இடுகைகள்

பிப்ரவரி, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பெரியாரை ஏன் புறக்கணித்தீர்கள் இந்தியப் பெண்களே ???

படம்
பெரும்பாலான இந்தியப் பெண்கள் பெரியாரை, மத வெறுப்பாளரென்று புறக்கணித்ததின் பின்விளைவுதான், இன்னமும் என்னைப் போன்றவர்களெல்லாம் பெண்ணின ஆதவாளர் என வேடம் தரிக்க வைக்கிறது. உண்மையில், பெண்கள் விடுதலை சார்பாக ஆண்கள் குரல் கொடுப்பதை பெரியார் பெரிதும் பகடி செய்கிறார். அது :- எலிகளுக்கு பூனை ஆதரவு தெரிவிப்பதைப் போல கோழிகளுக்கு நரிகள் பச்சாதாபம் கொள்வதைப் போல ஆடுகளுக்கு ஓநாய்கள் அழுவைதைப் போல....என்கிறார். ஆமாம், பெண் விடுதலை ஏன், எதற்கு, என்ன என்பதை பெண்கள்தான் முன்னெடுத்துக் கேட்டுப் பெற வேண்டும், மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால், பழம் பொன்மொழிகளின் பெயரால் அதைத் தடுக்க முயல்பவர்களை, பெருஞ் சீற்றம் கொண்டெழுந்து முடக்க வேண்டும்.  அப்படிக் கிட்டும் விடுதலையே, வெற்றியே நிரந்தரமானது. அன்றி, ஆண்கள் உங்களுக்காகப் பரிந்துப் பேசி பெற்றுத்தரும் சலுகைகளானது தற்காலிகமானது, உங்களை கற்பின் பெயரால் அடிமைப்படுத்த நினைக்கும் ஆண்களின் பசுத்தோல் போர்த்திய புலி வேடமது !  (இக்கால ஆண்கள் இதை வாசித்துக் கோபம் கொள்ள வேண்டாம், 20ம் நூற்றாண்டுகளின் ஆரம்பத்தில், பெரியார் மதத்தின் பெயரால்(குறிப்பாக இந்த

கற்பு !!!

கற்பென்பது !!! ======== ஒழுக்கம்தான் கற்பென்கையில் ஒழுக்கத்தை சிதைத்து குதறிக் கடித்தோடும் வெறிநாய்கள் கற்பழித்துவிட்டோம் கற்பழித்துவிட்டோமென ஓலமிட்டபடி சென்றால் அழிந்தது கற்புதான் யாருடையது என்பதுதானே பிரதானக் கேள்வி ? தன்னொழுக்கம் மீறி வன்கலவி புரிந்தவனை ஒழுக்கமழித்தவன் என்றழையுங்கள் கற்பழிப்பெனும் வார்த்தையை இனியும் பெண்ணிற்குரியதென்றே சொல்வீர்களேயானால் நீவீரும் கற்பிழந்தவராகவே கடவது !

சிற்றின்பப் பாடல் # 1

புதுப் பொண்ணு ================= வெட்கித் திரும்பியவளின் குறுக்கிடை பற்றி குழலொதுக்கிவாறே ’என் கையருகே என் சொர்க்கம்’ இருக்கிறதென்றேன் ! குறும்புக்கரங்கள் முன்னேறுவதை கண்டு ’ச்சீ’ என்ற்வளிடம் ’என் கையில்தான் உன் சொர்க்கம்’ இருக்கிறதென்றேன் !

பெண்களுக்காக மதப் பற்றாளரும்/மறுப்பாளரும் !!!

