இறைவனிடம் கையேந்துங்கள் !!!
ஊடக நடுநிலைவாதிகள், அறிவுஜீவிகள், மாமேதைகள்.......எப்போதுமே சினிமாக்காரர்களை நோக்கி கேட்கும்/கேட்ட சில கேள்விகள் :- // இப்படியெல்லாம் இவர்களை மோசமாக சித்தரிக்கிறார்களே.........’பாமர ரசிகன்’ இவர்களைப் பற்றி என்ன நினைப்பான் ? // // எங்களை கட்டி வைத்து அடித்ததைப் போல் வலிக்கிறதே, இப்படி அராஜகமாய்ப் படமெடுப்பவர்களின் படத்தை கூட்டம் கூட்டமாய் பார்க்கும் ’முட்டாள்களே’ திருந்தமாட்டீர்களா ? // // சினிமாவில் பயங்கரவாதிகளாக எங்களையே காட்டுவதால், எங்களுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பதில்லை, வேலை கிடைப்பதில்லை, சமூகத்தில் ஒதுக்கிவைக்கப்படுகிறோம், ’இரக்கமேயில்லையா’ உங்களுக்கு ? // உண்மையில், சமீபத்தில் பெங்களூருவில் வெடித்த குண்டுவெடிப்பை ஒரு நாடகமாகத்தான் நினைத்தேன். வீழ்ச்சி நிலையில் இருந்த பா.ஜ.க தான், பச்சாதாப அலைகளை உருவாக்கி, சட்டசபையைக் கைப்பற்ற இந்த ‘வெடிகுண்டு’ விளையாட்டை நடத்தியிருக்கக் கூடும் என நம்பினேன். ஆனால், இந்த வெடிகுண்டு வழக்கில், கர்நாடக போலீஸ் எடுக்கும் தொடர் நடவடிக்கைகளை பார்க்கும்போது மிகவும் மனம் வலிக்கிறது. ஒருவரைக் கைது செய்வதாலேயே அவ...