சாரு தவறாய் புனையப்படும் ஒரு பொக்கிஷம்
சாருநிவேதிதா, தமிழில் தவிர்க்கப்படவே கூடாத எழுத்தாளர், ஆனால் எப்படியாகிலும் அவரை விரட்டவேண்டும் என்ற கங்கணத்துடன் சதிவலைகளை பின்னியவாறே பெருங்கூட்டமொன்று அவரைத் தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது !
அக்கூட்டத்தினர்களால் 'சைக்கோ, லூசு, பொம்பள பொறுக்கி, அரைவேக்காடு, பில்டப் பீதாம்பரம், இன்டர்நெட் பிச்சைக்காரன்
Mr .நெட் ஸ்கேன்டல்'.....இன்னும் பல பட்டம் சூட்டப்பெற்றிருக்கிறார். அதேநேரத்தில் தமிழகத்தில் இருக்கும் மிக மிக
முக்கியப் பிரமுகர்கள் கூட இவரின் தீவீர விசிறியாக இருக்கின்றனர். இருந்தும் ஏனோ வெளிப்படுத்திக் கொள்ள தயங்குகின்றனர், அல்லது அதீத உரிமையுடன் பேசுவதாய் எண்ணி அவரைக் காயப்படுத்துவதில் உவகை கொள்கின்றனர். சாரு, வீற்றிருந்த மேடையிலேயே மிஸ்கின் அவரை குடிகாரர் என்றார், ஞாநி, விடலைகளை நம்பி ஏமாறுகிறார் என்கிறார் !
ஆனால், வரலாறு பிற்காலத்தில் இவரை வேறுவிதமாய்ப் பார்க்கப் போகிறது, என்று அந்த மூடர்களால் புரிந்து கொள்ளவே முடியவில்லை, அல்லது புரிய மறுக்கின்றனர். ஆம், தமிழ்நூல்கள் படிக்கும் இளைஞர்கள் மத்தியில், ஓர்
உச்ச நட்சத்திரமாகவே இப்போது இவர் மதிக்கப்படுகிறார் என்றால் இதில்
கடுகளவும் பொய்யில்லை.
சாக்ரடிஸ், இளைஞர்களை திசைதிருப்பி தவறான அறிவுரைகளால்
பாழ்படுத்தினார் எனச் சொல்லி தண்டனை கொடுத்த ஓர் அதிகாரக் கும்பல் போன்ற போட்டிக்குழுவால், சாருவும் சமூகக்குற்றவாளி எனச் சித்தரிக்கப்படுகிறார் ! முக்கிய குற்றமாக, சாரு பாலியல் கதைகள் மட்டுமே எழுதுவார் என ஒரு புரளி உண்டு. சாரு பாலியல் கதைகள் எழுதுவது இல்லை, அவர் கதைக்குத்தான் பாலியல் தேவைப்படுவதாய் இருக்கிறது ! வயது வந்தபின் தொற்றிக்கொள்ளும் புதுநோயான இந்தக் காமத்தை இவர் கதைகளில் தன்னுடைய பிரம்மாஸ்திரமாய்ப் பயன்படுத்துகிறார் !
ஒரு பாலியல் மருத்துவர் எவ்வாறு காமத்தைச் சொல்வாரோ, எவ்வாறு
காமத்தின் இடையூறுகளை விவாதிப்பாரோ, எவ்வாறு காமத்தின் சந்தேகங்களைத் தீர்ப்பாரோ, காமப்பிழைகளை எவ்வாறு
சரிப்படுத்துவாரோ, அவ்வாறேதான் சாருவும் செயல்படுகிறார் என்றால்
உங்களால் நம்பமுடியுமா ? நம்பினால் நம்புங்கள், உண்மை அதுதான் !
அவர் கதைகளில் பாத்திரங்கள் சுய இன்பம் செய்து கொள்ளும், யாரிடம்
இன்பம் கிட்டுமோ அங்கு மனமொத்து விட்டால் சமூகபயமின்றி உறவு கொள்ளும், இன்பமோ, துன்பமோ செக்ஸ்தான் வடிகால் என்று நம்பும்,
செக்ஸிற்கு வயதேயில்லை, இயலும் என்றால் எந்த வயதிலும்
கலவி கொள்ளும் இவருடைய கதாபாத்திரம். மேற்கூறிய எல்லாவுமே
பாலியியல் மருத்துவர்களால் பெரிதும் ஆதரிக்கப் படுகின்றன !
