இடுகைகள்

ஆகஸ்ட், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஓசைகள் ஒரேவிதம் !

பசலை கொண்ட பெண்ணின் பெருமூச்சைப் போல.... சினம் கொண்டு நீண்டெழுந்த நாகத்தின் ஒலியைப் போல.... மடை திறந்ததும் பீறிட்ட நீரின் உடல்மொழியைப் போல.... தீண்டியதும் ஓலமிட்டது கொதித்துக் கிடந்த டீச் சட்டி !!!

இவளுங்க ஓடிடுவாளுங்க !!!

'தந்தை என்பவன், மகனை எப்படி வளர்க்கவேண்டும் என்பதை தன் அப்பனுக்கு, தன் மகனை வளர்ப்பதன் மூலமே காட்ட வேண்டுமென வைராக்கியம் கொண்டான் பக்ருதீன். எப்போது ?  தன்னுடைய பதினாறாவது வயதிலேயே ! அவனுடைய ஏழாவது வயதில் தாய் செத்துப்போயிருந்தாள்.  ஏற்கனவே அப்பாவுக்கு இரண்டாவதாய் வாக்கப்பட்டவள்(முதல் மனைவி இருக்கும்போதே) என்பதால், அப்பாவிற்கு வசதியாய் போனது, ஒன்றரை மாதத்தில் மூன்றாவது அம்மா வந்து சேர்ந்தாள்.  வந்த வேகத்தில் பக்ருதீனுக்கு அடுத்தடுத்து இரண்டு தங்கைகள் பிறந்ததால்......ஏற்கனவே இல்லாதிருந்த மதிப்பு, இன்னும் மருவி கொடுமையானது. அப்பாவிற்கு பிரத்யோகமாக பாசத்தை கொட்டவெல்லாம் தெரியாது.  முதல் அம்மாவுக்கு பிறந்த இரண்டு அண்ணன்கள், ஒர் அக்கா, பக்ருதீன், புதுசா இரண்டு தங்கைகள், அதிலும் இப்ப கேக்க நாதியில்லாத பக்ருதீன்தான் அப்பாவின் கோபத்திற்கு சிறந்த வடிகால்.  திடுமென தாயின் அரவணைப்பு அறுபடவே, பக்ருதீன் தான் ஒரு வேலைக்காரனாய் நடத்தப்படும் விதத்தை, வெளியே விளையாடும்போது நண்பர்களிடையே அடிதடியாய் காட்ட, தினம் ஒரு பஞ்சாயத்து.  “ச்சினால்க்கே பச்சா, பாட்கவ், மேரே ல**கே பால்..........என எப்போது