படம்
பெண்களுக்கு ஆதரவான இரு நூல்கள்.  முதல் நூல், பெண்களை எப்படியெல்லாம் ஆண்கள், மதம் மற்றும் பழம் பொன்மொழிகள் மூலம், ’தன்னை விட தாழ்த்தி’ என நிறுவி, அவளினம் கொண்டே அவளைத் தொடர்ந்து அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்பதை விளக்கி, அவளை முழு விடுதலையை நோக்கிச் செல்லத் தூண்டுகிறது ! அடிமையாய் இருந்தாலும் அவளுக்கிருக்கும் சில உரிமைகளை எடுத்துச்சொல்லி, இறைவனின் பெயரால்/இறைத்தூதர் வகுத்த சட்டங்களறிந்து தெளிந்து சற்றே இன்புறு, என்பதை விளக்குகிறது இரண்டாவது நூல். ”பெண் ஏன் அடிமையானாள் ?’ பெரியார் ஈ.வெ.ராமசாமி 75 - 80 வருடங்களுக்கு முன்னர் பல கட்டூரைகளாக எழுதி, கி.பி.1942ல் தொகுக்கப்பட்டு முதல் பதிப்பாக வெளிவந்து பல பதிப்புகள் கண்ட, 80 பக்கங்கள் கூட இல்லாத வெறும் ரூ.25/- ல் கிடைக்கும் இந்தியப் பெண்களுக்கான பொக்கிஷம் இந்த நூலே நான் வாசித்துக் கொண்டிருக்கும் முதல் நூல் ! நீதி நூல்கள் என்பவைகள் எப்படிப்பட்ட பெரியோர்களால் எழுதப்பட்டவைகள் என்றாலும், அவை அக்கால நிலைகளையும், எழுதப்பட்ட கூட்டங்களின் சவுகரியங்களையும், அனுசரித்து எழுதப்பட்டதே ! மேலும் நீதியானது எக்காலத்தும் எல்லாத் தேசத்திற்க

முகமது பின் துக்ளக் !!!

படம்
நான் அர்விந்த் கெஜ்ரிவாலை, ஜோக்கர்/துக்ளக் என்றதற்கு பலரும் வருந்தினர்.  துக்ளக் நிச்சயம் ஜோக்கர்தான், ஆனால் தன் மக்கள் மீது அபரிமிதமான அன்பைக் காட்ட நினைத்த ஓர் அறிவுஜீவி.  அர்விந்தும் அதைத்தானே செய்கிறார் ?  அர்விந்த் கெஜ்ரிவாலைப் போலவே மெத்தப் படித்த மேதாவி முகமது பின் துக்ளக்.  சரி, துக்ளக் ஆட்சி/துக்ளக் தர்பாரென்றெல்லாம் பகடி செய்கிறோமே.......அது ஏன் ? சிறுவயதில் படித்த வரலாறு ஞாபகம் வருகிறதா நண்பர்களே ? கோரி முகமதுவின் அடிமைகளினால் துவங்கப்பட்டு டெல்லியை ஆண்ட அடிமைவம்சத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த கில்ஜி, துக்ளக் வம்சத்தில் வந்த அதிக புத்திசாலி அரசர் முகமது பின் துக்ளக்(துக்ளக் வம்சத்தில் திறமையானவர்) ’அதிக அறிவு என்பது கிட்டத்தட்ட முட்டாள்த்தனம்’ என்பதை நிருபித்தவர் துக்ளக்.  சீர்திருத்தங்கள் எனும் பெயரில் இவர் செய்த கலாட்டாக்களை வாசிக்கும் போது சிரிப்பு வரலாம்.  ஆனால் அது ஒரு கொடுமையான நிகழ்வுகள் :( காலம்காலமாய் இந்தியாவின் தலை நகரம் டெல்லி.  டெல்லி இமயமலைக்கருகில் இருப்பதால் கணவாயைக் கடக்கத் திறமையிருக்கும் அன்னிய படைகளால் அடிக்கடி தாக்கப்பட்டது.  இதைத் தடுக்க மாரடிப்பத

