இடுகைகள்

ஜூலை, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு டைமிங் ஸ்டோரி :)

'ஏன் இவ இப்படி வற்புறுத்துரா ?  என்னாலதான் ஒழுங்கா எல்லா நாளும் இருக்க முடியாதே ?  நடு ராத்திரில மொதல்ல எழுந்திரிக்கவே முடியாது.  அப்புறம் சாயங்காலம் முடிக்கப் போகணும், என் ஆபிஸ் பக்கத்துல அதுக்கு எங்க போகணும்ன்னு இதுவரை தெரிஞ்சிகிட்டதில்ல. ஒரு மணி நேரத்துக்கொரு முறை டீ குடிக்கலன்னா தலைவலி வரும்.  அப்புறம் நைட்டு தூங்க அது வேணும், அதுவும் வேணும், புரிஞ்சி தொலைய மாட்டாளே லூசு,  நீதான் இருக்கல்ல, விடேன், நானும் வைக்கணுமாம், பசங்களும் வைக்கணுமாம்.......ஸ்பென்சரைத் தாண்டியவன், பச்சை மஞ்சளாகி சிவப்பானவுடன், தலைக்கு மேல் கையைத் தூக்கி சைகை காட்டியவாறு வண்டியை நிறுத்தினான் இம்தியாஸ். பச்சை ஒளிர்ந்தவுடன் வேகமாக வண்டியை முடுக்கினான்.  புது வண்டி, முப்பதாவது வினாடியிலேயே எண்பதைத் தாண்டியது.  மெட்ரோ வேலைகளில் ட்ராபிக் நெருக்கடி இல்லை, ஆனால் டைவர்ஷன்  தெரியாமல் புதிதாய் நுழைபவர்களுக்கு நிறைய குழப்பங்கள் உண்டு, பாவம் அவர்களுக்கு விளக்க ஆட்களும் இல்லை.  ஒழுங்கற்ற முறையில் யாராவது சிலர் ஓட்டியபடியேதான் இருந்தனர்.  தூரத்தில் தாராபோர் டவர் சிக்னலிலும் பச்சை, ஆனால் வினாடிகள் உதிர்ந்தபடியே, உயிர

மன்னிக்கவும் இது ஒரு சுயதம்பட்டம் :(

அம்மா சென்டிமென்ட்டை விட உலகில் வேறேதும் பெரிய பாசப்பிணைப்பு இருந்துவிட முடியுமா என்ன ? என் தாய் என்னை மிகச் செல்லமாக, எல்லாச் சுதந்திரமும் கொடுத்து, அந்தச் செய்கையின் விளைவால் நிகழும் சங்கடங்களைச் சகித்து, தியாகத்தை உணர்த்தியவள். அப்பேற்பட்ட தாயே, மாமியார் எனும் ஒரு பதவி உயர்வு கிடைத்தவுடன், அதிகார போதையில், சற்றேத் தடுமாறி, என் மனைவியைக் கட்டுப்படுத்துவதாய் எண்ணி, என் உரிமையில் தலையிட ஆரம்பித்தாள்.  (வாரம் வாரம் அதென்ன சினிமா, நீதான் அவனுக்கு எடுத்துச் சொல்லணும், ஒரு பொண்ணு தலையில இத்தனை பூவ வச்சிட்டு, நக நட்ட போட்டுட்டு நைட்டு பன்னெண்டு மணிக்கு வந்தா என்ன அர்த்தம்,  வெளில சாப்டுட்டு வரணும்னு காலைலயே முடிவு பண்ணிருப்பீங்க,  அதச் சொல்லித் தொலச்சிருக்கலாம்ல்ல, ஏன் ஞாயித்துக் கிழம இப்படித் தூங்குறான், முன்னெல்லாம் இப்படியில்லையே....? நான் இன்றும் என் தாயை உயிராய் நேசிக்கிறேன், அம்மா பெயர் பொறித்த பலகையைத் தாங்கிய வீட்டைக் கட்டி, அங்கு அம்மாவின் கையால் பால் காய்ச்சி, வசிக்கவைத்து மகிழ்ந்தேன்.  ஆனால், என் கட்டுப்பாடற்ற சுதந்திரத்திற்காக, தாயைப் பிரிந்து வாடகை வீட்டில் வசிக்கிறேன் மன

பிற்பகல் செய்யின் (தம்மாத்துண்டு கதை)

