இடுகைகள்

நவம்பர், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உருக்கமான வாசகி கடிதம்

அன்புள்ள சாரு, நான் உங்களின் தீவிர வாசகி.  தனியறையில் பலமுறை, ஸீரோ டிகிரியின் இறுதிப் பக்கங்களில் வரும் கவிதைகளை வாசித்து கதறியழுதிருக்கிறேன்.   ஒருமுறை மறந்துபோய் ஹாலில் வைத்து வாசித்துவிட்டேன்.  ”ஏம்மா ரபியா அழுற ?” ன்னு ஒரு முரட்டு குரல்.  வாப்பா.  அப்போதுதான் எனக்கு நினைவே வந்தது, நான் ஹாலில் அமர்ந்து உங்கள் நாவலை வாசித்துவிட்டேன் என்று.  அந்தளவு என்னை உருக்கியெடுத்த நாவல் அது.  ’உங்களைப் போலவே இவரும் எனக்கு வாப்பாதாம்ப்பா’ என்று அந்த நாவலின் பின்னட்டையிலிருந்த உங்கள் போட்டோவைக் காட்டினேன் என் வாப்பாவிடம். ஸீரோ டிகிரி முடித்தபின், உங்களின் எல்லா நாவல்களையும் வாங்கி வாசித்தேன், அவ்வப்போது அந் நாவல்கள்  பற்றியெழுதி, உங்களுக்கு மெயில்களும் அனுப்பிவைத்திருக்கிறேன்.  உங்கள் ஆன்லைனை ஒருநாள் விடாமல் வாசிப்பேன்.  நீங்கள் ஆன்லைனில் எழுதாமல் விட்ட நாட்களெல்லாம் எனக்கு கிட்டிய தண்டனைகளாகவே கருதுவேன், அன்று முழுக்க என் முகத்தில் சோகம் வழிந்தோடும்.  உம்மா, ’என்னடி உங்க வாப்பா இன்னிக்கு ஏதும் எழுதல போல ?’ என்று எளிதாக கண்டுபிடிப்பது போலவே, என் முகம் இருக்கும். ஒரு மோசமான வியாழனன்று உங்கள் பதிவ

தாய்மையெனும் போலிப் புனிதம் - ப்ரியா தம்பி

படம்
பிரியா தம்பியின், ‘பேசாத பேச்செல்லாம்’ நடுவில் சில வாரங்கள் வாசிக்காமல் தவிர்த்து விட்டிருந்தேன். மொத்த ஆண்களுமே அட்டைப் பூச்சிகள் எனும் ரேஞ்சில் அவரெழுத்துகள் இருக்க, ’ஆமா, நாங்க அப்படித்தான்’ என்கிறார் போல, தாவி லூஸுப்பையனிடம் போய்விடுவேன் (லூஸூப்பையனின் எழுத்துகள் இப்போதெல்லாம் சிரிப்பை வரவழைப்பதற்கு பதில் கடுப்புகளை கிளப்புவது தனி ஸ்டேடஸ் ;) ) ஆனால் போன வாரமோ, அதற்கு முந்தைய வாரமோ என நினைவு. இரவு சாப்பாட்டிற்குத் தொட்டுக் கொள்ள, 'பேசாத பேச்சு'தான் கிட்டியது. அதில் இரண்டு பெண்களைக் கட்டிக் கொடுத்துவிட்டு, அதன்பின், ராஜ வாழ்க்கை வாழும் ஒரு ஜோடியைப் பற்றி எழுதியிருந்தார். ”பொண்ணுங்களுக்கு கல்யாணம் கட்டிக் கொடுத்தாச்சு பேரன் பேத்திய எடுத்தாச்சு, அதென்ன இன்னமும் தோளும் தோளும் இடிச்சிகிட்டு, கை கோர்த்துக்கிட்டு சோடியா சுத்தறது ” என்கிற ரீதியிலான நம் சமூகத்தின் ஆயிரம் வருட டெம்ப்ளேட் வசனங்கள் கொண்டு குதறிய பின்னரும், அந்த இணை அடங்குவதாயில்லை, சமூகம் அடக்க முடியாததை காலன் அடக்கி விடுகிறான் :( இறந்து கிடக்கும் கணவனின் தலைமாட்டில் இருந்துக் கொண்டு, சவத

