இடுகைகள்

மே, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மழையின் குரல் தனிமை

படம்
தற்கொலை என்றவுடனே எனக்கு பத்திக்கொண்டு கோபம் கிளம்பும்.  தற்கொலை செய்துக்கொண்டோரை வடிகட்டிய மா கோழைகள் என மனதுள் திட்டுவேன்.  ஆனால் பல தற்கொலைகளின் வரலாற்றை ஆய்ந்தபோது, செய்துகொண்டவர்களின் கையறு நிலையிலேயே அவைகள் நிகழ்ந்திருக்கின்றன என்பதுதான் கொடுஞ்சோகம்.  அதுவும் அப்படி நமக்கு நெருக்கமானவர்களுக்கிடையே அவைகள் நிகழும்போதுதான்.......’அய்யோ இப்படி ஆகுமெனத் தெரிந்திருந்தால் இயன்றவரை உதவியிருக்கலாமே ?’ எனக் கண்ணீர் முட்டும்.   என்ன முட்டி என்ன.....போனது அவ்வளவுதான். ஆனால் அந்த உயிரை நம்பி, நேசித்திருந்து, அவர்களில்லாமல்........ஜீவிக்கப் போகிறவர்களின் நிலை  ? அட அது கூடப் போகட்டும்.  இப்படி ஓர் உயிரின் அகால மரணத்திற்கு துர்விதியால் அல்லது தெரிந்தே..... காரணமாய் இருப்பவரின் கதி ??? ஆம், அதுதான் கீழே தொடரப்போகும் கதை(மதிப்புரை அல்லது தெளிவுரை)யின் மையக்கரு.  ’மழையின் குரல் தனிமை’  ஆசிரியர் பா.வெங்கடேசன்.  சிறுகதையாக காலச்சுவடு சிற்றிதழில் வெளியானது.  சிறுகதைன்னா இதுவும் ராஜன் மகள் போலவே  நீளமானச் சிறுகதைதான்(40 பக்கங்கள்) விருமாண்டி படத்தில், ”என்னடா ஏற்கனவே பாத்த சீனே திரும்ப

ராஜன் மகள் (சிறுகதை) ஆசிரியர் பா.வெங்கடேசன்

படம்
’வாசக சாலை’ குழுமம்,   நல் இலக்கியத்தை தேடித் தேடி ருசிக்கும், ருசித்ததை பகிரும், பகிர்ந்ததை அலசித் தர்க்கங்கள் புரியும், எங்கள் நண்பர்கள் குழுவினரால் ஃபேஸ்புக்கில் ஆரம்பிக்கபட்ட ஒன்று. ஆரம்பத்தில், வாசித்ததை சிறு, குறு கட்டுரையாக மட்டுமே பலர் அதில் பதிந்து விவாதித்து வந்திருந்தோம்.  அவசியம் வாசிக்க வேண்டிய நூல்கள் என்று பலவற்றை அறிமுகப்படுத்தும் செயல்களையும் செய்துக் கொண்டிருக்கிறோம். குழுமத்தின் அடுத்தக் கட்ட பாய்ச்சலாக, வாசிப்பை பலரிடமும் மேம்படுத்தவும், வாசிப்பு என்றாலே ஒரு குறுகிய வட்ட இலக்கியவாதிகளையேச் சுற்றிச் சுற்றி வாசித்து, குளமாய்த் தேங்கி நின்று விடாமல், பலரால் அறியப்படாத சில பொக்கிஷங்களை அறிமுகப்படுத்தி, அதை வாசிக்கத் தூண்டி, நம்மை காட்டாறாய் ஓட வைத்து, விரைந்து பேரிலக்கியக் கடலில் நம்மைச் சங்கமிக்க வைக்கும் ஒரு முயற்சியாகவே.......................மாதா மாதம்  நடு அல்லது  கடைசி ஞாயிறுகளில், திருவான்மியூர் பனுவல் நூல் அங்காடியில் காலைப் பொழுதுகளில், இலக்கியச் சந்திப்பை, இயன்றவரை அப் பொக்கிஷத்திற்குரியவரையும் அழைத்து, நிகழ்த்தத் துணிந்தோம் ;) இலக்கியக் கூட்டமென