காமரசக் கவிதைகள்
புளி ரசம், தக்காளி ரசம் தெரியும், அதென்னய்யா காமரசம், அது எப்படி இருக்கும் எனும் பாலகர்களுக்கு, "தம்பி இது அடல்ட்ஸ் ஒன்லி, பதினெட்டு பூர்த்தியானதுக்கு அப்புறமாத்தான் வாசிக்கணும், ஏன்னா நான் என்னோட இளமை ஊஞ்சல்ல வேகமா ஆடிட்டு இருந்தப்போ எழுதின அசைவக் கவிதைகள் இவை" ஏப்ரல் ஒன்னு முட்டாள்கள் தினம் மட்டுமல்ல, இந்திய அரசு வரியை ஒழுங்காகச் செலுத்தும் தம் வர்த்தக குடிமக்களை, அன்றுதான் புது கணக்கு ஆண்டை தொடங்கச் சொல்கிறது, அதற்காக ஆயூதபூஜைக்கு அப்புறமா மீண்டுமொருமுறை அலுவலகத்தை சுத்தம் செய்ய ஆரம்பித்தேன். பீரோவைக் குடைந்து பழையன கழிப்போமென குப்பைகளை அள்ளி வெளியே கொட்ட எத்தனித்த போது, மனைவிக்குப் பயந்து, அலுவலக பீரோ லாக்கரில் அடுக்கி வைத்திருந்த பழைய டைரிகள் சரிந்து கீழே விழுந்தது, ஒவ்வொன்றாய் புரட்டி வாசிக்க ஆரம்பித்ததும், உற்சாகத்தில் சரேலென்று வயது டீனேஜூக்குத் தாவிவிட்டது...