இடுகைகள்

2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பாண்டேவும் கருங்குரங்கும்

படம்
ஜூலை  2017 உயிர்மையில் வெளியான கட்டுரை. உயிர்மை கட்டுரை தலைப்பு :   வெடிக்கப் போகும் பலூன் ! ============================ எழுதியது -ராஜா ராஜேந்திரன். ரமணா படத்தில், காவல்துறை மிகக் குழப்பமாய் முழித்துக் கொண்டிருக்கும் ஒரு தருணத்தில், முடிச்சவிழ்ந்து சிக்கல்கள் தீர, ஒரு பொதுக் காரணத்தை துப்பறிந்துக் கண்டுபிடிக்கும். அது என்னவென்றால், படத்தின் நாயகன் பணிபுரியும் ஒரு கல்லூரியில், அவரிடம் படித்த மாணவர்கள் மட்டும், தமிழக அரசுப் பணிகளில், தமிழகம் முழுக்க விரவிக் கிடப்பார்கள். ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்க மாட்டார்கள்.  அதேவேளையில் அவர்களுடன் பணி புரியும் சக ஊழியர்களில் யார் யார் லஞ்சப் பேர்வழிகள், எவ்வளவு லஞ்சம் வாங்குகிறார்கள் என்பதை மட்டும் தங்களின் பேராசிரியர்க்கு(நாயகன்) அப்டேட்டாக அனுப்பி வைத்துக் கொண்டிருப்பார்கள். நாயகனின் அந்த முன்னாள் மாணவர்கள், பொதுப்பணித்துறை, காவல்துறை, தொழில், வணிகவரி என்று தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் இருப்பார்கள். சரி.  இது நாயகனின் நல் நோக்கத்திற்காக, அதாவது ஊழலை அறவே ஒழிக்க, அவர் ஹிம்சை வழியை நாடுகிறார்.  அதாவது ஆயுதங்கள் மூலம் அ