இடுகைகள்

மே, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

HEY RAM

ஓர் இயக்குனர், தான் சார்ந்திருக்கும் மதத்திலுள்ள குறைகளை அறவே வெறுக்கிறார், ஆனால் இங்குள்ள குடும்பச் சூழலில் அதை முற்றிலுமாக வேரறுக்க முடியாமல் தாம் மட்டும் நாத்திக கோலம் பூணுகிறார் !அதே நேரத்தில் வேறொரு மதத்திலுள்ள பிழையையும் சுட்டிக் காட்ட விரும்புகிறார் !   அது ஒரு மதத்தை சார்ந்தவனால் முடியாது, இதற்க்கு அந்த நாத்திக ஆயுதம் உதவும் ! சரி, 'ஹே ராம்' க்கு வருவோம்,  இப்போது சஹாத்தே ராம் கமலில்லை, நீங்கள்தான் !  உங்களை 1947-48 கால கட்டத்தில் ஒரு படித்த தமிழ் இளைஞனாய், வெள்ளையனிடம் வேலை (புதைபொருள் ஆராய்ச்சி) செய்பவராய் காட்டப்போகிறோம், அப்படியெனில் ஐயராகவோ, அய்யங்காராகவோ, அதிகபட்சம் செட்டியாராகவோ, அல்லது முதலியாராகவோ காட்டப்படவேண்டும் !  நாம் வணிகம் செய்யப் போவதில்லை, எனவே செட்டியார், முதலியார் வேண்டாம் என உதவி இயக்குனர்கள் குழு விவாதத்தின் போது நிராகரிக்கிறது, அப்போ மிச்சமிருப்பது ஐயர், அய்யங்கார், தலைப்பை ராம் என்று வைத்துத் தொலைத்துவிட்டோம், சரி லாஜிக்படி 'அய்யங்கார்' ஒத்துப் போக, நீங்கள் இபோது ஒரு அய்யங்கார் ! கல்கத்தாவில் அழகான மனைவியுடன் இனிமையான வாழ்க்கையைத் தொடங