இடுகைகள்

டிசம்பர், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நான் கள்வனோ ? சிறுகதை

நான் கள்வனோ ? ================   சிறுகதை - ராஜா ராஜேந்திரன்     மிகவும் பிஸியாக இருந்த அந்த ஆந்திர வங்கி ஊழியர், என் செக்கை வாங்கி, தன் முன்னிருந்த கணினியில் ஏதோ தட்டிப் பார்த்துவிட்டு, "ஒனக்கு இனி அடுத்த மாசம்தான் பணம்" என்று செக்கை வேண்டாத விருந்தாளி போல விருட்டென்று என் பக்கம் தள்ளி விட்டார்.   "ஏன் சார், பத்து நாளா பணம் எதுவுமே ட்ரா பண்ணலையே ?’   "அதெல்லாம் மேனேஜரப் பாத்து பேசிக்க"   அடே கொல்** கூ மவனே ஒனக்கு தமிழ் அரைகுறைன்றதால இந்த மரியாதைக் குறைவ எல்லாம் தாங்கிக்க வேண்டிக் கிடக்கேன்னு மனசுக்குள்ள அவனத் திட்டிக்கிட்டே மேலாளர் அறை நோக்கிப் போனேன்.   மேலாளர் கேஷியரைக் காட்டிலும் பிஸியாக இருந்தார். அவரைச் சுற்றி ஏழெட்டு பேர் நின்றுக் கொண்டிருந்தார்கள்.   அரைமணி நேரம் கழித்து என்னைப் பார்த்தவர், ’யெஸ்’ என்றார்.   "சார், பணம் அடுத்த மாசம்ங்கிறாங்க சார், நான் பணம் எடுத்து பத்து நாளுக்கு மேல ஆச்சு, பாஸ் புக்க பாருங்க" என்று பாஸ்