இடுகைகள்

ஏப்ரல், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நூறு விழுக்காடு வாக்குப்பதிவாகுமா ?

படம்
100 விழுக்காடு வாக்குபதிவு எனில் நீங்கள் மகிழ்ச்சிதானே அடைவீர்கள் ?  ஆனால் அப்படி ஒரு முழுப்பதிவு நடந்ததென அறிந்தால், அடுத்த நிமிடமே அத் தேர்தலை, தேர்தல் ஆணையம் ரத்து செய்து விடும், ஏன் ? ஏனெனில் 100 விழுக்காடு வாக்குப்பதிவு சாத்தியமேயில்லை. ஒரு தொகுதி, அது சிறியதாயிருக்கட்டும், பெரியதாயிருக்கட்டும், ராணுவப்பணியாளர்கள், காவல் துறையினர், தீயணைப்பு வீரர்கள், மருத்துவத் துறையினர், ரயில்வே, சாலைப் போக்குவரத்து, இன்ன பிற அத்தியாவசியப் பணியிலிருப்பவர்கள் வாக்களிக்க முடியாது. தபால் வாக்குகள் எல்லோருக்குமே சாத்தியமா என்பதில் சந்தேகமுள்ளது.  இவர்கள் சில விழுக்காடு........ என் பக்கத்து வீட்டில் ஒரு முதிய தம்பதி. அவர்களுக்கு தங்கள் வாக்குகளைச் செலுத்த அளப்பரிய ஆசை.  ஆனால் வாக்குச்சாவடி சென்று  வரிசையில் நின்று வாக்களிக்கும் அளவிற்கு அவர்களிருவருக்கும் கால்களில் சிறிது கூடச் சக்தியில்லை. சரி வாருங்கள் என் வண்டியில் போய் வரலாம் என அழைத்தேன்.  ம்ஹூம், வண்டியில் ஏறி இறங்குமளவு கூட முழங்கால்கள் ஒத்துழைக்காது என மறுத்துவிட்டனர்.  வீட்டருகேயே எல்லாமும் கிடைத்துவிடுவதால் எங்கும்  நெடுந்தொலைவ

தீர்ப்புகள் திருத்தப்படலாம் !

படம்
நான் எதிர்பார்த்திருந்தது வேறு ! ”இந்திய அரசியலமைபுச் சட்டங்களின்படி, நடுவண் அரசால் நடத்தப்படும் அரிய அல்லது தேச பாதுகாப்புச் சம்பந்தப்பட்ட வழக்குகளில் ஒரு மாநில அரசு தன்னிச்சையாக குற்றவாளிகளை( நடுவண் அரசை மீறி) விடுவிக்கக் கூடாது” இப்படித்தான் இன்று சதாசிவம் தலைமையிலான அமர்வு தீர்ப்பு தரும் என்பது என் எதிர்பார்ப்பு. ஆனால், ஓர் உச்சமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கொடுத்த தீர்ப்பிலிருக்கும் சர்ச்சையை, மேற்கொண்டும் ’வேறு ஓர் அமர்வு விசாரிக்கும்’ என்றதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதில் சிலர், ‘சட்டப் புரட்சியை விதைக்கிறோம் பேர்வழி’ என தான்தோன்றித்தனமாய் செயல்பட்டு விட்டார்களோ என அறச்சீற்றமும் எழுகிறது.  அதில் முக்கியமான இருவர், சதாசிவமும், ஜெயலலிதாவும் :( தேசிய பாதுகாப்புச் சம்பந்தப்பட்ட ஓர் அரிய வழக்கில், குற்றவாளிகளை(சரி, சரி, குற்றம் சாட்டப்பட்ட நிரபராதிகளை.....) மாநில அரசு தன்னிச்சையாய் விடுதலை செய்யலாம் என தீர்ப்பளித்தது எதிர்காலத்தில் எவ்வளவு சட்டச் சிக்கல்களைத் தரும் ?  இதையெப்படி உச்ச நீதிமன்ற தலைமை  நீதியரசர் சிந்திக்காமல் போயிருப்பார் ? ஒரு விபரீதக் க