ஒரு டைமிங் ஸ்டோரி :)
'ஏன் இவ இப்படி வற்புறுத்துரா ? என்னாலதான் ஒழுங்கா எல்லா நாளும் இருக்க முடியாதே ? நடு ராத்திரில மொதல்ல எழுந்திரிக்கவே முடியாது. அப்புறம் சாயங்காலம் முடிக்கப் போகணும், என் ஆபிஸ் பக்கத்துல அதுக்கு எங்க போகணும்ன்னு இதுவரை தெரிஞ்சிகிட்டதில்ல. ஒரு மணி நேரத்துக்கொரு முறை டீ குடிக்கலன்னா தலைவலி வரும். அப்புறம் நைட்டு தூங்க அது வேணும், அதுவும் வேணும், புரிஞ்சி தொலைய மாட்டாளே லூசு, நீதான் இருக்கல்ல, விடேன், நானும் வைக்கணுமாம், பசங்களும் வைக்கணுமாம்.......ஸ்பென்சரைத் தாண்டியவன், பச்சை மஞ்சளாகி சிவப்பானவுடன், தலைக்கு மேல் கையைத் தூக்கி சைகை காட்டியவாறு வண்டியை நிறுத்தினான் இம்தியாஸ். பச்சை ஒளிர்ந்தவுடன் வேகமாக வண்டியை முடுக்கினான். புது வண்டி, முப்பதாவது வினாடியிலேயே எண்பதைத் தாண்டியது. மெட்ரோ வேலைகளில் ட்ராபிக் நெருக்கடி இல்லை, ஆனால் டைவர்ஷன் தெரியாமல் புதிதாய் நுழைபவர்களுக்கு நிறைய குழப்பங்கள் உண்டு, பாவம் அவர்களுக்கு விளக்க ஆட்களும் இல்லை. ஒழுங்கற்ற முறையில் யாராவது சிலர் ஓட்டியபடியேதான் இருந்தனர். தூரத்தில் தாராபோர் டவர் சிக்...