இடுகைகள்

பிப்ரவரி, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இது என் மோகன்தாஸைப் பழித்த மலப்புழுக்களுக்கு !

படம்
சமீபத்தில் எங்கள் நண்பர் குழுவில் ஒரு பெரிய விவாதம் போய்க்கொண்டிருந்தது, இதுதான் காந்தியின் மறுபக்கம் என்று ஓர்  அல்லக்கை (RANGEELA GANDHI & KYA GANDHI MAHATMA THE -By Dr .L .R .BALI )  எழுதியதில் இருந்து ஒரு லிங்க்,  ஏற்கனவே தம் சுய சரிதையான 'சத்தியசோதனை' நூலில் வெளிப்படையாய் சொல்லியிருந்ததையே எடுத்து , ஆங்காங்கே கொஞ்சம் லேட்டஸ்ட்  லொள்ளுகளையும் கலந்து கொட்டி எழுதியிருந்தது ! ஆனால், ஓர் உயர்ஜாதி இந்துவான மோகன்தாஸ், தலித்துகளை தவிர்த்தே வந்தார், அல்லது ஏமாற்றினார்,  என்று எழுதிய  சில மலப்புழுக்களுக்காகவே இந்தக் கட்டூரை !  கீழே அந்த நாற்ற இணைப்பை கிளிக் செய்து படித்து  துன்புறலாம் / இன்புறலாம்(?)  ( http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fmathimaran.wordpress.com%2F2012%2F02%2F06%2F502a2F&h=mAQEwzTnRAQE2FzPS9iSnm8ufRcrYz4czhdLgs U7M317Snw&enc =AZNqIWY6p_vNewTRP8XVwv Y01OKGr_ZQ4xd_4aSFfk_FoZP170L4R1eKqv_M0DBRj_5jJXAsU3SpIcx-bd01s_BCZbQqX-LiW5pWVzon0GvmGSNISTWj_asiXxj0s7bTL00 ) இதோ கீழே, காந்தி தமிழகம் வந்தபோது  நடந்த  உண்மை  சம்பவங்களைப் பாருங்கள்..

கொலை செஞ்சு விளையாடுவோம் வாங்க !

படம்
நேற்றும், இன்றும்  வலைத்தளம் முழுக்க, நீதிமான் மனுநீதிச் சோழன் போல, எல்லா வலைத்தள மேதைகளும், ஒருசேரக் குற்றம் குற்றமே என்ற பாணியில், தமிழக அரசு ஐந்து அப்பாவிகளை(!) செய்த படுகொலைகளை படுபயங்கரமாய், கண்டித்து எழுதினர், எழுதினர், எழுதிக் கொண்டே இருந்தனர் ! அதிலும் ஒரு மாமேதை "பாவம் அவர்கள் துப்பாக்கிசூடு நடத்தியோ, யாரையும் அடித்தோ கூடக் கொள்ளையடிக்கவில்லையே, அந்தப் பிஞ்சுகளை ஏன் துடிதுடிக்கக் கொன்றீர்கள் ?"  என்று கேட்டு, நம்மை குலுங்கி குலுங்கி அழ வைத்தார் !   எனக்கு ஒருகணம், ஐயோ இந்த மேதைகள் எல்லாம் சிங்களத் தீவில் பிறந்திருந்தால், எம் தமிழ்மக்கள் கொத்துக்கொத்தாய் செத்திருக்கமாட்டார்களே ? என்று யோசித்தேன்.    அப்போது பார்த்து என் நண்பன் அழைத்தான், எங்கள் உரையாடலின் இடையே மேதைகளின் கண்ணீரைத் தெரிவித்தேன், "மச்சான், அவனுங்களுக்கு 'எதிர்க்கட்சி' வேலடா, எந்த அரசு என்ன செஞ்சாலும் அதை எதிர்த்துட்டேதான் இருப்பாங்க, அவிங்களுக்கும் பொழுது போகனுமில்ல, ஒரு பேச்சுக்கு, இந்த அஞ்சி பேரையும் உயிரோடு பிடிச்சி காமிச்சா, 'பாரேன், எங்க நாம கலாய்ப்போமின்னுட்டு, எவனோ அஞ்சு அப்

