இடுகைகள்

ஏப்ரல், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சஞ்சாரம்

படம்
சஞ்சாரம்  - எஸ். ராமகிருஷ்ணன் (உயிர்மை பதிப்பகம்) ============================================ ’சஞ்சாரம்’  நாவல் வெளியீட்டு நிகழ்வு, மிக எளிமையாக, ஆனால் நினைக்கும் போதெல்லாம் இனிக்கும் ஓர் அனுபவத்தைக் கொடுத்துவிட்டது. சஞ்சாரம் எனில் ’இசை உலா’ & ’முடிவில்லா ஊர் சுற்றல்’ எனச் சிலவகைப்படும், என்று எளிய அறிமுக உரையோடு நிகழ்வை தொடங்கி வைத்தார் மனுஷ்யபுத்திரன்.  (பல புத்தக வெளியீட்டுகளை பத்து நாட்களுக்கு மேலாக தொடர்ந்து நிகழ்த்தி வருகிறார், ஒரே ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துவிட்டு அதை நடத்தி முடிப்பதற்குள் படாதபாடு பட்டுவிடும் நமக்கு, இவருடைய இந்த அயரா உழைப்பு, பெருவியப்பையும், அவர் மீது காதலையும் ஒருசேரத் தந்தது) முதல் நிகழ்வாக, திரு.ரவி சுப்ரமணியன், சில இலக்கிய ஆளுமைகளின் கவிதை மற்றும் சங்க காலப்பாடல்களை மிக மிக அழகாகப் பாடிக் காண்பித்தார்,  நிஜமான மார்கழி சீஸன் சபா கச்சேரியை அனுபவிப்பதற்கொப்பானதாக அமைந்து போனது அவரின் குரல். அடுத்து பேச வந்த டாக்டர் கே. எஸ். சுப்ரமணியன்  நூல் வெளியீடுகளில் வழக்கமாய்ப் பலரும் செய்வதைப்போல, நூலை பார்த்துப்.......பார்த்துப் பேசும் வகையில் ச

நான் போறேன் ஆத்தா வையும் என்னை விட்டுடுங்க !!!

படம்
1.) நேரத்தை அநியாயத்திற்கு தின்னும் இந்த ஃபேஸ்புக்கை விட்டு போகிறேன், இதற்கும் லைக் போடும் நல்ல உள்ளங்களே நன்றி......... 2.) காந்தி ஒரு பிரிட்டீஷ் ஏஜண்ட், தலித் விரோதி, இந்துக்களின் எதிரி, நாட்டை நாசமாக்கிய பொ பொ கிழவன்.............. 3.) பெரியார் தமிழனே கிடையாது, ஹிந்துக் கடவுள்களை அசிங்கப்படுத்திய மிருகம், மூத்திரம் பெய்யக் கூட எழமுடியாத  நிலையில் தன் வயதில் பாதியிராத பெண்ணை மணந்த நீசன்.......... 4.) திராவிடர், தேசியப் போர்வையில் நம்மைச் சுரண்டிய தமிழரல்லா வந்தேறிகளைத் துரத்துவோம், அகண்ட தமிழ்த்தேசியம் அமைத்து, முப்பாட்டன் கெளபீனத்தை அரியணையில் வைத்து நல்லாட்சி செய்வோம்........ மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் சில மாதிரிகள்தான் மாற்றுச் சிந்தனையாளருக்கான இப்போதைய ட்ரெண்ட்.  இதுபோல மாற உங்களுக்குச் சில தகுதிகள் வேண்டும். நீங்கள் நிறைகுடமாய், முழு வேக்காடாய் இருந்தும், இங்கெழுதுவது களைகளுக்கு வார்க்கும் நீர், மாறாக உங்கள் ப்ளாகில், பத்திரிகைகளில் எழுதுவது, நாவல்கள், கவிதை, சிறுகதைத் தொகுப்பு வெளியீடுகளில் கவனம் செலுத்துவது  நாட்டுக்கும் வீட்டுக்கும் தமக்கும் நல்லது என்ற