திங்கள், 27 ஜனவரி, 2014

குடியரசைக் கொண்டாடுவோம் !!!

ச்சும்மா கெடந்த சங்க ஊதிக் கெடுத்தானாம் ஆண்டின்னு ஒரு சொலவடை இருக்குல்ல...........அப்படி ஒரு சங்கு சத்தத்தால எனக்கு வெட்டி வேலைய கொடுத்தானுக :(

குடியரசு தினத்துக்கு வெறும் வாழ்த்தோட ஒதுங்கி
, இலை போல அமைதியா இருந்திடணும்னு பார்த்தாலும் புழுதிக்காத்து ஓய்வெடுக்கவிடாதுன்றது உண்மைதான் போல :(
இங்க
, இந்தியாவிற்கும் இந்திய அரசிற்கும் வித்தியாசம் தெரியாத, இந்தியக்குடியரசு உதவியால் கல்வி கற்ற மூடர்கள் அதிகம். தேசியத்திற்கும் தேசத்தை ஆள்கிற மொள்ளமாரிக் கட்சியோட அரசுக்கும் வித்தியாசம் தெரியாத வெறி நாய் ஒன்னு, இந்திய தேசியக்கொடி மேல மூத்திரம் அடிப்பது போல ஒரு போட்டோவ, போட்டோ ஷாப்ல க்ரியேட் பண்ணி, ’இதான் என் இந்தியா, என்னோட இந்தியாவ நான் இப்படித்தான் மதிப்பேன்னு பெருமைப் படுது. கேட்டா தனி மனித சுதந்திரமாம் :(
நாயே
, நாயே........சுதந்திரம் கூட நமக்கு எப்போதும் எவ் வழியிலோ இருந்ததுதான், வெள்ளைக்காரன விரட்டினதுல்லாம் பெரிய சுதந்திரமில்ல, ’நாமெல்லோரும் இந் நாட்டு மன்னர்கள்னு, நமக்குச் சம உரிமை கிட்ட, உதவுன, இந்தியக் குடியரசாலத்தான் நாயே உன்னால் இப்படியெல்லாம் செய்ய முடிகிறதுஎன தடியால் அதன் நடுமண்டையில் அடிப்பதைப் போல் சொல்லியாயிற்று.
ம்ஹூம்
, அவைகள் என்ன திருந்தியா விடப் போகிறதுகள் ? இருந்த கொஞ்ச நஞ்ச மூளையைத்தான் சலவைக்கு விட்டு அது கரைந்து போய் விட்டதே, அவைகளுக்கு சில ஆலோசனைகளையாவது சொல்லலாமெனத்தான் இந்தப் பதிவு.
கூடங்குளத்தை வலுக்கட்டாயமாகத் திணித்த கட்சியை இனி எந்நாளும் ஆதரிக்காதே
, கூடங்குளத்தோடு சேர்த்து கல்பாக்க அணு உலைகளையும் அகற்றும் கட்சிக்கு என் ஆதரவு எனச் சொல். அல்லது உன் தலைமையில் அப்படி ஒரு கட்சியை நிறுவி, உன் போன்ற ஆட்களாய் நிரப்பி, இந்தியாவை ஆண்டு பார். குடியரசால் உனக்கு கிட்டிய சுதந்திரம் இது !
ஈழப்போரின் போது இந்தியாவை ஆண்ட கட்சி
, இலங்கை அரசுக்கு எங்கனம் உதவி, எம் தமிழர்களை அழித்தது என வெள்ளை அறிக்கை தரும் கட்சிக்கு என் ஆதரவு எனச் சொல் !கச்சத்தீவை மீட்டுக் கொடுப்பதோடு, மீனவர்கள் எல்லை மீறினால் அவர்களைச் சுட்டுத்தள்ளாமல் வெறும் அபராதத்தோடு விட்டுவிடும்படி அன்னிய நாடுகளிடம் ஒப்பந்தம் போட உறுதி கொடுக்கும் கட்சிக்கு என் ஆதரவு எனச் சொல் !
முல்லைப் பெரியாறு
, காவிரிக்கான தமிழக உரிமையை கிஞ்சித்தும் பிறழாமல் நிறைவேற்றிக் கொடுக்கும் துணிவான கட்சிக்கு என் ஆதரவு எனச் சொல் !
அதை விட்டுவிட்டு
, இந்தியாவே ஒழிக, நான் இந்தியன் இல்லை, என் தேசம் இதுவல்ல எனக் கூறும் வீரனெனில், உன் அடையாளச் சான்றிதழ்களில், நேஷனாலிட்டிக்கு எதிரே இந்தியன் என இருந்தால் அதை கருப்பு மசியால் அழித்துவிட்டு, உண்மையான வீரன்தானென வாழ்ந்து காட்டு !
இந்தியன் என்ற அடையாளமில்லாமல் ஒரே ஒரு விலையில்லா சிம் கார்டாவது வாங்கிக் காட்டு
. அதைவிட்டு விட்டு, கொஞ்சம் போட்டோ ஷாப் அறிவு, கொஞ்சம் சேகுவாரா, கொஞ்சம் பிரபாகரன், கொஞ்சம் பெரியார், கொஞ்சம் அம்பேத்கர், கொஞ்சம் உதயகுமார், படித்துவிட்டு........புரட்சி பேசுகிறேன் பேர்வழி எனத் தாய்நாட்டைப் பழிக்காதே !
தேசிய வெறி பிடித்தவன் என என்னை நீ இழித்தாலும்
, இன வெறி பிடித்தவன்தான் நீ என்பதை மறவாதே. உன் இனத்தில் இன்றும் ஆயிரம் உட்பிரிவுகள் உள்ளதென்பதையும் மறவாதே, அந்த ஆயிரம் உட்பிரிவுகளிலும் இரண்டாயிரம் ஏற்றத்தாழ்வுகள் உள்ளதென்பதையும் மறவாதே !
இந்தக் குடியரசினால் கிட்டிய சம உரிமையோ
, உனக்கென கிட்டிய சில சிறப்புரிமையோ மட்டுமில்லாமல் வெறுமனே சுதந்திரம் மட்டும் கிட்டியிருந்தால், இன்றும் உன் ஊரின் மிராசுதார், அல்லது ஆதிக்கச்சாதி தாதா, வீட்டு வாசல் முன், அடுத்தவேளை உணவிற்காக வேலை கேட்டு கையேந்தி, அழுக்கு வேட்டி துண்டுடன் நின்றிருப்பாய் என்பதையும் மறவாதே !
உன் இனத்தில் காணும் வேற்றுமைகளை முற்றிலும் ஒழித்துக்காட்டிவிட்டு
, தேசியத்தை மறு. அதுவரை எங்களிடமிருந்து தூர நில்.
எங்களைச் சுதந்திரமாக
, எங்கும், எதிலும், எப்போதும் நுழைய அனுமதித்த, எதையும் எவரும் எங்கும் கற்க அனுமதித்த, நிஜ சுதந்திர நாளான இன்றைய குடியரசு தினத்தை நாங்கள் விமரிசையாக பள்ளு பாடி ஆடிக் கொண்டாட வேண்டும் !!!
அனைவருக்கும் என் இனிய குடியரசுதின நல்வாழ்த்துகள்
:)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக