இடுகைகள்

ஏப்ரல், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இதெல்லாம் ஒரு பெருமையா பாஸ் ?

ஐயா/அம்மா, நீங்கள் கொங்கு வேளாளரா ?  வீர வன்னியரா ? மறவரா....கள்ளரா.....செங்குந்த முதலியாரா, பிள்ளைமாரா.....நாடாரா........நாயக்கரா....விட்டுப்போன பிற ஒசந்த சாதியினரா ?  உங்களுக்காக மட்டுமே இப்பதிவு. முதலிலேயே ஒப்புக்கொள்கிறேன் எனக்கும் சாதி அடையாளம், அதனால் கிடைக்கும் சலுகைகள் எல்லாம் உண்டு.  ஆனால், ஒரு போதும் எனக்கு கீழான சாதியையோ, மேலான சாதியையோ.......(இந்த வாக்கியத்தையே வெறுக்கிறேன்) ஏகத்துக்கும் புகழவோ / தூற்றவோ தோன்றியதேயில்லை. காந்தியின் அன்புக்குரியவராக இருந்த 'பெரியார்’ ஒரே  ஒரு கொள்கைக்காக காந்தியை பெரிதும் எதிர்த்தார்.  அது என்னவென்றால், 'ஆதிக்கச் சாதியினரின் அடாவடிகளில் இருந்து அப்பாவிகளை மீட்டுவிட்டு பிறகு வெள்ளையனை விரட்டலாம்,  முதலில் இங்கு வேண்டியது சமூக விடுதலை' என்றார்.  ஆனால் மகாத்மா, 'முதலில் நாடு நமதாகட்டும், நமது ஆனபின்னர் எல்லோரும் சமமென அறிவிக்கலாம்' என்றார்.  இருவருக்கும் நோக்கம் விடுதலைக்காக இருந்தது. (நன்றி -தமிழ்மகன்) உன்னுடன் வாழும் சக இனத்தவனையே கொஞ்சமும் கூசாமல், 'நீ எனக்குத் தாழ்ந்தவன், அடங்கிக் கிட' என்று இனத் துவேஷ

ஓ......மழைக் கவிதை ! (தெறிச்சி ஓடுங்க)

வேதாளத்தின் கண்ணின் ஓரமாய் கசிந்து விழ  கண்ணீர்த்துளி ஒன்று தயாராய் இருந்தது.  ஆனால் சோகத்தை வெளியே காட்டினால், 'அவளையே இன்னும் நினைத்துக் கொண்டிருப்பதாய்' தன்மானத்துக்கு இழுக்கு வருமே என அஞ்சி, அந்தக் கண்ணீர் வெள்ளத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தது. காதலியின் திருமணத்திற்குச் சென்று வாழ்த்துவதை விடவா வேறொரு கொடுஞ்சாபம் வேண்டும் ?  வாசலில் நிறைய வாண்டு வேதாளங்கள் இருந்தன.  ஒரு வாண்டு விடாப்பிடியாய் நம் வேதாளத்தின் வெந்தபுண் மீது பன்னீரைத் தூவிக் கொண்டே இருந்தது. 'போதுண்டா கண்ணு, இன்னும் நிறைய கெஸ்ட்களுக்கு வேணுமில்லையா, எனக்கேவா எல்லாத்தையும் தெளிக்கறது ?'  என்று வேதாளம் பணிவாய் போதித்தது.  ம்ஹும், 'விடாது வாண்டு' என்பதுபோல் தொடர்ந்து பன்னீரைத் தெளித்தது அந்த வாண்டு.  வேதாளம் மண்டபத்துக்குள் நுழைந்த பின்னரும் அந்த வாண்டு வேதாளம், ஒரு நாற்காலியின் மீதேறி, நம்ம வேதாளத்தின் முகத்தில் பன்னீரைப் பீய்ச்சியது.  வந்தது பாருங்கள் கோபம்.......'அடிங்.........' என்று ஓங்கி அந்த வாண்டு முதுகில் அறைந்த மாத்திரத்தில், 'ஆஆ' என அலறியது நம்ம வேதாளம்.

அமாவாசை மட்டும்தானா இல்லையே !!!

படம்
இதை சாரு வட்டத்தில் பதிவிடுவதற்க்காக  எழுதினேன்.   சரியாய் அந்த நேரம் பார்த்து, சாருவின் மிக விரக்தியான ஒரு பதிவு வந்தது.  வெந்த புண்ணில் வெந்நீரை ஊற்றுவானேன் என முதலில் பதிந்துவிட்டு, பிறகு நீக்கிவிட்டேன். ‘அங்காடித் தெரு’ பட விமர்சனத்துக்கு, சாரு சூட்டிய அற்புதத் தலைப்பு ‘அள்ளிப் பூசிய அமாவாசை இரவு’  இதன் அர்த்தம், படத்தில் வரும் தொடர் சோகம்.  மேலும், படத்தில் எங்கே நம்பிக்கை கீற்று ? என்று சாரு கேட்டிருப்பார் ! எனக்கு அது நிறைய ஆச்சர்யத்தைக் கொடுத்தது. ஏனெனில் படம் நெடுகவே கீற்றும், கருமையும் தொடர்ந் து பகலும், இரவும் போல வந்து கொண்டேதானிருக்கும். உதாரணத்திற்கு :- அப்பா இறந்த சோகம் ஒரு புறமிருக்க, வேலைக்கு செலக்ட் ஆகும் நாயகன், 'பெரிய கடை, அதனால் ஏக வசதியிருக்கும்' என நம்பி வருவான் = கீற்று ஆனால், அடாவடிகளும், மிகக் கடுமையான சட்டதிட்டங்களும், வசதிகள் குறைந்த கடை அமைப்பும், பார்த்து ஏமாறுவான் = அமாவாசை அதே கடையில் துடுக்கு நாயகியின் காதல் அவனுக்கு ஆறுதலாகக் கிட்டுகிறது = கீற்று கொடுமைக்கார புறநகர் வீட்டில் வேலை செய்யும், ’ருது’வான தங்கைக்கு, என்ன சடங

அடிமையாகாதே !!!

பாலகுமாரன் ஏதோ ஒரு நாவலில் சொல்லியிருந்தார்.  'எதற்குமே அடிமையாகித் தொலையாதே' என்று.  அவர் சொல்ல வந்ததன் முக்கிய நோக்கமே, 'கெட்ட' பழக்கத்துக்கு மட்டுமல்ல, 'நல்ல' பழக்கத்துக்கு கூட அடிமையாகி விடக் கூடாது என்று.  இதென்னடா, கேகூத் தனமா ஓர் அறிவுரை ?  என்று கோபிக்காமல் தொடருங்கள்.     மனிதன் தீய பழக்கத்துக்குதான் எளிதில் அடிமையாகிப் போவான், அதனால் எல்லாவற்றையும் இழப்பான் என்றுதானே நம்புகிறீர்கள் ?  நல்ல பழக்கத்துக்கு அடிமையாவது என்பது 'பிடிவாதம்' தானே ?  தன்னுடைய வறட்டுப் பிடிவாதத்தால், தன் சுற்றத்தை, ரத்த உறவுகளை, நண்பர்களை இழந்தவர்கள் எத்தனையோ கோடிகள் உண்டு.  நண்பர் ஒருவருக்கு குளித்தால்தான் சாப்பிடுவது என்ற ஒரு 'நல்ல' பழக்கமுண்டு.  எதிர்பாராமல் ஒரு விடியற்காலையில் அவர் வீட்டருகில் நெருங்கிய உறவினர் இறந்துபோனார்.  சொந்தங்களுக்கு உதவ உடனடியாக சென்று விட்டார்.  சாவுக்கு வந்த சொந்தங்கள் அவர் செய்த பணிகளைப் பாராட்டி, ஒரு பரிவுடன் அவரை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றனர்.  அன்னார் அன்று அந்த சாவு நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஒரேயடியாய் மாலை குளித்துக் கொள

என் அடியாளுக்கு குவார்ட்டரும் வேணாம், கோழி பிரியாணியும் வேணாம், ஒரு சொட்டு சூடா ரத்தம் போதும் !!!

படம்
இது நிஜமாகவும் இருக்கலாம், திகில் புனைவாகவும் இருக்கலாம் !  (இதில் வரும் நம்பகத்தன்மைக்கு நான் பொறுப்பல்ல) மாநகராட்சியால் ஒரு பிறப்புச் சான்றிதழ் வாங்க வேண்டிவந்தது.  எந்தவித சான்றுகள் இல்லாத 'மிகப் பழங்காலத்து' ஆளுக்கான சான்றிதழ். இதுபோன்ற வேலைகளை எல்லாம் அரசு இயந்திரம் என்ன நவீனமயமானாலும் நீங்கள் தனியாய் போயெல்லாம் உடனடியாக வாங்கி விட முடியாது.  நான் ஓரிரு நாள் அலைந்துப் பார்த்தேன்.  அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்றே என்னால் ஒரு சதவிகிதம் கூட கிரகிக்க முடியவில்லை.  சரி, இனி வேலைக்காவாது என்று இதில் அனுபவமிக்க என் நண்பர் ஒருவரின் உதவியை நாடினேன்.  அவர் இதற்கு சரியான ஆள் 'இவர்தான்' என்று ஒரு நபரை அறிமுகப்படுத்தினார்.   அந்த நபரே இந்தப் பதிவின் கதாநாயகன் !!! அவர், சென்னை மாநகராட்சியின் முன்னாள் ஊழியர். சமீபத்தில் ரிட்டயர்ட் ஆனவர்.  கை சுத்தமான ஆள் என அவரே சொன்னார்.  தான் மாநகராட்சியில் கொசு ஒழிப்பு பிரிவில் தலைமைப் பொறுப்பில் இருத்ததாய்ச் சொன்னார்.  சரி, இருங்க அவரையே பேச வைப்போம்.  "சக ஊழியர்களில், லஞ்சம் வாங்குபவர்களைக் கண்டால் கோபம் வரும், அவர்கள