சொம்பு தூக்கும் ரத்தத்தின் ரத்தமே

படம்
நாத்திக போலிவேஷம் போட்டு தமிழகத்தில் காலூன்றிய கழகக் கண்மணிகள், ரத்தத்தின் ரத்தங்கள்,  இன்னமும் தம்முடைய முகமூடிகளை கழற்றாமல் நம்மிடையே உலா வந்து கொண்டுதான் இருக்கின்றன.   நேற்றைய தினமணி நடுப்பக்கக் கட்டூரையில் எங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், இதுவரை புத்திசாலியென்றே   நான் நம்பும் ஓர் அறிவுஜீவி ! ஆனால் இன்று அவர் தூக்கிய சொம்பு கொஞ்சம் அருவருப்பைத் தந்தது.    ரத்தத்தின் ரத்தமான பழ. கருப்பயா தான், கட்டுரை எழுதியவர், அவர் தூக்கிப் பிடிக்க விரும்பியது நபிகள் நாயகத்தின் பெருமைகளை, அந்தப் பெருமானாரின் புகழ் பாடியதோடு நின்றிருக்கலாம், இன்னமும் நாகரீக மாற்றங்களை தம்முள் அனுமதிக்க மறுக்கும், அப்பட்டமான பிற்போக்குத்தனங்கள் மலிந்த 'மதத்தின்' சாரங்களை, 'மாற்றமுடியாதவை' என பெருமை பட்ட அவரின்  ஜால்ராத்தனம்தான் எரிச்சலைத் தந்தது. சரி அப்படி அவர் என்னத்தான் எழுதிவிட்டார் என பார்ப்போம், பிறகு சில கேள்விகள், ஆனால்  அது அவருக்கு இல்லை. இனி அந்த அபத்தக் கட்டுரையின் சில துளிகள் :- இசுலாமியர்களின் கொள்வினை-கொடுப்பினைகள்,  திருமண  உறவுகள்,  அதில் கடைபிடிக்க வேண்டிய ஒழுகலாறுகள்,

பிறழ்வு

வெட்கம் பிடுங்கித் தின்கிறது சுற்றுமுற்றும் பார்க்கிறேன் கூட்டம்கூட்டமாய் மக்கள்வெள்ளம்  கல்லூரிமுடிந்து செல்லும் கன்னியர் அவருக்கு சமைக்கணுமே என ஓடும் மங்கையர் போயிருப்பாளோ வென பதைத்தபடி செல்லும் விடலையர்  என்னைப்போலவே ஒரு சொறிநாய் என்னைப்போலவே ஒரு பொலிகாளை என்னைப்போலவே ஒரு சேற்றுப்பன்றி நிற்கிறேன் நடக்கிறேன் ஓடுகிறேன்  இதுவரை யாரும் என்னைப் பார்க்கவில்லை பார்த்துவிட்டால் இவ்வுலகில் எனக்கு வேலையில்லை நிர்வாணமாய் நானிருக்கிறேன் மானம் மறைக்க ஆடைதேடி விழியால் மேய்கிறேன் பொட்டுத் துணியில்லை அக்கம்பக்கம் வழக்கம்போல் சூழ்கிறது இருள் பாய்ந்து பதுங்குகிறேன் மறைவொன்றில் தற்காலிகமாய் கிடைக்கிறது  விடுதலை  எப்போதும் போல் விழிக்கிறேன் தாமதமாய் எழுந்தவுடன் பார்த்தால் விலகியிருந்தாலும் கைலியிருந்தது ஏன் வருகிறது இந்தக் கனவு அடிக்கடி ?

DONATE YOUR BLOOD

நீங்கள் ரத்ததானம் செய்ய விரும்பும் நபர் ஆனால் எவ்வாறு உதவுவது எனத் தெரியாமல் தவிப்பவரென்றால் கீழ் காணும் இந்த வெப்சைட் சென்று உங்களின் முழு விபரங்களை பதிவு செய்யுங்கள், நீங்கள் வசிக்கும் பகுதி எது என உள்ளிடுங்கள், தேவையைப் பூர்த்தி செய்து இன்புறுங்கள், உங்களின் தேவைக்கும் உபயோகியுங்கள், நீங்கள் ரத்தக்கொடை அளித்த பின், கொடுத்த தேதி, பயனாளியின் பெயர், கொடுத்த மருத்துவமனை இதை மறவாமல் அங்கு பதியுங்கள், தவறாமல் உங்கள் சுவரில் இதை பகிருங்கள் ! www.friends2support.org

