என்ன ஜென்மம் நான் ?
இடம் பொருள் ஏவல் தெரியாமல் இன்று கொஞ்சமாய் அசிங்கப்பட்டேன், காரணம் சாரு ! தலைப்புகளும் சரி, கதாபாத்திரங்களின் பெயரும் சரி, அதை வைப்பதில்தான் நம்ம தல கில்லியாச்சே ! சம்பவம் நடந்த இடம் ஒரு பிரபல மருத்தவமனை வரவேற்பறை (நண்பர் ஒருவர் அலுவல் விஷயமாக போனார், அவருக்கு கம்பனி கொடுத்தேன்) காத்திருந்த வேளையில், சாரு நிவேதிதாவின் புத்தகமொன்றை வாசித்துக்கொண்டிருந்தேன் ! அவ்வப்போது உள்ளே போயிருந்த நண்பர் வந்துவிட்டாரா என்று தலை நிமிர்த்தி பார்த்தேன் ! ஒவ்வொரு முறையும் யாரவது ஓரிருவர் என்னையும் என் கையிலிருந்த புத்தகத்தையும் விரோதமாக பார்த்ததைப் போல் தெரிந்தது ! 'அடடா சாருவிற்கு எதிரிகள் இல்லாத இடமே கிடையாது போல' என்று மனதில் நினைத்துக் கொண்டே ஆனால் தொடர்ந்து படித்தேன் ! அரைமணி நேரம் கழித்து வந்த நண்பர் "ஏன்டா இப்படி ஏன் மானத்த வாங்குற ?" என்றான் தலையில் அடித்துக்கொண்டே !
"என்ன ?"
"என்னடா புக் இது ? "
"நீயே பாரேன்"
"என்னத்த பாக்குறது இது என்ன
ஆஸ்பிடல்ன்னு தெரியுமா ? புள்ளபாக்கியம் இல்லாதவங்களுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்கிற ஆஸ்பிடல்" என்று மெல்ல காதில் கிசுகிசுத்தான் ! அப்போதுதான் உறைத்தது நான் படித்துக் கொண்டிருந்தது 'எனக்கு குழந்தைகளை பிடிக்காது'
"என்ன ?"
"என்னடா புக் இது ? "
"நீயே பாரேன்"
"என்னத்த பாக்குறது இது என்ன
ஆஸ்பிடல்ன்னு தெரியுமா ? புள்ளபாக்கியம் இல்லாதவங்களுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்கிற ஆஸ்பிடல்" என்று மெல்ல காதில் கிசுகிசுத்தான் ! அப்போதுதான் உறைத்தது நான் படித்துக் கொண்டிருந்தது 'எனக்கு குழந்தைகளை பிடிக்காது'
Your writing style is fantastic... pls continue...
பதிலளிநீக்குநன்றி SHIVAM தோழரே !
நீக்குரசித்துப் படித்தேன்! இயல்பான வாழ்க்கையில் நடக்கும் இதைப் போன்ற சம்பவங்கள் உலக இலக்கியங்களில் கூட கிடைக்காது!!!
பதிலளிநீக்குஉண்மை, நன்றி கணேசன் !
நீக்குஇதுபோல நிகழ்வுகள் பலருக்கும் நடந்திருந்தாலும் அதை அழகாக வெளிப்படுத்த எல்லோரும் இரசிக்கும் வண்ணம் சொல்ல ஒரு திறமை வேண்டும்..அது உங்களுக்கு நிறையவே இருக்கிறது...வாழ்த்துக்களும்..பாரட்டுக்களும்...
பதிலளிநீக்கு