இடுகைகள்

2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழகத் தேர்தல் 2016 முடிவுகள் கருத்துக்கள் !

படம்
இதை ஓர் ஆவணமாக பிற்காலங்களில் பயன்படுத்தப் போகிறேன்.  என்ன காமெடியாக இருக்கப் போகிறதென்றால், இன்னும் இருபது வருடங்கள் கழித்து, இந்த புள்ளிவிவரங்களை, தகவல்களை....... நானோ, அல்லது பிறரோ வாசிக்க நேர்கையில், ’அட இவங்கெல்லாமா தேர்தல்ல கலந்துக்கிட்டிருந்திருக்காங்க ?’ என்றோ.......... ‘பாரேன் அப்ப இவங்க இவ்வளவுதான் வாக்குகள் வாங்கியிருந்திருக்காகங்க’ என்றோ............ ‘ம்ம்ம்ம்ம் சராசரியா 40 விழுக்காடு வாக்க வாங்கி ஆண்டக் கட்சியா இருந்துட்டு, இப்ப ஒண்ணு ரெண்டு சீட்டக் கூடக் கொடுத்து யாராவது கூட்டணியில சேத்துக்க மாட்டாங்களான்னு ஏங்கிட்டு கெடக்கறது ?’ என்றோவெல்லாம் நிச்சயம் வியக்குமளவுதான் இருக்கப் போகிறது என்பதில் சந்தேகமில்லை. கீழே பட்டியலிடப்போகும் கட்சி அல்லது தலைவர்கள் எல்லாம் இந்த 2016 தமிழகச் சட்டசபைத் தேர்தலில் கூட்டணியாகவோ, தனியாகவோ களம் காண்கிறார்கள்.  யார் யார் எந்தக் கூட்டணியில் இணைந்து எத்தனை விழுக்காடு வாக்கு மற்றும் தொகுதிகள் வென்றார்கள் என்றும், எத்தனை விழுக்காடு வாக்குகள் மட்டுமே வாங்கி தோற்றிருக்கிறார்கள் ? உத்திரவாதத் தொகைகளை இழந்தவர்களெல...