சாரு தவறாய் புனையப்படும் ஒரு பொக்கிஷம்

படம்
சாருநிவேதிதா,  தமிழில்   தவிர்க்கப்படவே   கூடாத  எழுத்தாளர்,  ஆனால்  எப்படியாகிலும்  அவரை விரட்டவேண்டும் என்ற  கங்கணத்துடன்   சதிவலைகளை  பின்னியவாறே பெருங்கூட்டமொன்று  அவரைத்  தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது ! அக்கூட்டத்தினர்களால்  'சைக்கோ, லூசு, பொம்பள பொறுக்கி,  அரைவேக்காடு,  பில்டப் பீதாம்பரம், இன்டர்நெட் பிச்சைக்காரன் Mr .நெட் ஸ்கேன்டல்'.....இன்னும் பல பட்டம் சூட்டப்பெற்றிருக்கிறார்.  அதேநேரத்தில் தமிழகத்தில் இருக்கும் மிக மிக முக்கியப் பிரமுகர்கள்  கூட இவரின்  தீவீர விசிறியாக  இருக்கின்றனர்.   இருந்தும் ஏனோ வெளிப்படுத்திக் கொள்ள  தயங்குகின்றனர்,  அல்லது  அதீத உரிமையுடன் பேசுவதாய் எண்ணி அவரைக்  காயப்படுத்துவதில்  உவகை  கொள்கின்றனர்.   சாரு, வீற்றிருந்த  மேடையிலேயே மிஸ்கின்  அவரை  குடிகாரர் என்றார்,  ஞாநி, விடலைகளை  நம்பி  ஏமாறுகிறார்  என்கிறார்  ! ஆனால், வரலாறு  பிற்காலத்தில்  இவரை  வேறுவிதமாய்ப்  பார்க்கப் போகிறது, என்று  அந்த மூடர்களால்  புரிந்து கொள்ளவே முடியவில்லை, அல்லது  புரிய மறுக்கின்றனர்.   ஆம், தமிழ்நூல்கள் படிக்கும் இளைஞர்கள் மத்தியில், ஓர் உச்ச நட்சத்த

மெக்சிகோ சலவைக்காரி ஜோக்

படம்
சுஜாதா, தான் உயிருடன் இருக்கும்வரை எல்லா நாவல்களிலும், கட்டுரைகளிலும் சொல்கிறேன், சொல்கிறேன்....என்று கடைசிவரையில்  பொதுவில் சொல்லாமல், விட்ட  அசைவ ஜோக்தான்  இந்த மெக்சிகோ சலவைக்காரி ஜோக் !   சரி இது எப்படி எனக்குத் தெரியும் என்றால், சுஜாதா மறைந்த பின், குமுதம் அரசு பதில்களில் (2008 / 2009 பதிப்புகள்) ஒரு வாசகரின் வேண்டுகோளுக்கிணங்கி வெளியானது.  என்னுடைய ஞாபகசக்தி உதவியில்தான் எழுதுகிறேன், ஆனால் இதை என் மானசீக ஆசான் சுஜாதா சொல்லியிருந்தால் இதை விட 100 மடங்கு அழகாய் இருந்திருக்கும், அடுத்த வாரம் சுஜாதாவின் நினைவு நாள், அதற்க்கு அஞ்சலியாய் இது அமையட்டும்  ! மெக்சிகோவில் ஓர் ஆற்றங்கரையோரம் இருந்த அந்த சலவைக்காரி மிக  அழகு,  அதிலும், எது மிக பிரமிப்பூட்டும் என்றால் அது அவளுடைய பின்னழகு !  அதற்க்கு மயங்காத ஆட்களே அந்த பகுதியில் இல்லை, அவளுடன் அருகே வசிக்கும் இளங்காளைகள் பலருக்கும் அவள் மீதும், முக்கியமாய் அவளின் 'அதன்' மீதும் உள்ளூர வெறி !  அனுபவிக்க வாய்ப்பு கிடைக்குமா என இலவு காத்த கிளியாய் காத்துக் கிடந்தனர் !  இங்குதான் அந்தக் கொடுமையைச் சொல்ல வேண்டும், அவள் வளர்த்து வந்த

என்ன ஜென்மம் நான் ?

