அம்மா




இதுவரை
நான் நானாகத்தான்
இருக்கிறேன்
ஆனால் இப்பல்லாம்
ரொம்ப மாறிவிட்டேனாம்

அம்மா சொன்னாள்
நீ மூடன்
ஆகிப்போனாய்
முன்பெல்லாம் என்னை
அதிமேதாவி என
கண்டவரிடமெல்லாம் புகழ்ந்தவள்

அம்மா சொன்னாள்
நீ ஏமாளி
ஆகிப்போனாய்
முன்பெல்லாம் என்னை
கெட்டிக்காரன் என
சொந்தங்களிடம் பெருமைப்பட்டவள்

அம்மா சொன்னாள்
நீ சும்மாயிரு
உனக்கு ஒன்றுமே தெரியாது
முன்பெல்லாம் நாலும் தெரிந்தவன் என
நண்பிகளிடம் கர்வப்பட்டவள்

கருணையின் உருவமாய்
பார்த்துவந்த தாயின்
மறுபுறம் புலப்பட்டது
விளக்கேற்ற வந்தவளின்
கால்கள் வீட்டில் பட்டவுடன்

ஆனால் இதுவரை
நான் நானாகத்தான்
இருக்கிறேன் !

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடலோடி - நரசய்யா !!!

மெக்சிகோ சலவைக்காரி ஜோக்

கெட்ட வார்த்தை பேசுவோம் !!!