சட்டென்று அவளைப் பிரிந்தேன், திடீரென ஒலித்த அழைப்புமணியின் கிர்ர்ர்ர் ஓசைதான் அதன் காரணி.  அவள் ஆடையை அவசர அவசரமாக திருத்திக் கொண்டாள், நான் என் சிகையை.  "என்ன பண்ணிட்டு இருக்கீங்க உள்ள, எதுக்கு கதவு தொறக்க இவ்ளோ நேரம் ?"  வினாவுடன் உள்ளே நுழைந்த விமலா, அவளைப் பார்த்ததும் உக்கிரமானாள்.   "ஓஹோ, வெறும் பேச்சா இருந்தத ப்ரூவ் பண்ணுறீங்களோ, ஆள் இல்லாத சமயமா பாத்து என் பெட்ரூமுக்குள்ளேயே......?  சரி நான் இருக்கறதுதான உங்களுக்கு எடஞ்சல், என் பொண்ண மட்டும் முடிஞ்சா பாத்துக்கோங்க, அதும் கஷ்டம்னா அவள ஏதாது அனாத விடுதில சேத்துட்டு ஆடுங்க" என்று சொல்லிவிட்டு கெரசின் கேனையும், தீப்பெட்டியையும் எடுத்துக் கொண்டு, பாத்ரூமுக்குள் நுழைந்து ஆத்திரத்துடன் கதவைச் சாத்தினாள்.  "அய்யய்யோ.....விமலா, நாங்க ஆபிஸ் அக்கவுண்ட்ஸ்தான் டேலி பண்ணிட்ருந்தோம், உனக்குத் துரோகம் பண்ணவே மாட்டேன், கதவத் தொறடி, நீ இல்லன்னா, நாங்க அனாதையா நிப்போம்" என்று நான் கதவைத் தட்டி கையாலாகாமல் அலறிக் கொண்டிருந்தேன். அப்போது என் தலையில் யாரோ ஓங்கி அடித்தார்கள். மலங்க மலங்க விழித்தேன்.  நீல இரவுவிளக்க
பொஸஸ்ஸிவ் பொண்டாட்டி   நான் நேசிக்கும் எந்தப் பெண்ணையும்    அவளுக்கு பிடிக்காது அது அம்மாவானாலும் ( என் )....... சரி மகளேயானாலும் சரி .......!

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்தப் பிரம்மனைக் கண்டு :(

படம்
இந்தச் செய்தி கண்ணீரை வரவழைப்பதோடு மட்டுமல்லாமல், கொஞ்சம் சிந்திக்கவும் சொல்கிறது.  மத்திய மாநில அரசுகள் இதைக் கருணையோடு அணுக வேண்டும்.  ஓர் உயிரைக் கொல்லும் அதிகாரம், சட்டத்திற்குட்பட்டு அரசால் மட்டுமே முடியும், இது குற்றவாளிகளுக்கு மட்டுமே என்கிறது சட்டம், ஆனால் வயதுக்கு வந்த இந்தப்பெண் படும் பாட்டைப் படித்தபோது, சட்டத்தைக் கொஞ்சம் திருத்திக் கொள்ளலாம் ! தினமணியில் நேற்று(03/07/2012) வெளியான செய்தி இது.  மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த அழகர், ஜெயாவுக்கு 1999 ல் மனவளமும், உடல்வளமும்(மாற்றுத் திறனாளி) அறவே குறைந்த பெண்குழந்தை பிறக்கிறது.  தாய்க்குத் தன்னுடைய குழந்தை பொன் தானே ?  எனவே கண்ணும் கருத்துமாய் வளர்த்தார் அந்தத் தாய்.  அந்தக் குழந்தை பகலெல்லாம் தூங்கும், இரவானாலோ பெருங்குரலுடன் அழுவும், பெற்றோரில் யாராவது ஒருவன் கொட்ட கொட்ட இரவு முழித்திருந்து அந்தக் குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.  மல ஜலமல்லாம் இருக்கும்  இடத்திலேயேதான் !  கொடுமையைப் பாருங்கள், இப்போது இவள் பருவமும் அடைந்துவிட்டாள்.  இதுமட்டும் சரியான வயதில் நிகழ்ந்துவிட்டது, என்ன எழவு லாஜிக்கோ ? இப்போ

இவன் அவன் (சிறுகதை)

படம்
நாங்க இந்த அபார்ட்மென்ட்ல குடியேறி சில மாதங்கள்தான் ஆகின்றன !   எங்களுக்கு கல்யாணமும் மூன்று வருடங்களுக்கு முன்புதான் நடந்தது , காதல் கல்யாணம் !    கருப்பாயிருந்தாலும்   களையாகவும் , சராசரிக்கும் கொஞ்சம் அதிகமான உயரத்தில் பால் வடியும் முகம் இவனுக்கு , இலகுவாக என்னைக் கவர்ந்து விட்டான் !   நாங்கள் நாயுடு , இவன் கண்டிப்பா எங்க ஜாதி இல்ல , அம்மா கடுமையாக எதிர்த்தார் , ஆச்சர்யமாக அப்பாதான் அம்மாவை ஆறுதல் படுத்தி , எங்கள் மணம் நடைபெற உதவி புரிந்தார் !   அவுங்க வீட்டில சுத்தம் , இதுவரை ஒரு ஈ காக்கா கூடத்   தேடி வந்ததே இல்ல .   ஒரே வருடத்தில் என்னை அம்மாவாக்கி விட்டான் , அழகான பெண் குழந்தை ! அப்புறமென்ன வழக்கம்போல அதுதான் , இவன் இப்பல்லாம் , எரிஞ்சு எரிஞ்சு விழுறான் !   அழுகிற குழந்தைய ' கொஞ்சம் தூக்கி தட்டுங்களேன்னு ' சொன்னாக்கூட கொஞ்சமும் கருணையில்லாம ' அந்த சனியன நீயே கொஞ்சு ' என்பான் ! பால் வடிஞ்ச மூஞ்சா அது ? ஆசிட்டாத்தான் வழியுது இப்ப ! கல்யாணமான புதுசுல நான் வேலைக்கு போயிட்டுரந்தப