இது என் மோகன்தாஸைப் பழித்த மலப்புழுக்களுக்கு !
சமீபத்தில் எங்கள் நண்பர் குழுவில் ஒரு பெரிய விவாதம் போய்க்கொண்டிருந்தது, இதுதான் காந்தியின் மறுபக்கம் என்று ஓர் அல்லக்கை (RANGEELA GANDHI & KYA GANDHI MAHATMA THE -By
Dr .L .R .BALI ) எழுதியதில் இருந்து ஒரு லிங்க், ஏற்கனவே தம் சுய சரிதையான 'சத்தியசோதனை' நூலில் வெளிப்படையாய் சொல்லியிருந்ததையே எடுத்து , ஆங்காங்கே கொஞ்சம் லேட்டஸ்ட் லொள்ளுகளையும் கலந்து கொட்டி எழுதியிருந்தது !
ஆனால், ஓர் உயர்ஜாதி இந்துவான மோகன்தாஸ், தலித்துகளை தவிர்த்தே வந்தார், அல்லது ஏமாற்றினார், என்று எழுதிய சில மலப்புழுக்களுக்காகவே இந்தக் கட்டூரை ! கீழே அந்த நாற்ற இணைப்பை கிளிக் செய்து படித்து துன்புறலாம் / இன்புறலாம்(?)
(http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fmathimaran.wordpress.com%2F2012%2F02%2F06%2F502a2F&h=mAQEwzTnRAQE2FzPS9iSnm8ufRcrYz4czhdLgs U7M317Snw&enc =AZNqIWY6p_vNewTRP8XVwv Y01OKGr_ZQ4xd_4aSFfk_FoZP170L4R1eKqv_M0DBRj_5jJXAsU3SpIcx-bd01s_BCZbQqX-LiW5pWVzon0GvmGSNISTWj_asiXxj0s7bTL00)
இதோ கீழே, காந்தி தமிழகம் வந்தபோது நடந்த உண்மை
சம்பவங்களைப் பாருங்கள்......இதெல்லாம் கதையல்ல என்பதை மட்டும் உணருங்கள் !
அண்ணல் காந்தியடிகள் குற்றாலம் சென்றபோது, அருவியில் குளித்துவிட்டு, குற்றாலநாதர் ஆலயத்துக்கு வழிபடச் சென்றார். அந்த ஆலயத்தில் ஜாதி இந்துக்கள் மட்டும்தான் வழிபட முடியும் என்பதைக் கேள்விப்பட்ட மகாத்மா கோயிலுக்குள் நுழைய மறுத்துவிட்டார். ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் எல்லோரும் செல்லும்போதுதான் அது கோயில், இல்லையென்றால் அது வெறும் கல்மண்டபம்தான் எனக்கூறி திரும்பிவிட்டார் !
மதுரையிலும் ஹரிஜனங்களுக்கு மீனாட்சி அம்மன் ஆலயத்தில் வழிபட அனுமதி இல்லை என்று கேள்விப்பட்ட மகாத்மா காந்தி, 'எப்போது ஜாதி வேறுபாடு இன்றி எனது ஹரிஜன் சகோதரர்களும், எல்லோரையும் போல இந்த ஆலயத்தில் அனுமதிக்கப்படுகிறார்களோ அதற்குப் பிறகுதான் நான் இந்தக் கோயிலில் நுழைவேன்" என்று சூளுரைத்துவிட்டு சென்று விட்டார். 1936 -ம் ஆண்டு சென்னை மாகாணத்தில் நடைப்பெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற ராஜாஜி பிரதமரானார். அப்போதுதான் ஆலயப் பிரவேசச் சட்டம் இயற்றப்பட்டது.
மகாத்மா காந்தியின் கனவை நனவாக்கும் விதத்தில் இந்தக் காலகட்டத்தில் தான் மதுரையில் ஆலயப் பிரவேசம் நடக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயப் பிரவேசத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் முழுமையான ஆதரவும், பக்கபலமும் இருந்தது. அப்போது காந்தியின் சீடராய் மதுரையில் இருந்த வைத்தியநாத ஐயரின் தலைமையில் மீனாட்சி அம்மன் கோயில் பிரவேசம் நடைபெறுவதாய் இருந்தது. ஆனால் இதை எதிர்த்த கூட்டம் சாதாரணமானது அல்ல, 'எதிர்ப்பாளர்களின் கிளர்ச்சியை முறியடிப்போம், ஆலயப் பிரவேசத்துக்கு ஆதரவளிப்போம்' என்று தேவர் அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையும், மீனாட்சியம்மன் கோயில் யானையும் மட்டுமே, வைத்தியநாதர் அய்யர் தலைமையில் ஆலயத்தில் நுழைந்த ஹரிஜன சகோதரர்களுக்கு ஆதரவாய் இருந்தன !
தாழ்த்தப்பட்டவர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக உயர்சாதி இந்துக்களுக்கு அறைகூவல் விடுத்தபோதுதான், காந்திஜி மகாத்மாவானார் !