வேதாளமும் வெள்ளிக்கிழமையும் !!!

படம்
இன்று வெள்ளிக்கிழமை என்பதால் விக்கிரமாதித்தன் தண்ணீர் லாரி வேகத்தில், அண்ணா சாலையில் தன் பைக்கை செலுத்திக் கொண்டிருந்தான்.  பெவ்லியனிiல் அமர்ந்திருந்த வேதாளம் வழக்கம்போல் எள்ளி நகைத்தது. "ஓசில வந்தாலும் இந்த நக்கல் மசிருக்கு ஒன்னும் கொறச்சலில்ல" என்று எரிச்சலோடு சொன்னான் விக்கி.  "வேறொன்னுமில்ல, கடந்து வந்த பாதை தெரியாம, இம்புட்டு வேகமா   போறியே.......வீட்டுக்கு திரும்பனும்னு எண்ணமில்லையோ ?" "ங்".........என்று ஏதோ ஆரம்பித்த விக்கி, அவசரமாய் நாக்கைக் கடித்துக் கொண்டபடி, "எதாவது அசிங்கமா பேச வச்சிடாத, இப்ப நீயா எனக்கு ரூட் சொன்ன ?  நானாத்தான போறேன் ?  அப்புறமென்ன கடந்து வந்த பாத தெரியாமன்னு நொட்ட சொல்ற ?" "சினம் குறை குழந்தாய்...........வேகம் விவேகமில்லை என்பதற்காகச் சொன்னேன், சில வருடங்களுக்கு முன்னால் இதே வண்டியை ஓட்டக் கற்றுக் கொள்ளும்போது, இவ்வளவு வேகமாகவா ஓட்டினாய் ?" "கொழந்தயா இருக்கறப்போ தவழவே கஷ்டப்பட்டேன், அப்புறமா வேகமா நடக்கறப்போ.........பழச நின.......... தவழுன்னு சொல்லுவ போலிருக்கே" 'என்ன இவன் இன்று

பொறுத்தருள்க !!!

மனிதன், தோல்வியையோ/துரோகத்தையோ/ ஏமாற்றத்தையோ, சந்திக்காதவரை நல்லவனாகத்தான் இருக்கிறான்.  அறத்தையே கூறுகிறான்,  சொல்வதையே செய்கிறான். எதிர்பாராத வேளையில் வரும் 'துன்பம்' அவனை முடக்க முயல்கிறது.  'வருமுன் காப்பவன்தானே அறிவாளி' எனும் வினாவையே கூட முட்டாளாக்கும் துன்பங்களுமுண்டு,  அது அவனை மேலும் பிதற்ற விடாமல் தலையில் குட்டி, அமர வைக்கிறது. ஆடும் எவருமே அடங்கத்தான் வேண்டுமெனினும், அடங்கலைப் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் ஆடும் கர்விகளை, இத்தகைய தற்காலிக 'இன்னல்கள்' ஆட்சி செய்து, 'மாதிரி' அடங்கலை உணரச்செய்து விடுகிறது. 'இதும் போம்' என்று பல்லைக் கடித்து வலி தாங்கலாம்தான், ஆனால் அது இன்னும் பிதற்றலைக் கூட்டி சத்தத்தை அதிகரித்துவிடும்.  அப்படி மட்டும் ஆகிவிட்டால், அடுத்த 'அடி' சற்று பலமாய் விழக்கூடும். இன்னல் பருகிய மாத்திரத்தில் இதை உள்வாங்கி விட்டால், உளறல்கள் குறைந்து, நிதானக் காற்று மெல்லியதாய் வீசும்.  இனி பிதற்றல்களைக் குறைத்துக் கொண்டு, மென்மையாய் மட்டுமே தவழ விரும்புவேன், பொறுத்தருள்க :))

கணைகள் !!

என்னவளுக்கு  கண்களிரண்டு கண்களிரண்டுமே கணைகள்தானெனினும் கணைகளிரண்டு ! இரண்டுமிரண்டும்  நான்கு இடையில் சிக்கிக் கொண்டேன் நன்கு மீள்வேனோ மாள்வேனோ ?