இடுகைகள்

நவம்பர், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நாட்டுக்கு இதெல்லாம் அவசியமாய்யா ?

படம்
நான் ரசித்த ஆளுமைகளெல்லாம் சிறுகச் சிறுக சரிந்து கொண்டே வருவதை கண்ணுறுகிறேன் ! 2010 ல் என்னுடைய டாப் 10 தமிழ் சினிமா இயக்குனர்களாக நான் பட்டியலிட்டவர்கள் :-  மணிரத்னம், ஷங்கர், பாலா, அமீர், கவுதம்மேனன், செல்வராகவன், மிஷ்கின், வெங்கட்பிரபு, சேரன், வசந்தபாலன் ! மணியின் பலம் இராவணனிலேயே தெரிந்துவிட்டது, சரி இனி இவரை க்ளாஸிக் வரிசையில் சேர்த்துவிடலாம் என முடிவு செய்த வேளையில் கடல் வந்து, அப்படி சேர்க்காவிட்டால் ’நீ முட்டாள்’ எனச் சொன்னது, ஆக, அந்த இடம் வெற்றிடமாய் உள்ளது. ஷங்கரைப் பொறுத்தவரையில் அவருடைய எந்திரன் & நண்பன் அபார வெற்றிதான் வணிகரீதியில். ஆனால் முன்னதை குப்பை என்றும், பின்னதை ரீமேக்தானே என்றும் மேதைகள் மட்டம் தட்ட முயல்கிறார்கள்.  அதைப்பற்றி ஷங்கர் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.  ஏனெனில் தன்னுடைய எஸ் ப்ரொடக்‌ஷன் மூலம் நட்டத்தைத்தான் சந்தித்துள்ளேன் என்கிறார்.  வணிக சினிமா மூலம் இவர் சம்பாதித்தால்தான் பிற புது சிந்தனையாளர்கள் மூலம் நல்ல படம் கிட்டும்.  எனவே பட்டியலில் இவருக்கே இப்போது முதலிடம் கொடுக்க வேண்டும்.  ஆனாலும் ஐ வந்துவிடட்டுமெனப் பார்க்கிறேன் !

ஆடு ஜீவிதம் - நாவல் விமர்சனம்

படம்
'ஆடு ஜீவிதம்' இது பற்றிய ஏராளமான விமர்சனங்களை நீங்கள் வாசித்திருந்தால் இந்தப் பதிவு உங்களுக்குச் சலிப்பூட்டும்.  வாசிக்காமல் இருந்திருந்தால் களி(கிலி)ப்பூட்டலாம் ! இலக்கியப் பித்து பிடித்த, நண்பர்களின் பரிந்துரையின் பேரில்தான் வாங்கினேன்.  ஆனால் எளிய நடையில் இருக்கும், பெருஞ்சோகமாக இருக்கும், வேகமாக வாசித்துவிடலாம் என்றெல்லாம் சொல்லிவிட்டதால், சரி பொறுமையாக எப்போது வேண்டுமானாலும் வாசித்துக் கொள்ளலாம் என, நண்பரிடம் படித்துப் பார்க்குமாறு கொடுத்துவிட்டேன் ! அவரோ, இரண்டு நாள் கழித்து, ஆஹா, ஓஹோ வென, புகழ்ந்து தள்ள, வேறு வழியேயில்லாமல் வாசிக்க வேண்டியதாயிற்று ! இப்போதைய சூழ்நிலை போலல்லாமல், ஓர் இருபது வருடங்களுக்கு முன்னால் அரபு நாடுகளில் வேலை கிட்டுவதென்பது ஏறக்குறைய சொர்க்கம்தான்.  அப்போது இங்கிருந்த வரும்படியையும், சம்பளத்தையும், அரபு நாடுகளுடன் ஒப்பிட்டால் அது கொத்தவரங்காயை புடலங்காயோடு ஒப்பிடுவது போலாகும் ! இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வேலைகள் கிட்டியதால், அப்போது நான் வசித்த பகுதியில், சராசரி இரண்டு இஸ்லாமிய குடும்பங்களில் ஒருவராவது அரபு நாடுகளில் வ