இடுகைகள்

அக்டோபர், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஏன் கசந்தார் சாரு, எனக்கேன் கசந்தாரோ ? (இறுதிப் பகுதிகள்)

ஏன் கசந்தார் சாரு , எனக்கேன் கசந்தாரோ ? # 4 ================================= விஸ்வரூபம் படம் தடைபட்ட நேரத்தில் , எல்லாவிடத்திலும் கமல் நிலைக்கு ஆதரவாய் பலமான எழுத்துச் சண்டை புரிந்திருக்கிறேன் . சாரு வாசகர் வட்டம் உட்பட ! விஸ்வரூபம் படத்தை பார்த்துவிட்டு சாரு , அதில் வரும் ஒரு காட்சியைப் பற்றி இப்படி விமர்சித்திருந்தார் . // வெந்த கறியை ருசிபார்க்குமாறு தன் மாணவியை , " பாப்பாத்தியம்மா , நீ டேஸ்ட் பண்ணிச் சொல்லுடி " என்கிறார் கமல் .  அதைப்பார்த்தவுடன் எனக்கு தியேட்டர் ஸ்க்ரீனை கிழித்துப் போட்டுவிட வேண்டுமென ஆத்திரத்தில் , உச்சவெறி ஏற்பட்டது . அமெரிக்காவில் நீக்ரோ எனச் சொல்வது எந்தளவு குற்றமோ , அதே அளவு குற்றம்தான் இங்கு பாப்பாத்தி எனச் சொல்வதும் . ஓர் இனத்தை இதை விடக் கீழ்த்தரமாக விளிக்கவே முடியாது // இதை வாசித்ததும் நமக்கு மயிர்காற்கள் குத்திட்டு நின்றுவிடும் . ’ ச்சே , என்னமா இன துவேஷத்தை எதிர்க்கிறார் ’ என்று . ( ஆனால் இந்த எழவு அறச்சீற்றமும் ஒரு குறியீடுதான் ) தன் சாதியைத்தான் இழிவுபடுத்திக் கொள்கிறார் எனச் சமாதானம் கொண்டாலும் , கமலின் இந்தக் காட்சியை நானும்