அம்பையின் அதிர்ச்சிக் கதை

மனத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டே இந்தப் பத்தியைத் தொடரவும், இல்லையேல் உங்களை அழவைத்த பாவத்திற்கு நான் ஆளாக நேரிடும் ! முதன் முதலாக, ‘அம்பை’யின் கதையை உயிர்மையில் வாசித்தேன்.  சிறுகதையல்ல நெடுங்கதை.  இலக்கியப் பத்திரிக்கைக்கேயுரிய தரத்தில் மெல்ல ஊர்ந்தது.  ஆனால் அழகான, எளிமையான எழுத்துக்கள். மகராஷ்ட்ரா ’தானே’ நகரிலிருந்து, மும்பை ’மத்’ தீவுக் கடற்கரைச் சுற்றுலாவிற்கு வந்த மூன்று இளம்பெண்கள் மாயமாகிறார்கள்.  முறையே 14, 12, 10 வயதுப் பெண்கள்.  அவர்களைக் காணாது அப்பனுக்கு(அப்பாவுக்கு எனப் போட்டிருக்கலாம், ஆனா......?) மயக்கம் வந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படுகிறான்.  கணவன் இருக்கும் நிலையில், தன் பெண் குழந்தைகள் கடத்தப்பட்டிருக்கலாம் எனப் பயந்து, குழம்பித் தனித்திருக்கும் தாய்(கையில் நான்கு வயது சிறுவன்) ஒரு தனியார் துப்பறியும் பெண்ணிடம் தங்கியிருக்க, அந்தக் கேஸை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியால் அனுப்பி வைக்கப்படுகிறார்.  அந்த டிடெக்டிவ் தம் பங்கிற்கு காவல்துறைக்கு அந்தச் சிறுமிகளைத் தேடுவதில் உதவி செய்கிறார். மூத்த பெண்ணிற்கு ரெண்டுங்கெட்டான் வயது என்பதால் காதல் கீதல் என

தேனீக்களின் துர் மரணம் :(

படம்
வழக்கம் போல, அலட்சிய மனோபாவத்துடன்தான்(இவிங்களுக்கு இதே வேலை ?)அந்தக் கட்டூரையை வாசிக்கத் தொடங்கினேன். அதிலும் உள் பத்தியில், ’தேனீக்கள், செல்ஃபோன் டவர்களாலும், நாம் குடித்துவிட்டு வீசியெறியும் டீ, காப்பி & கூல்ட்ரிங்க்ஸ் கப்புகளாலும்தான் அதிகம் இறக்கின்றன’ என வாசித்தவுடன், “டாய் என்னங்கடா ரீல் மேல ரீலா விடுறீங்க”ன்னு ஃபேஸ்புக்பாணி கமெண்ட் ஒன்றையும், வாய் தன்னிச்சையாய் உதிர்த்தது. ஆனால் மிச்சக் கட்டூரையையும் வாசித்தபின், யாரோ ஓங்கி தலையில் கொட்டிய வலியுணர்வை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். சிட்டுக்குருவிகள், செல்ஃபோன் டவர்கள் வெளியிடும் கதிரிவீச்சுக் காந்த அலைகளால் அருகிவிட்டது என்ற சேதியை, விஞ்ஞான வளர்ச்சியை ஆதரிக்கும் எம்போன்ற முற்போக்குவாதிகளால் நம்ப முடிவதில்லை.  யதார்த்தத்தில் எங்கள் பகுதியில் எங்கள் உறவினர்கள் போல வலம் வந்த அவைகளை இப்போது அரிதாகவே காண முடிகிறது என்கிற நிசத்தை ஏற்றுக்கொண்ட தருணம் கொஞ்சம் சுருக்கென்றது, எதேச்சையாக என் வீட்டருகே அமர்ந்திருந்த ஒரு சிட்டுக்குருவியை என் மகனிடம் காட்டி, அதன் குரலைக் கேட்கச் செய்து, அடுத்து அதை அங்கு பார்க்க முடியுமோ