காந்தஹாரும் சில உண்மைகளும் !!!
கி.பி.1999 ல், கண்டிப்பாக நீங்கள் பிறந்திருப்பீர்கள். டெல்லியை ஜெயலலிதா பாஷையில் சொன்னோமானால் மைனாரிட்டி வாஜ்பேயி அரசு ஆண்டுக் கொண்டிருந்தது. நேபாளத்தில் இருந்து டெல்லியை நோக்கி கிளம்ப ஏர்-இந்தியா இல்லையில்லை இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கிளம்பத் தயாராகிறது. பயணிகளில் பெரும்பாலோர் நன்கு சுற்றிக் களைத்து இன்னும் சில மணி நேரங்களில் ஊர் சென்று குழந்தைகளை/மனைவியை/அம்மாவை/யாரையோ பார்த்துவிடுவோம் என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் குபுக் என்று விமானம் விண்ணில் தாவுகிறது. அதன்பின், கந்தசாமி தலைமையில், ராமசாமி, டேவிட்பில்லா, சித்தார்த்தன், மகாவீர்ஜெயின், ஹர்பஜன்சிங் போன்ற பயங்கரவாதிகளால் அந்த விமானம் கடத்தப்படப் போவதாகவும், இனி எங்கள் கட்டுப்பாட்டில் அமைதியாக இருந்தால் உயிர் அல்லது சாவு என்று எச்சரிக்கை பிறப்பிக்கப் படுகிறது. பயணிகள் முகத்தில் சவக்களை அப்பியது. பைலட்டுகளிடம் விமானத்தை துபாய் நோக்கி செலுத்துமாறு கந்தசாமி மிகத் தாழ்மையுடன் கோரிக்கை வைக்கிறார். பைலட் மிகத் திமிராக, 'அவ்ளோவ் தூரம் போறதுக்கு பெட்ரோல் இல்ல' என்கிறார...