இடுகைகள்

மார்ச், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காமரசக் கவிதைகள்

படம்
புளி ரசம், தக்காளி ரசம் தெரியும், அதென்னய்யா காமரசம், அது எப்படி இருக்கும் எனும் பாலகர்களுக்கு, "தம்பி இது அடல்ட்ஸ் ஒன்லி, பதினெட்டு பூர்த்தியானதுக்கு அப்புறமாத்தான் வாசிக்கணும், ஏன்னா நான் என்னோட இளமை ஊஞ்சல்ல வேகமா ஆடிட்டு  இருந்தப்போ  எழுதின  அசைவக் கவிதைகள் இவை" ஏப்ரல் ஒன்னு முட்டாள்கள் தினம் மட்டுமல்ல, இந்திய அரசு வரியை ஒழுங்காகச் செலுத்தும் தம்  வர்த்தக குடிமக்களை,  அன்றுதான் புது கணக்கு  ஆண்டை  தொடங்கச் சொல்கிறது,   அதற்காக  ஆயூதபூஜைக்கு  அப்புறமா  மீண்டுமொருமுறை  அலுவலகத்தை  சுத்தம்  செய்ய  ஆரம்பித்தேன்.   பீரோவைக் குடைந்து பழையன கழிப்போமென குப்பைகளை அள்ளி வெளியே கொட்ட எத்தனித்த போது,  மனைவிக்குப் பயந்து,  அலுவலக  பீரோ  லாக்கரில்  அடுக்கி வைத்திருந்த பழைய டைரிகள்  சரிந்து கீழே விழுந்தது,  ஒவ்வொன்றாய் புரட்டி  வாசிக்க ஆரம்பித்ததும்,  உற்சாகத்தில்  சரேலென்று வயது டீனேஜூக்குத் தாவிவிட்டது !   1997 டைரி,  ஒரு பக்கத்தில் கவிதைகள்,  வாசித்துவிட்டு  யார் எழுதியது  எனக்  கீழே பார்த்தால்,   'ராஜவாத்ஸாயனர்'  என்று போட்டிருந்தது.  யார் அந்த கவிஞர் ?

நடிப்பிலும் நாங்க ஆஸ்கர் வாங்கிடுவுமில்ல !

படம்
இது ஏதோ சினிமா கட்டூரை என்று நினைத்தால் ஏமாந்து போவீர்கள், இந்த விருதை நோக்கி பயணிப்பவர்கள் நம்ம தாய்நாட்டு அரசியல்வாதிகள் !  நம்ம நாட்டு நடிகர்கள் கூட ஓவர் ஆக்டிங்  செய்து  வருடாவருடம் சொதப்பிவிட, அரசியல் புலிகளோ, பால் வேறுபாடின்றி  மிகச்சிறப்புற திறமையாக நடித்து வருவதால், கூடியவிரைவில், நடிப்பிலும் நமக்கு ஆஸ்கர்  கிடைக்கும், கிடைத்தபின் ஆடுவோமே,  பள்ளுப்பாடுவோமே ! சரி, நம் அரசியல்வாதிகளில் யாராருக்கு இந்த ஆஸ்கர் கிடைக்க வாய்ப்புள்ளது ?  தி நாமினீஸ் ஆர் - மன்மோகன்ஜி, கருணாநிதிஜி, மம்தாஜி, ஜெயலலிதாஜி, ! முதலில் மன்மோகன்ஜி, இந்த ஜி, சோனியாஜியை  மீறி எதுவுமே  செய்வதில்லை.   1984 ல்  டெல்லியில்  தன் இனமக்களையே   துடிதுடிக்கக் கொன்ற கட்சியில் சுரணையற்று  சேர்ந்ததாலோ என்னமோ, கண்ணருகே இனஒழிப்பு நடந்துக் கொண்டிருக்க, ஒரு பிரதமராய் கொஞ்சமும் செயல்படாமல், அண்டை நாட்டு அட்டூழியங்களை  வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.   மன்னிக்கவும், கூட சேர்ந்து ஒழித்தழித்தார்  என்பதே சரி.    கிள்ளிவிட்டு அழும் பிள்ளையை தொட்டிலில்  இட்டு சமாதானப் படுத்துகிறேன் பேர்வழி என்று ஹஸ்கி வாய்சில் சோக