தாழ்த்தப்பட்டவர்களை உயர் ஜாதியினருக்கு எதிராகப் போராடுங்கள் என்று தூண்டிவிட்டு, அதில் குளிர்காயாமல், உயர் ஜாதியினரைத்
தாழ்த்தப்பட்டவர்களை சமுதாய நீரோட்டத்தில் இணைக்க வற்புறுத்தி வெற்றியும் பெற்றதுதான் மோகன்தாஸ் காந்தி, மகாத்மா காந்தியானதற்க்குக் காரணம். அவரின் அந்தப் போராட்டம்தான், முயற்சிகள்தான், அதன் பிறகு வந்த தலித் இயக்கங்களுக்கு அடித்தளமாக அமைந்தது.
(-நன்றி இது, 'தினமணி' ஆசிரியர் கோ.வைத்தியநாதன், மதுரை
வைத்தியநாத அய்யர் 57 வது நினைவுநாள் நிகழ்ச்சியில் சொற்பொழிவாற்றியது)
உண்மை நிலைமை இவ்வாறிருக்க, ஏன் இந்தப் புழுக்கள் இத்துனை துவேஷத்தை என் மோகன்தாஸ் மேல் காட்டுகிறது ? மோகன்தாஸ் இருந்த ஒரே காரணத்தினால்தானே சுதந்திரப் போர் ஒற்றுமையாக நிறைவேறியது ? உலகமே மதித்தாலும், உள்ளூரில் அந்தப் புழுக்களைப் போல சில துவேஷிகள் இருந்ததினால்தானே, கோட்சே வால், அந்தப் புனிதரை கொல்ல முடிந்தது ?
காந்தி இந்துவெறியர் என்றால் ஏன் ஓர் இந்துவால் கொல்லப்பட்டார் ?
காந்தி ஜாதிவெறியர் என்றால் புழுக்கள் நீங்கள் ஏன் 'பிராமிண' மாயையில் இருந்து இன்னும் மீளவில்லை ?
மலப்புழுக்கள் நாம் உண்ட உணவையே உண்டு நமக்கே வயிற்று வலியை உண்டு பண்ணும், அதைத்தான், அந்த வலியைத்தான் மோகன்தாஸ் பக்தர்கள் நாங்கள் அனுபவிக்கிறோம்
இந்த மலப்புழுக்களால் !!!
--- போதும் ---
மலத்தில் பொறுக்கிய அரிசி என்று காந்தியத்தை விமர்சித்த, மதிமாறன் போன்றோருக்கு சரியான பதிலடி, நண்பரே! தொடரட்டும்!
பதிலளிநீக்குநன்றி கணேசன், நீங்கள் அன்று கொடுத்த லிங்க் படித்ததில் இருந்தே மனதை உறுத்தி கொண்டே இருந்தது, தக்க சமயத்தில் தினமணி ஆசிரியர் வைத்யநாதனின் இந்த உரைதான் என்னை கொஞ்சம் ஆறுதல் படுத்தியது, அதையே இங்கும் பகிர்ந்தேன் !
நீக்குநம் நாட்டில் லஞ்சம் வாங்கும் இடத்தில் எல்லாம் மகாத்மா புன்னகைத்துக் கொண்டிருக்கிறார். ஒன்று லஞ்சம் வாங்குபவர்கள் திருந்த வேண்டும் இல்லையேல் குறைந்தபட்சம் படங்களையாவது எடுத்துவிட வேண்டும். சந்திரனுக்கான சரியான பதிலடி இந்திரன்.
பதிலளிநீக்குலஞ்சம் வாங்குவது என்றுமே ஒழியாது ! அதேபோல் நோட்டில் காந்தியை அச்சடிப்பதும் நிற்காது, ஏனென்றால் லஞ்சம் வாங்குபர்கள்தான் ரூபாய் நோட்டில் காந்தியையே அச்சிடச் சொல்கிறார்கள், அவர்களை பார்த்தே காந்தியும் ஓயாமல் சிரிக்கிறார் !
நீக்குமிக அற்புதமான பதிவு, பல ஆண்டுகளாய் காந்தியை தூற்றும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது, அவர்களுக்கு காந்தியைப்போன்று சொல்லும் செயலும் ஓன்றாய் ஒருநாள் கூட வாழமுடியாது. எந்த போலித்தனமும் இல்லாமல் எல்லா நிமிடமும் ஒரு மனிதன் வாழ்ந்தான் என்றால் அது நம் காந்தி மகான் மட்டும்தான். இந்தியாவில் காந்தி வரும் வரை சுதந்திரபோராட்டம் என்பது ஏதோ சில வக்கீல்கள் கூடிப்பேசி சுயராஜ்யம் கேட்டுகும் சம்பிரதாயம்தான் இருந்தது, காந்தி வந்த பின் தான் அது மக்கள் போராட்டம் என்று மாறியது. இன்னும் கூட ஆங்கில ஆட்சிதான் நல்ல ஆட்சி என்று சொல்லும் மூடர்கள் இருக்கும் நாடுதானே நம்முடையது. ஜெயமோகன் காந்தியைப்பற்றி நிறைய சம்பவங்களை எழுதி இருக்கிறார்.
பதிலளிநீக்குyes, you are sent persent correct sir.
நீக்கு