இடுகைகள்

ஜூன், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எக்சிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும்- CHARU NIVEDITA

படம்
சாருவின் இந்த முதல் நாவல், இலக்கியத் தாகமும், புதுமை விரும்பிகளுக்கும் மிகப் பிடித்த ஒன்று. ஒரு தலைமுறைக்கு அப்பாலும் இந்த நாவல் தொடர்ந்து இதுப் போன்ற ஆட்களால் மட்டுமே சிலாகிக்கப்படக் காரணம், சாருவின் 'எழுத்து நடை' (கமா, முற்றுப்புள்ளிகள் இல்லாமல் நீளும் இரண்டு பக்கப் பத்திகள்) மற்றும் வெளிப்படையான 'கதாபாத்திர நிகழ்வுகள்'. . அதேசமயத்தில் என்னைப் போன்ற 'அறம்சார்ந்த' மற்றும் 'பல்ப்' வகை நாவல் வாசிப்பாளர்களுக்கு 'அவைகளே' படிக்கமுடியாமலும், படித்ததை ஜீரணிக்க முடியாமலும், அளவுமீறி மானை விழுங்கிய மலைப்பாம்பைப் போல், தவித்துக்கிடக்க வைத்தன. சாருவுடனான சந்திப்பின் போது இதுபற்றி விவாதித்து விட வேண்டும் என்ற தீர்க்கமான முடிவுகளும், அவரை நேரில் கண்டபின் கிணற்றில் வீசிய கல்லாய் காணாமல் போவது வாடிக்கை ஆனது. சிறுமலையில் வீசிய குளிகாற்று எனக்குச் சாதகமாய் வீசிய அதிர்ஷ்டக் காற்று. 'ஜீரோ டிகிரி' பற்றி பிரவீன் கேட்ட ஒரு கேள்விக்கு பதிலுரைக்க ஆரம்பித்தவர் எதேச்சையாக ஒரு கருத்தைப் பகிர்ந்தார். // நீங்கள் 'வாழ்க்கையில் ஒரு முறையாவது நாகூருக்குச்

கயாஸ் தியரியும், நானும், உடன் கொஞ்சம் மழையும் !

பட்டாம்பூச்சி விளைவை அனுபவித்திருக்கிறீர்களா ? தலையில் கொம்புகள் முளைத்த கிங்கரன் ஒருவன், சாட்டையால் இருவரைக் கண்டபடி விளாசிக் கொண்டிருந்தான்.  அருகில் சென்ற என்னை நோக்கி, "கொஞ்சமாய் மாரி பொழிந்தால் போதும், ஒருவன் கவி புனைய தொடங்கிவிடுகிறான், மற்றவனோ கட்டுரையை ஆரம்பித்துவிடுகிறான், அதனால்தான் இந்தக் கசையடி,   நீ.....?"  "நான் கதை எழுதப்போகிறேன்" என்று சொல்லிவிட்டுத் தலைதெறிக்க ஓடுகிறேன், "பிடி, பிடி"...என்றவாறு பல கிங்கரர்கள் துரத்த, அதை டிவியில் பார்த்து, பாலகணேசனும், விஜய்யும், ப்ரவீணும் கை கொட்டிச் சிரிக்கிறார்கள்.  திடுக்கிட்டு கண்விழித்தேன், 'இதென்ன கோரமான ஒரு கனவு ?'  மதியத் தூக்கத்தில் வந்த இந்தக் கனவு பலித்து கிலித்து விடக்கூடாது என்று கடவுளை வேண்டிக் கொண்டு, வண்டியை எடுத்து கலெக்சன் வேலையைப் பார்க்கக் கிளம்பினேன். சில கிலோமீட்டர் சென்றிருப்பேன், திடீரென ரோட்டில் கருமை அப்பியது.  என்னடா இது என்று தலை உயர்த்தி பார்க்கிறேன், ஒரு ராட்சஷ கார்மேகம் வானத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருந்தது.  குளிர் காற்று லேசே வீச ஆரம்பித்ததும் உடன் சார