அரவான்

படம்
மகாபாரத இதிகாசத்தில் களப் பலியாக இடப்படுபவன் 'அரவான்' இந்தப் படத்திலும் ஒரு களப் பலி இடப்படுகிறது !  மன்னிக்கவும் ஒன்றல்ல இரண்டு !  அது ஏன், எதற்கு ?  அரவான் கதையை 'சு.வெங்கடேசன்' தன்னுடைய 'காவல் கோட்டத்தில்' வரும் பல கதைகளில் ஒன்றாய் எழுதியிருந்தார்.  அதை அழகாக தேர்ந்தெடுத்து, கதையை தன் பாணியில் இன்னும் செழிப்பாக்கி இயக்கியிருக்கிறார் என்னுடைய தற்போதைய டாப் டென் இயக்குனர்களில் ஒருவரான  திரு. வசந்தபாலன் ! எனக்கு வரலாறு மிக மிகப் பிடிக்கும், ஒரு முறை எல்லா பாடத்திலும் பெயில் ஆகிவிட்டேன், வரலாறில் மட்டும் சரியாய் நூற்றுக்கு முப்பத்தி ஆறு மார்க், இன்னொரு கொடுமை வகுப்பில் நான் மட்டுமே வரலாறில் பாஸ் ! சந்திரமுகியில் வரும் வேட்டையன் கதை, தசாவதாரத்தில் வரும் சோழன் மதவெறி, செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவனில் வரும் சோழ பாண்டிய விரோதம், இதையெல்லாம் உருகி உருகி சலிக்காமல் பார்த்தவன்,  இன்னமும் பார்த்துக் கொண்டே இருப்பவன்.  சந்திரமுகியில் ஜோதிகாவை ஸ்பிலிட் பெர்சனாலிடியாக காட்ட, அவர் படிக்கும் போது, வரும் நாடகக்காட்சியில் வாளேந்தி வீர மங்கையாய் வீட்டில் நடித்துப் ப

உனக்குத் தேவையா இது ?

படம்
( இது என் முகம் நேராய் என் விரலை நீட்டி , நானே என்னைக் கேட்கும் கேள்வி )      குடும்பம் ஒரு கதம்பம் படத்தில் விசு காமெடி யாருக்காவது ஞாபகம் இருக்கிறதா ?  சாப்பிட்டாச்சா ...? ன்னு ஒரு கேள்வி கேட்ட கேரக்டர கடிச்சி பிராண்டிடுவாரு , அது மாதிரி ஓர் அனுபவம்   FACEBOOK   புண்ணியத்தில் நேற்று எனக்கு கிட்டியது !      பிறந்தநாள் வாழ்த்து சொல்வதென்பது ஒரு நாகரீகச்செயல் என நம்பும் இன்னசன்ட் நான் .  சில சமயங்களில் முகநூலின் முகப்பில் நண்பர்களுடைய பிறந்தநாள் பற்றிய அறிவிப்பு ப்ளிங் ஆகும் , நேரமிருந்தால் அல்லது அவர் நெருங்கியவராயிருந்தால் வாழ்த்து ஒன்றை தட்டிவிடுவேன் .  அப்படித்தான் அன்றைய கொழுத்த ராகுகாலத்தில் ஒரு நண்பருக்கு , பிறந்தநாள் வாழ்த்தை அனுப்பித் தொலைத்தேன் !  இரண்டுநாள் கழித்து வந்தது பூமராங் , அனுப்பி வைத்தவர் நண்பர்தான் !      // நான் என்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடுவதில்லை . பிறந்தநாள் கொண்டாடுவது தமிழர் வழக்கம் அல்ல . ஈழத்தமிழர் படுகிற இன்னல்கள் , தமிழ்நாட்டுத் தமிழினம் அழிவை நோக்கி சென்று

ஆன்லைன் சூதாட்டமும் உப்புச் சத்தியாகிரகமும்

படம்
உப்புச் சத்தியாகிரகம் ஏன் வந்தது என உங்களுக்குத் தெரிந்திருக்கும், இருந்தும் வரலாறை ஊன்றிப் படிக்காத சிலருக்காக ஒரு கதைச்  சுருக்கம் :-  காலம் கி. பி.1930 -இடம் இந்தியா, ஆங்கிலேய ஆட்சி  உப்பு எளிய இந்திய மக்களின் அன்றாடத் தேவை, அன்றாட உணவுப்பொருட்கள் உள்ளூரில் மக்களுக்கு எளிதாக கிடைத்துவிடும். ஆனால், உப்பு வெளியில் இருந்தே வரவேண்டும்.  அதுவும் உப்பு வியாபாரிகள் மூலமே வரவேண்டும்.  வெள்ளையன் மூளையில் முதலில்  உதித்தது 'உப்புக்கு சிறப்பு வரி ' எந்தப் பஞ்சம் வந்தபோதும், ஆங்கிலேயர்கள் உப்பின் மீதான வரியை கடுமையான கண்டிப்புடன் வசூலித்தனர், விடாக்கண்டர்களுக்கு கொடாக்கண்டர்களாய் வியாபாரிகளில் சிலர் வரிவசூலிப்பு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, வரிஏய்ப்பு செய்தனர்.   இதற்க்காக கடுமையான முள்வேலிச் சோதனைச்சாவடிகளை இந்தியா முழுக்க நிறுவி, கறாராக வரியை வசூலிக்க ஆரம்பித்தது, இதற்க்கு பெரும் பொருட்செலவு ஏற்படவே,  இரண்டாவதாய் உதித்த சிந்தனை, உப்புக்கு ஒரு குறிப்பிட்ட விலையை நிர்ணயிப்பது, அதன்படி ஒரு மூட்டை  உப்பு விலை ரூபாய் 2 /- என இந்தியா முழுமைக்கும் அறிவித்தனர்.  இதன்படி, கடலோரம் இரு