சஞ்சாரம்
சஞ்சாரம் - எஸ். ராமகிருஷ்ணன் (உயிர்மை பதிப்பகம்) ============================================ ’சஞ்சாரம்’ நாவல் வெளியீட்டு நிகழ்வு, மிக எளிமையாக, ஆனால் நினைக்கும் போதெல்லாம் இனிக்கும் ஓர் அனுபவத்தைக் கொடுத்துவிட்டது. சஞ்சாரம் எனில் ’இசை உலா’ & ’முடிவில்லா ஊர் சுற்றல்’ எனச் சிலவகைப்படும், என்று எளிய அறிமுக உரையோடு நிகழ்வை தொடங்கி வைத்தார் மனுஷ்யபுத்திரன். (பல புத்தக வெளியீட்டுகளை பத்து நாட்களுக்கு மேலாக தொடர்ந்து நிகழ்த்தி வருகிறார், ஒரே ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துவிட்டு அதை நடத்தி முடிப்பதற்குள் படாதபாடு பட்டுவிடும் நமக்கு, இவருடைய இந்த அயரா உழைப்பு, பெருவியப்பையும், அவர் மீது காதலையும் ஒருசேரத் தந்தது) முதல் நிகழ்வாக, திரு.ரவி சுப்ரமணியன், சில இலக்கிய ஆளுமைகளின் கவிதை மற்றும் சங்க காலப்பாடல்களை மிக மிக அழகாகப் பாடிக் காண்பித்தார், நிஜமான மார்கழி சீஸன் சபா கச்சேரியை அனுபவிப்பதற்கொப்பானதாக அமைந்து போனது அவரின் குரல். அடுத்து பேச வந்த டாக்டர் கே. எஸ். சுப்ரமணியன் நூல் வெளியீடுகளில் வழக்கமாய்ப் பலரும் செய்வதைப்போல, நூலை பார்த்துப்.......பார...