை’ அனுபவித்திருக்கிறீர்களா ? நேற்று முன்னதிகாலை மூன்று மணி, செல் அலாரம் முணுமுணுக்க, தண்ணியடிக்க எழுந்தேன் (சாமிகளா......’இவனுமா ?’ ன்னு சலிக்காதீங்க, கார்ப்பரேஷன் தண்ணிய நம்பி வாழ்ற லோயர்மிடில் க்ளாஸ் ஜீவன் நான்) ஐந்து குடங்கள், ஒரிரு வாளிகள் நிரப்பியபின்னர், வாஷிங்மெஷினில் துணியைப் போட்டு டெலிகேட் மோட் (42 நிமிடங்கள்) செட் செய்துவிட்டு, இந்த 42 நிமிடங்கள் போரடிக்காமல் இருக்க, ஜெயமோகனின் ‘காடு’ நாவலைக் கையிலெடுத்தேன் ! இனி ஜெமோவின் ருத்ர தாண்டவம் :- 300 வருடங்களுக்கு முன்னர், சேர நாட்டு திருவனந்தபுர அரசில் நடந்த (நடந்ததாக சொல்லப்பட்ட) ஒரு கதை ! திருவனந்தபுர ராஜாவுக்கும், ராணிக்கும் ஒரு மனக்குறை. நாட்டின் அடுத்த ஒரே வாரிசான இளவரசன் அடிக்கடி வாத நோயால் முடங்கிப்போவதுதான் ! (மூத்தவன் ஒருவன் இருந்தான், அவன் திடீரென மனம் பேதலித்து, ராஜ வாழ்வைத் துறந்து, பழனி படிக்கட்டில் அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறான், மீட்க முடியவில்லை) அரண்மனை வைத்தியர்கள், அயல் தே