இடுகைகள்

செப்டம்பர், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வா வா வால்மார்ட் ........!

படம்
வால்மார்ட் வருகையால் திவாலாகப் போவது ரிலையன்ஸ் 'ப்ரஷ்' , நீல்கிரிஸ், மோர், பிக்பஜார், இன்னபிற பெரிய 'டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ்'  போன்ற ஜாம்பவான்களின் கடைகள் மட்டுமே.    பிறகெதற்கு சில்லறைக்கடை வியாபாரிகள் வாழ்வு  நாசமாகும், விவசாயிகள் அழிவார்கள்,  மக்கள் துயருருவார்கள் என்ற கூக்குரல்கள் ?   அது உண்மையா...........பார்ப்போமா ? வால்மார்ட் என்பது உலகத்தின் பெரிய டிபார்ட்மெண்டல் கடைகள் அமைக்கும் ஒரு நிறுவனம்.  கூகுள் சர்ச்சில் நீங்கள் தேடிய எல்லாமே ஏறக்குறைய கிட்டிவிடுமல்லவா ?  அதுபோல, இந்தக் கடையில் உங்களுக்கு வேண்டுவன உலகில் எந்த மூலையில் இருந்தும் கொண்டுவந்து கொடுக்கப்படும்.  எத்தனை கார்கள், எத்தனை பைக்குகள் வேண்டுமானாலும் நிறுத்திக் கொள்ள பார்க்கிங் வசதி இந்தக் கடையில் இருக்கும்.  பொருட்களை நீங்கள் கிஞ்சித்தும் சுமக்காமல், கேட்டதை உங்கள் காலடியில் வந்து கொட்ட பணியாட்கள் டை கோட்டுடன் வலம் வருவர்.  எல்லாக் கார்டுகளும் ஏற்கப்படும்.  வங்கி உத்திரவாதம் கொடுத்தால் உங்களுக்கு கடனும் கொடுக்கப்படும்.  டோர் டெலிவரி கிட்டும்.  ஆரம்பக் கால சலுகை பண்டிகைகாலச் சலுகை, ரெ

கப்பலோட்டிய தமிழன்

படம்
இன்று கப்பலோட்டிய தமிழன் பிறந்தநாள்.  இவரைப் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது.  எனினும், இவரைப் போன்ற நிஜக் கதாநாயகர்களைப் பற்றி, பேசிக் கொண்டே இருக்க வேண்டும்.  ஒன்றிரண்டு தெரியாதவர்கள் கூட அறிந்துதான்  ஆக வேண்டும் என்பதற்காக இந்த மிகச் சுருக்கமான பதிவு.  (பிறந்தநாள் அன்றாவது நினைக்கிறார்களே என்று அந்த ஆத்மா நிம்மதியாய் உலவட்டும்) பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதிகளிலும், இருபதாம் நூற்றாண்டு ஆரம்பங்களிலும்தான், நம் நாட்டில் சுதந்திர வேட்கை வீறு கொண்டது.  விடுதலைப் போரில், கோபாலகிருஷ்ண கோகுலே, பாலகங்காதர திலக், போன்ற முன்னோடி வீரர்களின் போட்ட,  பலமான அஸ்திவாரத்தில், மோகன்தாஸ், ஜவஹர்லால், பாரதியார், நேதாஜி போன்றோர் வீரமான கட்டிடத்தை எழுப்பினார்கள். மகாத்மா, வெள்ளையனுக்கு எதிரான போரில்,  தன்னுடைய புதுப் புது அஸ்திரங்களை எய்துக் கொண்டே இருந்தார்.  அதில் ஒரு சிறந்த  அஸ்திரம்தான் சுதேசிக் கொள்கை.  அது சரி, சுதேசி என்றால் என்ன ?  சுதேசி = சுய தேஷ் = சொந்தநாடு அவ்வளவுதான். வெள்ளையன், நம்முடைய பாரம்பரிய பயிர் முறைகளை பயிரிட, விவசாயிகளிடம் தவிர்க்கச் சொன்னான்.  மறுத்தவர்களை மிரட்டினான்