நான் உளறிக்கொண்டே இருப்பேன் !!!
சுடச்சுட மட்டன் பிரியாணியும், உடன் கத்தரிக்காய் மற்றும் வெங்காயப் பச்சடி, முடிவாய் சாப்பிட பிரட்ஹல்வா என்று, இன்றைய மதியத்தை சிறப்பாய் ஆக்கிய நண்பனைக் கட்டிபிடித்து வாழ்த்துக்களை பரிமாறிவிட்டு, அப்படியே குட்டித்தூக்கம் போட்டிருந்தால் நிச்சயம் நிம்மதியாய் இருந்திருப்பேன், ஆனால் நம்ம அரசியல்வாதி லகுடபாண்டிகள் எப்போது நம்மைச் சுகமாக உலவ விட்டிருக்கிறார்கள் ? 'கொஞ்சமாய்த் திருடிக் கொள்ளுங்கள் என்று இருக்கிற ஓரிரு நல்ல அதிகாரிகளையும் லஞ்சம் வாங்க ஊக்குவித்த ஒன்று..... 'தீர்ப்பை விலை கொடுத்து வாங்கலாம்' என்று பணக்காரத் திருடர்களுக்கு நம்பிக்கை ஊட்டிய மற்றொன்று..... இதெல்லாம் ஓல்டு நியூசாச்சா, இன்னிக்கு ஒன்னு ரம்ஜான் ஸ்பெஷலா உளறிருக்கு, உளறின நாயகர் பெயர் 'பேனி பிரசாத் வர்மா' அவர் உதிர்த்த முத்துக்கள் 'விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்து அதனால் அவர்கள் லாபம் அடைவார்கள் என்பதால் பணவீக்கம் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது' என்னங்க, இவர் விவசாயிங்க, நல்லாருக்கனும்னு ஆசப்படுறாரு, அவரப் போயி தப் சொல்றீங்களேன்னு யாராவது கேட்டீங்கன்னா, நீங்க, 'பணவீக்கம் என்றால், ...