ரத்தம் ஒரே நிறம் - சுஜாதா ( நாவல் மதிப்புரை)

படம்
ரத்தம் ஒரே நிறம் - சுஜாதா (உயிர்மை பதிப்பகம்)   வாத்தியாரின் எழுத்துக்கள் என்றுமே சலிப்பூட்டாதில்லையா..........ஆனால், மற்ற சில ஆளுமைகளின் எழுத்துக்களை தொடர்ந்து வாசித்த பின், சுஜாதாவின் வெகு எளிய நடையை மீண்டும் வாசிக்க நேர்கையில், அவர் மேலிருந்த பிரமிப்பு கொஞ்சம் சரிய ஆரம்பிக்கும், ஆனால் அதுதான் சுஜாதாவின் பலம். அவர் என்றுமே அறிவுஜீவி(!)களைத் திருப்திப் படுத்த நினைத்ததேயில்லை :)   சுஜாதாவின் ’ரத்தம் ஒரே நிறம்’ எனும் இந்த நாவல், அவருடைய ’க்ளாஸிக்’ வகையைச் சார்ந்தது எனலாம். 1857ல் நம் இந்தியாவின் ’முதல் விடுதலைப் போர்’ என அழைக்கபடும் ’சிப்பாய்க் கலகம்’ பின்னணியில், தனக்குக் கிட்டிய ஆதாரங்கள் மூலம், ஓர் அருமையான வரலாற்றுப் புதினத்தை நமக்கு கொடுத்திருக்கிறார்.   குமுதத்தில் 1982 - 1983களில் தொடர்கதையாக எழுதப்பட்ட நாவல் இது. இந்தத் தொடர்கதைகளை இப்படி நாவலாக வாசிக்கும்போது ஒரு சில நெருடல்கள் இருக்கத்தான் செய்யும். அப்பேற்பட்ட பொன்னியின் செல்வனே இறுதிப் பாகங்களில் என்னை வதைக்க ஆரம்பித்தது என்றால் நம்ப முடியுமா உங்களால் ? அதாவது வாரா வாரம் முடிக்கும்போது, வாசகர்களுக்கு ஏதாவது ஒரு சஸ்பென்

கடலோடி - நரசய்யா !!!

படம்
’கடலோடி’ வயதுக்கு வந்திருந்த வேளையில்தான் ’நரசய்யா’வை நான் ஜூ.வி. கட்டுரைகள் வாயிலாக முதன் முதலாக வாசிக்க நேர்ந்தது. அந்தக் கட்டுரைகளில் அவர், தான் வேலை செய்த பிரம்மாண்ட கப்பல்கள், கடலில் குட்டித் தீவுகளென அலையும் திமிங்கலங்கள், நெடிந்துயர்ந்த நீர்த்தூணாய் வானும் கடலும் கொள்ளும் கலவி.........இப்படி அவர் விவரிக்க விவரிக்க அப்படியே அந்தச் சாகஸங்களை கற்பனை செய்து, திளைத்துக் கிடந்திருக்கிறேன். பிறகு பல வருடங்கள் எனக்கும், ஜூவிக்குமான பிணைப்பு அறுபட, நரசய்யாவை அடியோடு மறந்தும் போயிருந்தேன்.   விகடன் கட்டுரைத் தொடரில், " நீங்கள் எழுத்தாளர்களென நம்புபவர்களெல்லோரையும் விட சிறந்தவர்கள் இவர்களென சாரு நிவேதிதா பட்டியலிட்டிருந்த எழுத்தாளர்களில்தான் மீண்டும் ’நரசய்யா’ என் கண்ணில் பட்டார். அதில் நரசய்யாவின் சிறந்த ஆக்கம் ’கடலோடி’ என்றும் சாரு பரிந்துரைத்திருந்தார்.   ஆனால் 2011 லிருந்து தேடி, இவ்வருடம்தான் புத்தக கண்காட்சியில் இந்த நூல் கிட்டியது. வாங்கி வழக்கம்போல் நரசய்யாவை புத்தகப் பைக்குள் சிறைவைத்து, ஜிப்பை இழுத்து மூடிவிட்டேன்.   தெரியாத்தனமாய் அலமாரியில் நெடுந