அடுத்த குற்றம், இவர் கதையே எழுதுவதில்லை, கட்டுரை அல்லது
டைரிக்குறிப்புகள் மட்டுமே எழுதுகிறார் என்று ! சாரு ஆரம்பத்தில் இருந்தே கதை சொல்லும் பாணியை, அவரே சொல்வது போல, அல்லது அவர் வாழ்க்கையில் நடப்பதைப் போல, அல்லது நடந்ததைப் போல, கதாப்பாத்திரத்தை உருவகப்படுத்துகிறார் ! இது ஒரு முறை, பின்நவீனத்துவம் என்கிற ஓர் அழகியல்.
வழக்கம் போல ஒரு ஊர்ல ஒரு காக்கா என்று பல்லாயிர வருடங்களாய்
கதைவாசித்த ஒரு கூட்டத்தை ஜெயகாந்தனும், சுஜாதாவும்
கொஞ்சமாய் மாற்றிப் பார்த்தனர், ஆனால் அந்தப் ஃபார்முலாவையுமே
உடைத்து, அவர் வாழ்ந்த, சந்தித்த, சிந்தித்த, இன்பம், துன்பம், துரோகம், வதை, ஏமாற்றம், ஏழ்மை, குரோதம், போன்றவற்றையே கதைகளுக்குள் சொல்லி, நம்முள் இருக்கும் எல்லா உணர்வுகளையும் மீட்டிவிடுகிறார் !
பகடி, எள்ளல், இவைகளை நகைச்சுவை மிளிர, எளிதாய்ச் சொல்லிப்போகும் பாங்குடையவர், எழுத்தில் சீற்றம், கோபம், எரிச்சல்,
காட்டும் இவர், நேரிலோ சாந்த சொருபி ! மிக மென்மையான குரல் கொண்டவர், அதிர்ந்து பேசவே மாட்டார், வாசகர்களை உயிராய் மதித்து
கொஞ்சமும் அதிகார மமதை முகம் காட்டாது அன்பு காட்டுபவர் !
இவருடைய வாசகன் என்று வெளியில் சொல்வதைக் கவுரவக்குறைச்சல்
என நம்பும் போலிக்கவுரவக் கும்பல் நிறைய உண்டு. ஆனாலும் நான்
இப்போது இவருடைய அதி தீவீர வாசகனாகிப் போனேன் எனச்
சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. என்னைபோல இன்னும் சில ஆயிரம் இளைஞர்க் கூட்டம் இவரைச் சுற்றி பாதுகாப்பு அரணாய் நிற்பதால், இவரை விரட்டத் துடிக்கும் கூட்டம் சிறிது சிறிதாய் மனப்பிறழ்வு கொண்ட நிலையை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது !
'எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது' இவருடைய பத்தி எழுத்தின்
தொகுப்பு, உயிர்மை மற்றும் வேறு இணைய இதழ்களில்
2008 ல் எழுதிய அழகான கட்டுரைகள், இந்தப் புத்தகத்தில் இருந்து சில சுவையான பகுதிகளை மட்டும் தொடர்ந்து இங்கு போடலாமென நினைக்கிறேன் ! வழக்கம் போல உங்கள் ஆதரவைத் தரவும், பிடிக்காததை கருணையே இல்லாமல் தூற்றவும் !!
எதிர் கோஷ்டி
தன்னுடைய எதிரிகளால் எவ்வாறு உருவகப்படுத்தப்பட்டுள்ளார் என்பதை மிக கலகலப்பாகச் சொல்லியிருப்பார் ! பத்தியின் கடைசிப் பாரா மட்டும். இனி பேசுவது திரு,சாரு நிவேதிதா...............
