குஜராத் திரைக்குப் பின்னால்
’ குஜராத் திரைக்குப் பின்னால் ’ நூல் மதிப்புரை எழுதியது : ராஜா ராஜேந்திரன் அறமெனும் ஆயுதம் ' குஜராத் திரைக்குப் பின்னால் ' ஆசிரியர் -ஆர். பி. ஸ்ரீகுமார், I. P. S. Retd. கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீகுமார், இந்தக் கட்டுரைத் தொகுப்பை ஆங்கிலத்தில் எழுதி, அதை 2015- டிசம்பரில் வெளியிட்டிருக்கிறார். 2017 -நவம்பரில் இதை அழகுத் தமிழில் மிக நேர்த்தியாக மொழி பெயர்த்திருப்பவர்கள் தஞ்சை திரு. ரமேஷ் மற்றும் திரு. ச.வீரமணி அவர்கள். ஸ்ரீகுமார், இந்தியக் காவல் துறைப் பணிக்குத் தேர்வாகி குஜராத்திற்குப் பணிபுரியப் போனவர் (டெல்லியில் பணிபுரிந்த சில மாதங்களைத் தவிர்த்துப் பார்த்தால்) இறுதிவரை குஜராத்திலேயே பல உயர் பதவிகளை வகித்து ஓய்வும் பெற்றிருக்கிறார் ! அனைத்துப் பதவிகளிலும் தன் நேர்மைக்காக நற்பெயரெடுத்தவர் ஆர்.பி.ஸ்ரீகுமார். ஆனால் காவல்துறையில் தலைமைப் பதவி நோக்கி, சிகரம் நெருங்கிக்கொண்டிருந்த வேளையில், கண்ணெதிரே ஒரு பேரவலத்தை கைக்கட்டி நின்று பார்க்க நேரிடுகிறது. இயன்றவரை அதைத் தடுக்கப் போராடியும், சக அதிகாரிகளின் ஒத்துழைப்பில்லாது, எது நடக்கக்கூடும...