’கடலோடி’ வயதுக்கு வந்திருந்த வேளையில்தான் ’நரசய்யா’வை நான் ஜூ.வி. கட்டுரைகள் வாயிலாக முதன் முதலாக வாசிக்க நேர்ந்தது. அந்தக் கட்டுரைகளில் அவர், தான் வேலை செய்த பிரம்மாண்ட கப்பல்கள், கடலில் குட்டித் தீவுகளென அலையும் திமிங்கலங்கள், நெடிந்துயர்ந்த நீர்த்தூணாய் வானும் கடலும் கொள்ளும் கலவி.........இப்படி அவர் விவரிக்க விவரிக்க அப்படியே அந்தச் சாகஸங்களை கற்பனை செய்து, திளைத்துக் கிடந்திருக்கிறேன். பிறகு பல வருடங்கள் எனக்கும், ஜூவிக்குமான பிணைப்பு அறுபட, நரசய்யாவை அடியோடு மறந்தும் போயிருந்தேன். விகடன் கட்டுரைத் தொடரில், " நீங்கள் எழுத்தாளர்களென நம்புபவர்களெல்லோரையும் விட சிறந்தவர்கள் இவர்களென சாரு நிவேதிதா பட்டியலிட்டிருந்த எழுத்தாளர்களில்தான் மீண்டும் ’நரசய்யா’ என் கண்ணில் பட்டார். அதில் நரசய்யாவின் சிறந்த ஆக்கம் ’கடலோடி’ என்றும் சாரு பரிந்துரைத்திருந்தார். ஆனால் 2011 லிருந்து தேடி, இவ்வருடம்தான் புத்தக கண்காட்சியில் இந்த நூல் கிட்டியது. வாங்கி வழக்கம்போல் நரசய்யாவை புத்தகப் பைக்குள் சிறைவைத்து, ஜிப்பை இழுத்து மூடிவிட்டேன். தெரியாத்தனமாய் அலமாரிய...
சுஜாதா, தான் உயிருடன் இருக்கும்வரை எல்லா நாவல்களிலும், கட்டுரைகளிலும் சொல்கிறேன், சொல்கிறேன்....என்று கடைசிவரையில் பொதுவில் சொல்லாமல், விட்ட அசைவ ஜோக்தான் இந்த மெக்சிகோ சலவைக்காரி ஜோக் ! சரி இது எப்படி எனக்குத் தெரியும் என்றால், சுஜாதா மறைந்த பின், குமுதம் அரசு பதில்களில் (2008 / 2009 பதிப்புகள்) ஒரு வாசகரின் வேண்டுகோளுக்கிணங்கி வெளியானது. என்னுடைய ஞாபகசக்தி உதவியில்தான் எழுதுகிறேன், ஆனால் இதை என் மானசீக ஆசான் சுஜாதா சொல்லியிருந்தால் இதை விட 100 மடங்கு அழகாய் இருந்திருக்கும், அடுத்த வாரம் சுஜாதாவின் நினைவு நாள், அதற்க்கு அஞ்சலியாய் இது அமையட்டும் ! மெக்சிகோவில் ஓர் ஆற்றங்கரையோரம் இருந்த அந்த சலவைக்காரி மிக அழகு, அதிலும், எது மிக பிரமிப்பூட்டும் என்றால் அது அவளுடைய பின்னழகு ! அதற்க்கு மயங்காத ஆட்களே அந்த பகுதியில் இல்லை, அவளுடன் அருகே வசிக்கும் இளங்காளைகள் பலருக்கும் அவள் மீதும், முக்கியமாய் அவளின் 'அதன்' மீதும் உள்ளூர வெறி ! அனுபவிக்க வாய்ப்பு கிடைக்குமா என இலவு காத்த கிளியாய் காத்...
கெட்ட வார்த்தை பேசுவோம் - பெருமாள்முருகன் ******************************************************************** ஒரு வருடமாய் அலமாரியில் தூசி படிந்து , புது புத்தகத்திற்குரிய வாசனையை கிட்டத்தட்ட இழந்திருந்த இந் நூலை , சமீபத்தில் சென்றிருந்த பிஸினெஸ் டூரில் , ரயில் பயணவேளைகளின் போது வாசித்தேன் . வாசிக்க ஆரம்பித்தவுடன் அசூயையின் காரணமாக முகம் சுளித்து அவதிப்பட்டேன் . அல்குல் , கொங்கை , சிதி , சுண்ணி என தொடர்ந்து பத்திக்கு பத்தி கவுச்சி . அய்யய்யோ , இந்தப் புத்தகத்தைப் போய் திறந்தவெளியில் வைத்திருந்தோமே , வீட்டுப் பெண்மணிகள் எதேச்சையாய் வாசித்து நம்மைப் பற்றி என்ன நினைத்திருப்பார்களோ என்ற கிலி வேறு பற்றியது. பெருமாள்முருகனே ஆரம்பத்தில் , சொந்தப் பெயரை மறைத்து , புனைப் பெயரில்தான் இதைத் தொடராக எழுதினாராம் ! ஆனால் , இந்த நூலை முழுதாய் வாசித்ததும் , செக்ஸ் & ஆண் பெண் பாலியல் உறுப்புகள் பற்றி பேசும் போதோ , எழுதும் போதோ , வாசிக்கும் போதோ , நாம் போடும் போலி வேஷங்களையும் , நம் பண்டைய இலக்கியவாதிகளின் சுதந்திரத்தையும் ஒப்பிட்டபோது , இயல்பை , அவசியமான ஒன்றை , இப்படி மூடிப் பேசி மூடி...
கவிஞரய்யா! காதலய்யா!! அருமை...
பதிலளிநீக்குha..ha..
நீக்கு