இடுகைகள்

ஜூன், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மானியம் துறப்பீர் :(

படம்
நமக்குச் சமையல் வாயு கொள்கலன்களைத் தூக்கிச் சுமந்து வந்து தரும் தொழிலாளர்களெல்லாம் சேர்ந்து சென்னையில் ஒரு விழிப்புணர்வு பேரணியை நடத்தினார்களாம், அதாவது GAS க்காக நாம் இந்திய அரசிடம் இருந்து பெறும் மானியத்தை, விட்டுத் தர வேண்டுமென வலியுறுத்துவதே அந்த விழிப்புணர்வின் நோக்கமென செய்தித்தாள்களில் வாசித்தேன்.   பேரணியின் உச்சகட்டமாய் அந்த ஊர்வலத்தில் பங்குபெற்றிருந்தவர்களில் சில( 50 - 60) தொழிலாளர்கள் தங்களுக்கு இந்த மானியம் இனி வேண்டாம் என்று அதற்கான விண்ணப்பப் படிவத்தில் கையெழுத்திட்டும் கொடுத்தார்களாம். இதை வாசித்ததில் இருந்து என்னை பெருங் குற்றவுணர்ச்சி ஒன்று ஆட்கொள்ள ஆரம்பித்தது.  நான் மொத்தமே என் குடும்பத்திற்காக வருடத்தில் ஐந்து அல்லது ஆறு சிலிண்டர்கள் உபயோகிப்பேன், ஆக அதிக பட்சம் எனக்குக் கிட்டப்போகும் ஆயிரம் அல்லது ஆயிரத்து இருநூறு ரூபாய்கள் கிட்டும் மானியத்தை நாட்டுக்காகத் துறப்பதில் என்ன தவறு ?   கடுமையாக வெயிலிலும், மழையிலும், பனியிலும் உழைக்கும் வர்க்கமே நாட்டுக்காக இப்படி தியாகம் செய்யும்போது, சொகுசாக ஏசி, குஷன் நாற்காலி, ஆப்பிள் கம்ப்யூட்டர், மாதம் சில ஆயிரங்கள்