செவ்வாய், 22 மே, 2012

HEY RAM

ஓர் இயக்குனர், தான் சார்ந்திருக்கும் மதத்திலுள்ள குறைகளை அறவே வெறுக்கிறார், ஆனால் இங்குள்ள குடும்பச் சூழலில் அதை முற்றிலுமாக வேரறுக்க முடியாமல் தாம் மட்டும் நாத்திக கோலம் பூணுகிறார் !அதே நேரத்தில் வேறொரு மதத்திலுள்ள பிழையையும் சுட்டிக் காட்ட விரும்புகிறார் !   அது ஒரு மதத்தை சார்ந்தவனால் முடியாது, இதற்க்கு அந்த நாத்திக ஆயுதம் உதவும் !
சரி, 'ஹே ராம்' க்கு வருவோம்,  இப்போது சஹாத்தே ராம் கமலில்லை, நீங்கள்தான் !  உங்களை 1947-48 கால கட்டத்தில் ஒரு படித்த தமிழ் இளைஞனாய், வெள்ளையனிடம் வேலை (புதைபொருள் ஆராய்ச்சி) செய்பவராய் காட்டப்போகிறோம், அப்படியெனில் ஐயராகவோ, அய்யங்காராகவோ, அதிகபட்சம் செட்டியாராகவோ, அல்லது முதலியாராகவோ காட்டப்படவேண்டும் !  நாம் வணிகம் செய்யப் போவதில்லை, எனவே செட்டியார், முதலியார் வேண்டாம் என உதவி இயக்குனர்கள் குழு விவாதத்தின் போது நிராகரிக்கிறது, அப்போ மிச்சமிருப்பது ஐயர், அய்யங்கார், தலைப்பை ராம் என்று வைத்துத் தொலைத்துவிட்டோம், சரி லாஜிக்படி 'அய்யங்கார்' ஒத்துப் போக, நீங்கள் இபோது ஒரு அய்யங்கார் !
கல்கத்தாவில் அழகான மனைவியுடன் இனிமையான வாழ்க்கையைத் தொடங்குகிறீர்கள்,  மதக் கலவரம் வெடித்து.......உங்களுக்கு நன்கு தெரிந்த ஒரு முஸ்லிம் இளைஞன், இந்தக் கலவரத்தைப் பயன்படுத்தி, உங்களின் கண் முன்னே...............................!
வெறிகொண்டு துப்பாக்கி தூக்கும் உங்களுக்கு முதலில் எதிரியாய் தெரிவது கலவரக்காரர்கள் மட்டுமே, ஆனால் ஒரு ஆர்.எஸ்.எஸ். இளைஞனின் உதவியால் உயிர் காக்கப்படுகிறீர்கள், அதற்க்கான நன்றி கடனுக்கும், அவனுடைய மூளைச்சலவையிலும் நீங்கள் தீவீர இந்துத்துவாவாதியாக மாறிவிடுகிறீர்கள், உங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு காந்தியே காரணம் என்பதையும் அறிகிறீர்கள் !
மீண்டும் வெடித்த மதக்கலவரத்தில் உங்களின் ஆருயிர் நண்பனைக் காண நேர்கிறது, ஆனால் அவன் ஒரு முஸ்லீம் என்ற ஒரே காரணத்திற்க்காக ஒரு கும்பல் அவனைச் சூழ்ந்து கொள்கிறது !  உங்கள் கண்களுக்கு அவன் முஸ்லீமாய்த் தெரியாமல், ஓர் உயிராய் தெரிகிறது,  அவனைக் காப்பாற்ற முயல்கிறீர்கள்,  ஆனால் முடியவில்லை,  அப்போதுதான் உணர்கிறீர்கள் இழப்பு ஒரு மதத்துக்கு மட்டும் நேரவில்லை என்று !  குறைந்தபட்சம் நண்பன் குடும்பத்தையாவது காப்பாற்ற தோன்றுமளவு உங்கள் எண்ணம் மாற்றியமைக்கப் படுகிறது !
இங்கே நிறுத்துவோம்,  இப்போது நீங்கள்
இடைமறிக்கிறீர்கள், 'என்னை ஹிந்து இளைஞனாய் காட்டுவது எனக்குப் பிடிக்கவில்லை மாற்றுங்கள் என்கிறீர்கள்,  சரி, நீங்கள் முஸ்லீம், வில்லன் ஹிந்து என்கிறார் இயக்குனர்,  அது பீரியட் படம், உண்மையில் ஹிந்து vs முஸ்லீம் நடந்ததைத்தான் சொல்கிறோம் என்று இயக்குனர் கூறுகிறார்,  நீங்கள் மதசார்பற்ற மற்றும் சிறுபான்மையினர் நலவிரும்பி என்பதால் ஏற்கவில்லை, உங்கள் ரசிகர்களும் நீங்கள் செய்ததுதான் சரி என்கிறார்கள். இயக்குனர் தாமே நாயகன் ஆக முடிவுசெய்து, உங்களை விட்டுவிடுகிறார் !
