உங்க ஷாருக்கான் என்ன அவ்ளோவ் பெரிய அப்பாடக்கரா ?
அவரவர்தம் விருப்பங்களும், தேர்ந்தெடுத்தலுமே அவர்களின் சந்தோஷத்தை/துக்கத்தை நிர்ணயிக்கின்றன ! இது ஏதோ சாமியார் கூறிய நல்ல அறிவுரை போல, என்று நீங்கள் பாராட்டினால் அவை அப்படியே என்னை வந்துச் சேரும் ! ஆம், இது என்னால் எப்போதோ ட்வீ ட் செய்யப்பட்ட ஒரு கருத்துத்தான் என்றாலும் இதை எப்போதோ, யாராவதோ கூட சொல்லியிருக்கக் கூடும் ! எதைக் கொண்டு வந்தோம் அதை நம்முடையது என்று சொல்வதற்கு ? சரி, இப்போ எதுக்காக இவ்ளோவ் பில்டப் என்றால், நான் சரியான ஒன்றைத்தான் தேர்ந்தெடுத்துள்ளேன் என்பதை உங்களிடம் பகிர்வதற்க்காகத்தான் ! என்னுடைய மழலைப் பருவத்தில் என் வீட்டில் 'தினத்தந்தி' வாங்குவார்கள், கன்னித்தீவு தொடரை விரும்பி வாசிப்பார்கள் ! விவரம் தெரியும் வரை ரசித்தே வந்த நான், டீனேஜ் தொடங்கும் போதே அந்த நாளிதழின் அதிகப்பிரசங்கித்தனங்களை வெறுக்க ஆரம்பித்தேன்...