இதெல்லாம் ஒரு பெருமையா பாஸ் ?
ஐயா/அம்மா, நீங்கள் கொங்கு வேளாளரா ? வீர வன்னியரா ? மறவரா....கள்ளரா.....செங்குந்த முதலியாரா, பிள்ளைமாரா.....நாடாரா........நாயக்கரா....விட்டுப்போன பிற ஒசந்த சாதியினரா ? உங்களுக்காக மட்டுமே இப்பதிவு. முதலிலேயே ஒப்புக்கொள்கிறேன் எனக்கும் சாதி அடையாளம், அதனால் கிடைக்கும் சலுகைகள் எல்லாம் உண்டு. ஆனால், ஒரு போதும் எனக்கு கீழான சாதியையோ, மேலான சாதியையோ.......(இந்த வாக்கியத்தையே வெறுக்கிறேன்) ஏகத்துக்கும் புகழவோ / தூற்றவோ தோன்றியதேயில்லை. காந்தியின் அன்புக்குரியவராக இருந்த 'பெரியார்’ ஒரே ஒரு கொள்கைக்காக காந்தியை பெரிதும் எதிர்த்தார். அது என்னவென்றால், 'ஆதிக்கச் சாதியினரின் அடாவடிகளில் இருந்து அப்பாவிகளை மீட்டுவிட்டு பிறகு வெள்ளையனை விரட்டலாம், முதலில் இங்கு வேண்டியது சமூக விடுதலை' என்றார். ஆனால் மகாத்மா, 'முதலில் நாடு நமதாகட்டும், நமது ஆனபின்னர் எல்லோரும் சமமென அறிவிக்கலாம்' என்றார். இருவருக்கும் நோக்கம் விடுதலைக்காக இருந்தது. (நன்றி -தமிழ்மகன்) உன்னுடன் வாழும் சக இனத்தவனையே கொஞ்சமும் கூசாமல், 'நீ எனக்குத் தாழ்ந்தவன், அடங்கிக் கிட' ...