இடுகைகள்

செப்டம்பர், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கரிக்கும் கண்ணீர் !!!

படம்
உங்கள் கண்ணீர் உண்மையானதுதான் ! ஆனால் நீங்கள் உச்சிவெயிலில் அண்ணாசாலையில் வியர்வை வழிய பல மணி நேரம் காத்துக்கிடந்ததில்லை உங்கள் கண்ணீர் உண்மையானதுதான் ! உங்களின் வரலாற்றுச் சிறப்புவாய்ந்த இருப்பிடங்கள் ஒருபோதும் எவராலும் பறிக்கப்பட்டிருக்காது உங்கள் கண்ணீர் உண்மையானதுதான் ! மகாமக ஜலக்கிரீடையில் உங்கள் வீட்டாட்கள் எவருக்கும் காயம் கூட ஏற்பட்டிருக்காது உங்கள் கண்ணீர் உண்மையானதுதான் ! ஏன் என்றவுடன் ஆட்டோவும் எதற்கென்றவுடன் அரிவாளும் உங்களை நோக்கி வந்தே இருக்காது உங்கள் கண்ணீர் உண்மையானதுதான் ! ராஜா வீட்டுக் கல்யாணத்தை கேள்விப்பட்டிருப்பீர்கள் நேரில் பார்த்தனுபவிக்கும் பரவசத்தைக் கொடுத்தவரல்லவா அவர்கள் உங்கள் கண்ணீர் உண்மையானதுதான் ! இறந்தகாலத்தில் எவன் எக்கேடு கெட்டிருந்தால் எனக்கென்ன ? நிகழ்காலத்தில் என் வாழ்வை வளப்படுத்தியவர்கள் வாடினால் நானழுவேன் எனச் சொல்லும் உங்கள் கண்ணீர் உண்மையானதுதான் !!!   நன்றி, ராஜா ராஜேந்திரன் சென்னை-1.

அன்பில்லா சாருவுக்கு ஒரு கடிதம் !!!

அன்பில்லா சாருவுக்கு , நான் ராஜா ராஜேந்திரன் .  நீங்கள் மறக்க நினைக்கும் ஒரு குரு துரோகி . நானும் அவ்வாறேதான் இனி என் வாழ்நாளில் உங்களுடன் அன்னம் , தண்ணி , ஈமெயில் , வாட்ஸ்அப் என்று , எந்தத் தொடர்புகளும் வைத்துக்கொள்ளக் கூடாது என்கிற வைராக்கியத்துடன் இருந்தேன் . ஆனால் நேற்று நீங்கள் போட்ட உத்தம சிகாமணி வேடம் , அந்த வைராக்கியத்தை அடித்து நொறுக்கிவிட்டது .  நினைவிருக்கிறதா எழுத்தாளரே ? இதேபோல் ஒரு வேடமணிந்து " பெண்களால் எத்தனையோ ராஜ்ஜியங்கள் அழிந்துள்ளன " என நீங்கள் கூறிய ஒரு மொண்ணை அறிவுரையை , நான் , இதென்ன ஆட்டோ வாசகம் என்றேன் . முடிந்தது .  எல்லாம் முடிந்தது .  குரு நிந்தனை செய்த என்னை ‘ இயற்கை தண்டிக்கும் ’ என்றீர்கள் .   வட்டத்தை கலைத்து விடுவேன் என்றீர்கள் . காவிரி நீர் தமிழகத்திற்கு நிரந்தரமாக கிடைக்காமல் போய்விடுமோ என அஞ்சியே , அன்று வட்டத்தை கலைத்துவிட வேண்டாம் என்று உங்களிடம் மன்னிப்பு கோரினேன் . ஆனாலும் பொறுக்க மாட்டாமல் என்னை நிரந்தரமாக ப்ளாக் செய்தீர்கள் . அன்றிலிருந்து இந்த நொடிவரை நீங்கள் போடும் எந்தப் பதிவுகளும் என் கண்களுக்குத் தெரியாமல் ஞானக் குருடனா

ஜில்லா !!!

ஜில்லா - ஒரு ஜாலி விமர்சனம் ================================ எச்சரிக்கை :- 1.) இந்தப் பத்தி புரியவேண்டுமாயின், உங்களுக்கு சமகால இலக்கியத்திலிருக்கும் அரசியல் ஞானம் வேண்டும். 2.) விஜய் நடித்த(மூன்று ஆச்சர்யக்குறிகள்) ஜில்லா படத்தை அவசியம் பார்த்திருக்க வேண்டும். ( ’நாங்க ஏன் மிட்நைட்டு 12 மணிக்கு சுடுகாடு போகணும் ?’ எனக் கேட்கும் அறிவுஜீவிகள் உடனடியாக எஸ்ஸாகி விடவும்) இனி............. சிவன் என்றழைக்கப்படும் மோகன்லால் ஒரு கம்ப்ளீட் பின்நவீனுத்துவ எழுத்தாளராக தான் மட்டுமே தமிழுக்கு இருக்க வேண்டுமென வெறி கொள்கிறார் . சிவன் , தன் முன்னோடியாக ஏற்று , தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய பின்நவீனுத்துவ ஆளுமை வ . ஐ . ச . ஜெயபாலன் , திடுமென சிவன் அறவே வெறுக்கும் ஒரு மொக்கை எழுத்தாளனை வாரிசு எனச் சொல்லிவிட , அவரை மட்டுப்படுத்த ஒரு நாள் நள்ளிரவு , தன் வாசக வட்ட அன்பர்களுடன் அவர் முன் ஆஜராகி , ஒரு ஸ்டேடஸை தூக்கி எறிகிறார் . " சங்கரா , சங்கரான்னு( சிவனின் மற்றொரு பெயர் என்பதிது இங்கு குறியீடு) சாவப்போற வயசுல சொல்லிகிட்டு , கம்முனு கெடக்காம இதென்ன கூத்து ? லைக் இல்ல கமெண்ட இதுல போடு "