இடுகைகள்

ஆகஸ்ட், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நான் உளறிக்கொண்டே இருப்பேன் !!!

படம்
சுடச்சுட மட்டன் பிரியாணியும், உடன் கத்தரிக்காய் மற்றும் வெங்காயப் பச்சடி, முடிவாய் சாப்பிட பிரட்ஹல்வா என்று, இன்றைய மதியத்தை சிறப்பாய் ஆக்கிய நண்பனைக் கட்டிபிடித்து வாழ்த்துக்களை பரிமாறிவிட்டு, அப்படியே குட்டித்தூக்கம் போட்டிருந்தால் நிச்சயம் நிம்மதியாய் இருந்திருப்பேன், ஆனால் நம்ம அரசியல்வாதி லகுடபாண்டிகள் எப்போது நம்மைச் சுகமாக உலவ விட்டிருக்கிறார்கள் ? 'கொஞ்சமாய்த் திருடிக் கொள்ளுங்கள் என்று இருக்கிற ஓரிரு நல்ல அதிகாரிகளையும் லஞ்சம் வாங்க ஊக்குவித்த ஒன்று..... 'தீர்ப்பை விலை கொடுத்து வாங்கலாம்' என்று பணக்காரத் திருடர்களுக்கு நம்பிக்கை ஊட்டிய மற்றொன்று..... இதெல்லாம் ஓல்டு நியூசாச்சா,  இன்னிக்கு ஒன்னு ரம்ஜான் ஸ்பெஷலா உளறிருக்கு,  உளறின நாயகர் பெயர் 'பேனி பிரசாத் வர்மா' அவர் உதிர்த்த முத்துக்கள் 'விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்து அதனால் அவர்கள் லாபம் அடைவார்கள் என்பதால் பணவீக்கம் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது' என்னங்க, இவர் விவசாயிங்க, நல்லாருக்கனும்னு ஆசப்படுறாரு, அவரப் போயி தப் சொல்றீங்களேன்னு யாராவது கேட்டீங்கன்னா, நீங்க, 'பணவீக்கம் என்றால்,

இந்தியச் சுதந்திரதினத்தை நான் ஏன் கொண்டாட வேண்டும் ?

படம்
நீங்கள் ஒரு இந்தியப் பெண்ணாயிருந்தால்.... நீங்கள் தாழ்த்தப்பட்டவராயிருந்தும், பிற்படுத்தப்பட்டவராயிருந்தும், ஆதிவாசியிருந்தும், ஏழையாயிருந்தும் படித்திருந்தால் .... ஆதிக்கச் சாதியில் பிறந்திருந்தால்.... இந்துவாயிருந்தால்..... இந்து அல்லாத வேற்று மதத்தினராய் இருந்தால்..... தமிழ் நாட்டில் வாழும் வேறு மாநிலத்தவராய்  இருந்தால்.... இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழும் தமிழனாய் இருந்தால்.... நாத்திகராய் இருந்தால்.... அரசியல்வாதியாய் இருந்தால்.... ஊழலை வெறுக்கும் கருத்துச்சுதந்திர வீரனாய் இருந்தால்.... ரொம்ப இழுத்தாச்சு, நீங்க இந்தியனா இருந்தா, ஏன் இந்தியாவுல இருக்கிற அன்னியனா இருந்தாலும் சரி, இந்தியச்  சுதந்திர தினத்தை  நீங்கள் மிகு உற்சாகமாக  கொண்டாடியே ஆகவேண்டும்.  முடியாது, இந்தக் கொண்டாட்டத்தை மறுக்கும் சுதந்திரம் எனக்குள்ளது என்று நீங்கள் கொதித்தால் அது, கொண்டாடும் நாங்களோ, அல்லது என் தாய்நாடோ உங்களுக்குப் போட்ட பிச்சை.  பிச்சைக்காரர்களையும் வெறுக்காத தேசம் எங்களுடையது. அதனால்தான் தொழுமிட வாசல்கள் எங்கும் அவர்களை விட்டுவைத்துள்ளோம்.   ஆனால் 

உத்தம எழுத்தாளனாக ஆவது எப்படி ?

தனிக் குடித்தன மனைவி பேறுகாலத்தில் பிரியும் போதுதான், சில விரும்பக்கூடிய, பலர் வெறுக்கக் கூடிய, விபத்துகள் நடந்து விடுகின்றன,  எனக்கு நிகழ்ந்ததா இல்லையா என்பது,  என்னை விட உங்களுக்குத்தான் முதலில் தெரியப்போகிறது.  இருங்கள், மிருதுளா உள்ளே நுழைகிறாள், நீங்கள் கொஞ்சம் அப்புறமாய் வாருங்கள். "இந்தாங்க டின்னர், நீங்க கேட்டா மாதிரி சிம்பிளா எடுத்துட்டு வந்திருக்கேன்" மிருதுளாவின் குரல் பெயருக்கு ஏற்றார் போல மிருதுவாகவெல்லாம் இல்லை, லேசாய் நம்ம அங்காடித் தெரு அஞ்சலி போலத்தான் இருக்கும், ஆனால் என்னுடன் பேசும்போது மட்டும் அவள் குரலில் கொஞ்சம் தேனைக் குழைத்துப் பேசுவாளா......அடடா அந்த கிக் எந்த சரக்கிலுமே கிடைக்காது.  மரபுப்படி இங்க மிருதுளாவை வர்ணிக்கணும், ஆனா குரலிலேயே இவ்வளவு போதை இருக்கிறப்போ, அதெதுக்கு வெட்டியா ?  உங்களுக்குப் புடிச்ச செம கட்டைய கற்பனை பண்ணிக்குங்க, அதுசரி, உங்களைத்தான் அப்பவே போகச் சொல்லிட்டேனே ? "யேய், நான் வேணாம்னுதாம்பா சொன்னேன், சாப்டுட்டேனே" என்றேன்.  இப்படி சீண்டினால்தான்  அவள் முறைக்கும் சாக்கில் தலையை சாய்த்து ஒரு பார்வை பார்ப்பாள், அந்த அழ