எக்சிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும்- CHARU NIVEDITA
சாருவின் இந்த முதல் நாவல், இலக்கியத் தாகமும், புதுமை விரும்பிகளுக்கும் மிகப் பிடித்த ஒன்று. ஒரு தலைமுறைக்கு அப்பாலும் இந்த நாவல் தொடர்ந்து இதுப் போன்ற ஆட்களால் மட்டுமே சிலாகிக்கப்படக் காரணம், சாருவின் 'எழுத்து நடை' (கமா, முற்றுப்புள்ளிகள் இல்லாமல் நீளும் இரண்டு பக்கப் பத்திகள்) மற்றும் வெளிப்படையான 'கதாபாத்திர நிகழ்வுகள்'. . அதேசமயத்தில் என்னைப் போன்ற 'அறம்சார்ந்த' மற்றும் 'பல்ப்' வகை நாவல் வாசிப்பாளர்களுக்கு 'அவைகளே' படிக்கமுடியாமலும், படித்ததை ஜீரணிக்க முடியாமலும், அளவுமீறி மானை விழுங்கிய மலைப்பாம்பைப் போல், தவித்துக்கிடக்க வைத்தன. சாருவுடனான சந்திப்பின் போது இதுபற்றி விவாதித்து விட வேண்டும் என்ற தீர்க்கமான முடிவுகளும், அவரை நேரில் கண்டபின் கிணற்றில் வீசிய கல்லாய் காணாமல் போவது வாடிக்கை ஆனது. சிறுமலையில் வீசிய குளிகாற்று எனக்குச் சாதகமாய் வீசிய அதிர்ஷ்டக் காற்று. 'ஜீரோ டிகிரி' பற்றி பிரவீன் கேட்ட ஒரு கேள்விக்கு பதிலுரைக்க ஆரம்பித்தவர் எதேச்சையாக ஒரு கருத்தைப் பகிர்ந்தார். // நீங்கள் 'வாழ்க்கையில் ஒரு முறையாவது நாகூருக்குச் ...