அடுத்து 'உன்னைப்போல் ஒருவன்'   டிஸ்கசன் !
நீங்கள்தான் அதில் இயக்குனர்,  நான்கு நிகழ்ச்சிகள் மேல் உங்களுக்கு கடும் கோபம் :-
1.)  நேபாளத்திலிருந்து கடத்தப்படும் விமானம், இந்தியாவில் தரையிறங்கிப் பிறகு அரபுநாடுகள் சென்று அங்கிருந்து காந்தகார் போகிறது, நடுவில் எங்குமே அவர்கள் தடுக்கப்படாமல்,  ஜாலியாக அவர்கள் வீட்டில் இருந்தவாறே பேரம் பேசி காரியம் சாதிக்கிறார்கள் !
2.) ஒரு வேனில் வரும் கும்பல், திடீரென சுட்டவாறே பாராளுமன்றத்தில் நுழைய முற்ப்படுகிறது, மத்திய பாதுகாப்புப்படை அதைத் தடுத்துவிட, திட்டம் முறியடிக்கப்படுகிறது, எதிரிகள் சிலர் பிடிபடுகிறார்கள் !
3.) இருள் சூழ்ந்த ஒரு பின்மாலைப் பொழுது,  இயந்திர துப்பாக்கிகள் சகிதம் வரும் கும்பல் கண்ணில் படும் யாரையும் சுட்டுக் கொன்றவாறே முன்னேறுகிறது.  பின்னர், ஒருவன் மட்டும் பிடிபட, மீதிக் கொலைகார்கள் கொல்லப்படுகிறார்கள் !          
4.) ஒரு ரயில் பெட்டி வெளியே தாளிடப்பட்டு உள்ளே நெருப்பு வைக்கப்படுகிறது,  அதிலுள்ள யாத்ரீகர்கள் கொல்லபடுவதாய் புரளி கிளம்பி அம்மாநிலத்தில் கலவரம் வெடிக்கிறது, எங்கும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு !  எல்லா அட்டூழியங்களும் செய்வது ஹிந்துக்கள், அல்லலுறுவது முஸ்லீம்கள்,  அம்மாநில அரசோ கலவரக்காரர்களுக்கு ஆதராவாக கைகட்டி நிற்கிறது !
கடைசியாய் இதை சொல்லி முடிக்கும்போது நீங்கள் மிகவும் கொதிப்பான நிலையில் உள்ளீர்கள், குஜராத் இந்துக்கள் மேல் அளப்பரிய ஆத்திரம் கொள்கிறீர்கள் !
இந்த நான்கு சம்பவங்களுக்குமே காரணம் 'ஹிந்துத்துவா' என்கிறீர்கள், வழக்கம்போல் உங்கள் உதவியாளர்கள் மெய்சிலிர்த்து 'சரிதான்' என்கிறார்கள், தயாரிப்பாளர் மட்டும் சற்று நெளிகிறார் !
மாலேகான், நாண்டட் மாவட்ட குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய 'ஹிந்துத்துவா' தீவீரவாதிகளை, ஓர் இந்து வாலிபனே அழிப்பதாய் கதையை வடிவமைக்கிறீர்கள், தயாரிப்பாளர் கையைப் பிசைகிறார், பிறகென்ன......நீங்கள் கோபத்துடன் உங்கள் படையுடன் வெளியேறுகிறீர்கள் !  படத்தை வேறொருவர் கதை மாற்றி இயக்குகிறார் ! 
ஓர் உண்மையான பயங்கரவாதி எனில் காப்பாற்றப்படுவார்கள் எனும் போலி வாக்குறுதிக்கு மயங்கி ஒப்புக்கொள்ளும் தீவீரவாதிகள் சட்டத்துக்கு புறம்பாய் அழிக்கப்படுகிறார்கள், ஆனால் நால்வரில் மூவர் முஸ்லீம் என்பதால் கமல் இங்கு 'ஹிந்துத்துவாவாதி' ஆகி விட்டார் !        
  

 

1 கருத்து:

 1. நண்பரே...நீங்கள் பெர்க்மன்,ராபர்ட் பிரஸ்ஸான்,கோடார்டு,அண்டனியோனி படங்கள்
  முடிந்தவரை பாருங்கள்.
  அவற்றை டீ கன்ஸ்ட்ரக்ட் பண்ணிப்பாருங்கள்.
  இதன் பிறகு ஹேராம் மீண்டும் ஒரு முறை பாருங்கள்.

  அருமையான தலைப்பை வைத்திருக்கிறீர்கள்.
  நீங்கள் கல்லாத... உலகளவு உயர்ந்த தரத்தில்.... ஹேராம் இருக்கிறது.

  நான் எழுதப்போகும் ஹேராம் தொடர் பதிவிலும் உங்களை வரவேற்க்கிறேன்
  நன்றி.

  பதிலளிநீக்கு