ஒரு எழுத்தாளனைப் பற்றி எப்படியெல்லாம் இமேஜ் உருவாகிறது என்று நினைக்க ஆச்சரியமாக உள்ளது. சென்ற ஆண்டு நடந்த ஒரு இலக்கிய நிகழ்ச்சியில் கனடாவில் வசிக்கும் அந்தப் பெண்ணைப் பார்த்தேன், வந்து பேசினார். பிறகு பேச்சிற்க்கிடையே சொன்னார்......"நான் உங்களுடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் "
' ஓ..........தாராளமாக "
ஆனால் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கு அவர் சொன்ன காரணம் இருக்கிறதே.............அதுதான் நான் சற்றும் எதிர்பாராதது !
"உங்களைப் பார்த்தேன், பேசினேன் என்றால் என் தோழிகள் நம்ப மாட்டார்கள், உங்களிடம் பேசினாலே நீங்கள் 'ரேப்' செய்துவிடுவீர்கள் என்றார்கள் அவர்கள், ஆனால் நீங்களோ பரமசாதுவாக இருக்கிறீர்களே. "
'தோற்றத்தைப் பார்த்து எதையும் நம்பிவிடாதீர்கள்' என்று சொல்ல வாய்
வந்துவிட்டது, நல்லவேளை சொல்லவில்லை !
----- THE END -----
நல்ல முயற்சி பாஸ்! தொடருங்கள்!
பதிலளிநீக்குநன்றி Ganesan !
பதிலளிநீக்குnalla pathuvu anna
பதிலளிநீக்குநன்றி செல்வகுமார்
நீக்கு"ஜெயகாந்தனும், சுஜாதாவும்" சுஜாதாவையும் , ஜெயகாந்தனையும் ஒரேவிதமாக மதிப்பிடுவதை ஏற்க இயலவில்லை.. மற்றபடி அருமையான பார்வை
பதிலளிநீக்குயாரை உயர்த்தி யாரை தாழ்த்த வேண்டுமென்று சொல்கிறீர்கள் ?
நீக்குசுஜாதா புரட்சிகர சிந்தனைகளை விதைக்க சற்று தயங்கினாலும் சொல்லிவிடுவார்(காஷ்மீர் இந்தியாவின் முள்கிரீடம், அதை கழற்றி எறியலாம்) ஜெயகாந்தன் துணிவான கருத்துகள் சொல்ல தயங்கவே மாட்டார். சாரு இவர்களையெல்லாம் விஞ்சி, தன் மனது ஏற்கும் எந்தக் கருத்தையும் சொல்வார்.
நீக்குஅட்டகாசம் ராஜா. கலக்கல்.
பதிலளிநீக்குநன்றி குமார்.
நீக்கு/ஒரு பாலியல் மருத்துவர் எவ்வாறு காமத்தைச் சொல்வாரோ, எவ்வாறு காமத்தின் இடையூறுகளை விவாதிப்பாரோ, எவ்வாறு காமத்தின் சந்தேகங்களைத் தீர்ப்பாரோ, காமப்பிழைகளை எவ்வாறு
பதிலளிநீக்குசரிப்படுத்துவாரோ, அவ்வாறேதான் சாருவும் செயல்படுகிறார் என்றால்
உங்களால் நம்பமுடியுமா ? நம்பினால் நம்புங்கள், உண்மை அதுதான் //
பாலியல் மருத்துவர் என்ன சொல்றாருன்னு இப்போ பார்போம்.
டேய் டேய் டேய் டேய்
திரும்பிப் பார்டா தேவ்டியா பையா
தடவிப் பார்டா தேவ்டியா பையா
தேடிப் பார்டா தேவ்டியா பையா
நேத்து ஒரு ஐட்டத்தைப் பார்த்தேனே
அவளை விடிய விடிய ஓத்தேனே
ஆக்காசவாணி அன்புரத ராணி
டேய் கூதி
ஒரு கேர்ள் ஃபிரண்டைப் பார்த்தேனே
அவளுக்கு முதுகு தேச்சேனே
ஐட்டம் கூதி ஆளுக்கு பாதி
சரோஜா...
she is a bitch man
சரோஜா சாமானை சப்புனது யாரோ
- காமரூப கதைகள் பக்கம் 325
ராஜேந்திரன் சொல்ற மாதிரி நாம் ஏன் சாருவை “பாலியல் மருத்துவர்” என்று அன்புடன் அழைக்கக் கூடாது
[நன்றி செந்தில்க்குமார்]