இடம் பொருள் ஏவல் தெரியாமல் இன்று கொஞ்சமாய் அசிங்கப்பட்டேன், காரணம் சாரு !  தலைப்புகளும் சரி, கதாபாத்திரங்களின் பெயரும் சரி, அதை வைப்பதில்தான் நம்ம தல கில்லியாச்சே !  சம்பவம் நடந்த இடம் ஒரு பிரபல மருத்தவமனை வரவேற்பறை (நண்பர் ஒருவர் அலுவல் விஷயமாக போனார், அவருக்கு கம்பனி கொடுத்தேன்) காத்திருந்த வேளையில், சாரு நிவேதிதாவின் புத்தகமொன்றை வாசித்துக்கொண்டிருந்தேன் !  அவ்வப்போது உள்ளே போயிருந்த நண்பர் வந்துவிட்டாரா என்று தலை நிமிர்த்தி பார்த்தேன் !  ஒவ்வொரு முறையும் யாரவது ஓரிருவர் என்னையும் என் கையிலிருந்த புத்தகத்தையும் விரோதமாக பார்த்ததைப் போல் தெரிந்தது !   'அடடா சாருவிற்கு எதிரிகள் இல்லாத இடமே கிடையாது போல'  என்று மனதில் நினைத்துக் கொண்டே ஆனால் தொடர்ந்து படித்தேன் !  அரைமணி நேரம் கழித்து வந்த நண்பர் "ஏன்டா இப்படி ஏன் மானத்த வாங்குற ?" என்றான் தலையில் அடித்துக்கொண்டே !  "என்ன ?"   "என்னடா புக் இது ? " "நீயே பாரேன்"  "என்னத்த பாக்குறது இது என்ன ஆஸ்பிடல்ன்னு தெரியுமா ?  புள்ளபாக்கியம்  இல்லாதவங்களுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்கிற ஆஸ்பிடல்"

அம்மா

இதுவரை நான் நானாகத்தான் இருக்கிறேன் ஆனால் இப்பல்லாம் ரொம்ப மாறிவிட்டேனாம் அம்மா சொன்னாள் நீ மூடன் ஆகிப்போனாய் முன்பெல்லாம் என்னை அதிமேதாவி என கண்டவரிடமெல்லாம் புகழ்ந்தவள் அம்மா சொன்னாள் நீ ஏமாளி ஆகிப்போனாய் முன்பெல்லாம் என்னை கெட்டிக்காரன் என சொந்தங்களிடம் பெருமைப்பட்டவள் அம்மா சொன்னாள் நீ சும்மாயிரு உனக்கு ஒன்றுமே தெரியாது முன்பெல்லாம் நாலும் தெரிந்தவன் என நண்பிகளிடம் கர்வப்பட்டவள் கருணையின் உருவமாய் பார்த்துவந்த தாயின் மறுபுறம் புலப்பட்டது விளக்கேற்ற வந்தவளின் கால்கள் வீட்டில் பட்டவுடன் ஆனால் இதுவரை நான் நானாகத்தான் இருக்கிறேன் !

தூவாளி

மோதல்  பெருஞ்சேதம்தான் இத்தனைக்கும் நடந்ததென்னவோ சிறு விபத்து அரைவினாடிக்கும் குறைவாய் மோதின விழிகள் நான்கு அதற்க்கே தூக்கம் குற்றுயிரானது இரவு முழுக்க !

தூவாளி

மீண்டும் மீண்டும் உதாசீனத்தின் உச்சம் காட்டிய உன்னை கிழி கிழியென கிழித்துவிடும் ஆவேசத்துடன்தான் டயல் செய்தேன் ஹலோ கூட சொல்லாமல் எடுத்தவுடனேயே 'சார்ரிப்பா' என்று தொடங்கினாயா ஈரக்காற்றில் பதத்துப்போன தீக்குச்சியானேன் மீண்டும் !

காதலர் தினத்தில் தொடங்கியது என் இனிய பயணம்

வணக்கம் வருகையாளர்களே, தங்களின் இனிய வருகைக்கு நன்றி ! இன்றுதான் தொடங்கியுள்ளேன், என் பயணம் முழுக்க துணை வருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் !  ஆங்காங்கே இளைப்பாறி, பசியாறி, ஓடிக் கொண்டேயிருப்போம், வாருங்கள் !