வா வா வால்மார்ட் ........!
வால்மார்ட் வருகையால் திவாலாகப் போவது ரிலையன்ஸ் 'ப்ரஷ்' , நீல்கிரிஸ், மோர், பிக்பஜார், இன்னபிற பெரிய 'டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ்' போன்ற ஜாம்பவான்களின் கடைகள் மட்டுமே. பிறகெதற்கு சில்லறைக்கடை வியாபாரிகள் வாழ்வு நாசமாகும், விவசாயிகள் அழிவார்கள், மக்கள் துயருருவார்கள் என்ற கூக்குரல்கள் ? அது உண்மையா...........பார்ப்போமா ? வால்மார்ட் என்பது உலகத்தின் பெரிய டிபார்ட்மெண்டல் கடைகள் அமைக்கும் ஒரு நிறுவனம். கூகுள் சர்ச்சில் நீங்கள் தேடிய எல்லாமே ஏறக்குறைய கிட்டிவிடுமல்லவா ? அதுபோல, இந்தக் கடையில் உங்களுக்கு வேண்டுவன உலகில் எந்த மூலையில் இருந்தும் கொண்டுவந்து கொடுக்கப்படும். எத்தனை கார்கள், எத்தனை பைக்குகள் வேண்டுமானாலும் நிறுத்திக் கொள்ள பார்க்கிங் வசதி இந்தக் கடையில் இருக்கும். பொருட்களை நீங்கள் கிஞ்சித்தும் சுமக்காமல், கேட்டதை உங்கள் காலடியில் வந்து கொட்ட பணியாட்கள் டை கோட்டுடன் வலம் வருவர். எல்லாக் கார்டுகளும் ஏற்கப்படும். வங்கி...