இடுகைகள்

ஏப்ரல், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உங்க ஷாருக்கான் என்ன அவ்ளோவ் பெரிய அப்பாடக்கரா ?

படம்
 அவரவர்தம் விருப்பங்களும், தேர்ந்தெடுத்தலுமே அவர்களின் சந்தோஷத்தை/துக்கத்தை  நிர்ணயிக்கின்றன ! இது ஏதோ சாமியார் கூறிய நல்ல அறிவுரை போல, என்று நீங்கள் பாராட்டினால் அவை அப்படியே என்னை வந்துச் சேரும் !  ஆம், இது என்னால் எப்போதோ ட்வீ ட் செய்யப்பட்ட ஒரு கருத்துத்தான் என்றாலும் இதை எப்போதோ, யாராவதோ கூட சொல்லியிருக்கக் கூடும் ! எதைக் கொண்டு வந்தோம் அதை நம்முடையது என்று சொல்வதற்கு ? சரி, இப்போ எதுக்காக இவ்ளோவ் பில்டப் என்றால், நான் சரியான ஒன்றைத்தான் தேர்ந்தெடுத்துள்ளேன் என்பதை உங்களிடம் பகிர்வதற்க்காகத்தான் ! என்னுடைய மழலைப் பருவத்தில் என் வீட்டில் 'தினத்தந்தி'  வாங்குவார்கள், கன்னித்தீவு தொடரை விரும்பி வாசிப்பார்கள் ! விவரம் தெரியும் வரை ரசித்தே வந்த நான், டீனேஜ் தொடங்கும் போதே அந்த நாளிதழின் அதிகப்பிரசங்கித்தனங்களை வெறுக்க ஆரம்பித்தேன் ! ஒரு பாலியல் வன்முறையை அவர்களுடைய நிருபர் நேரில் சென்று வீடியோ எடுத்ததைப் போல வர்ணித்து எழுதுவார்கள் !  இவர்களால் ஒரு தலைமுறையே சீரழிந்தது என்றாலும் கூட அது மிகையில்லை ! பள்ளிப்படிப்பின்  இறுதிகட்டத்தின்

காஞ்சிபுரத்திலும் ரத்தக் காட்டேரி அட்டூழியம் !

படம்
'காஞ்சிபுரத்திலும்' என்ற போதே புரிந்திருக்கும், அப்போ, இந்தக் ரத்தக் காட்டேரி நிறைய அக்கம்பக்கத்துல விளையாண்டுருக்கும்னுட்டு ! ஆமாம், வேலூர், வாலாஜா,  ராணிப்பேட்டை,  ஆற்காடுன்னு ஊர் சுத்திட்டு, அண்ணாத்த இப்போ காஞ்சிக்கு விஜயம் செஞ்சுருக்காராம் ! இச்செய்தியை, இன்று நாளிதழில் படித்தவுடன், ஏதோ நூறாண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவங்களைக் கோர்த்து, 'பொக்கிஷம்னு' போடுறாய்ங்க போலன்னு நினைச்சா, ங்கொக்கமக்கா...... 'ஹாட் நியூஸாம்ல' இது ! சரி, அது என்ன என்ன சேட்டையெல்லாம் செஞ்சுருக்காம் தெரியுமா ?  இந்த ரத்தக் காட்டேரிக்கு ஒரு கொழந்த  பொறந்ததாமாம்,  எவனோ ஒரு போலி டாக்டர்  அந்த பிஞ்சுக்   கொழந்தைக்கு விஷஊசி போட்டு கொன்னுட்டானாம்  !  அதனால பழி  வாங்க அந்தக் காட்டேரி,   தாத்தா உருவத்துல வந்து ரத்தக் காவு கேக்குதாமாம் !  நள்ளிரவு பன்னிரெண்டு மணி ஆச்சுன்னா கெளம்பிடுமாம் ரத்தம் ரத்தம்னுட்டு போயி ஒரு ஒரு கதவா தட்டுமாம், வெளிய வந்தா ஓங்கி.......யெய்யா போதும் கொல நடுங்குது ! இப்போ சமீபத்துல நிலநடுக்கம் வந்ததே.....அதுகூட இவுக சொல்லித்தான் வந்ததாமாம்,