இடுகைகள்

வா வா வால்மார்ட் ........!

படம்
வால்மார்ட் வருகையால் திவாலாகப் போவது ரிலையன்ஸ் 'ப்ரஷ்' , நீல்கிரிஸ், மோர், பிக்பஜார், இன்னபிற பெரிய 'டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ்'  போன்ற ஜாம்பவான்களின் கடைகள் மட்டுமே.    பிறகெதற்கு சில்லறைக்கடை வியாபாரிகள் வாழ்வு  நாசமாகும், விவசாயிகள் அழிவார்கள்,  மக்கள் துயருருவார்கள் என்ற கூக்குரல்கள் ?   அது உண்மையா...........பார்ப்போமா ? வால்மார்ட் என்பது உலகத்தின் பெரிய டிபார்ட்மெண்டல் கடைகள் அமைக்கும் ஒரு நிறுவனம்.  கூகுள் சர்ச்சில் நீங்கள் தேடிய எல்லாமே ஏறக்குறைய கிட்டிவிடுமல்லவா ?  அதுபோல, இந்தக் கடையில் உங்களுக்கு வேண்டுவன உலகில் எந்த மூலையில் இருந்தும் கொண்டுவந்து கொடுக்கப்படும்.  எத்தனை கார்கள், எத்தனை பைக்குகள் வேண்டுமானாலும் நிறுத்திக் கொள்ள பார்க்கிங் வசதி இந்தக் கடையில் இருக்கும்.  பொருட்களை நீங்கள் கிஞ்சித்தும் சுமக்காமல், கேட்டதை உங்கள் காலடியில் வந்து கொட்ட பணியாட்கள் டை கோட்டுடன் வலம் வருவர்.  எல்லாக் கார்டுகளும் ஏற்கப்படும்.  வங்கி...

கப்பலோட்டிய தமிழன்

படம்
இன்று கப்பலோட்டிய தமிழன் பிறந்தநாள்.  இவரைப் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது.  எனினும், இவரைப் போன்ற நிஜக் கதாநாயகர்களைப் பற்றி, பேசிக் கொண்டே இருக்க வேண்டும்.  ஒன்றிரண்டு தெரியாதவர்கள் கூட அறிந்துதான்  ஆக வேண்டும் என்பதற்காக இந்த மிகச் சுருக்கமான பதிவு.  (பிறந்தநாள் அன்றாவது நினைக்கிறார்களே என்று அந்த ஆத்மா நிம்மதியாய் உலவட்டும்) பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதிகளிலும், இருபதாம் நூற்றாண்டு ஆரம்பங்களிலும்தான், நம் நாட்டில் சுதந்திர வேட்கை வீறு கொண்டது.  விடுதலைப் போரில், கோபாலகிருஷ்ண கோகுலே, பாலகங்காதர திலக், போன்ற முன்னோடி வீரர்களின் போட்ட,  பலமான அஸ்திவாரத்தில், மோகன்தாஸ், ஜவஹர்லால், பாரதியார், நேதாஜி போன்றோர் வீரமான கட்டிடத்தை எழுப்பினார்கள். மகாத்மா, வெள்ளையனுக்கு எதிரான போரில்,  தன்னுடைய புதுப் புது அஸ்திரங்களை எய்துக் கொண்டே இருந்தார்.  அதில் ஒரு சிறந்த  அஸ்திரம்தான் சுதேசிக் கொள்கை.  அது சரி, சுதேசி என்றால் என்ன ?  சுதேசி = சுய தேஷ் = சொந்தநாடு அவ்வளவுதான். வெள்ளையன், நம்முடைய பாரம்பரிய பயிர் முறைகளை பயிர...

நான் உளறிக்கொண்டே இருப்பேன் !!!

படம்
சுடச்சுட மட்டன் பிரியாணியும், உடன் கத்தரிக்காய் மற்றும் வெங்காயப் பச்சடி, முடிவாய் சாப்பிட பிரட்ஹல்வா என்று, இன்றைய மதியத்தை சிறப்பாய் ஆக்கிய நண்பனைக் கட்டிபிடித்து வாழ்த்துக்களை பரிமாறிவிட்டு, அப்படியே குட்டித்தூக்கம் போட்டிருந்தால் நிச்சயம் நிம்மதியாய் இருந்திருப்பேன், ஆனால் நம்ம அரசியல்வாதி லகுடபாண்டிகள் எப்போது நம்மைச் சுகமாக உலவ விட்டிருக்கிறார்கள் ? 'கொஞ்சமாய்த் திருடிக் கொள்ளுங்கள் என்று இருக்கிற ஓரிரு நல்ல அதிகாரிகளையும் லஞ்சம் வாங்க ஊக்குவித்த ஒன்று..... 'தீர்ப்பை விலை கொடுத்து வாங்கலாம்' என்று பணக்காரத் திருடர்களுக்கு நம்பிக்கை ஊட்டிய மற்றொன்று..... இதெல்லாம் ஓல்டு நியூசாச்சா,  இன்னிக்கு ஒன்னு ரம்ஜான் ஸ்பெஷலா உளறிருக்கு,  உளறின நாயகர் பெயர் 'பேனி பிரசாத் வர்மா' அவர் உதிர்த்த முத்துக்கள் 'விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்து அதனால் அவர்கள் லாபம் அடைவார்கள் என்பதால் பணவீக்கம் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது' என்னங்க, இவர் விவசாயிங்க, நல்லாருக்கனும்னு ஆசப்படுறாரு, அவரப் போயி தப் சொல்றீங்களேன்னு யாராவது கேட்டீங்கன்னா, நீங்க, 'பணவீக்கம் என்றால், ...

இந்தியச் சுதந்திரதினத்தை நான் ஏன் கொண்டாட வேண்டும் ?

படம்
நீங்கள் ஒரு இந்தியப் பெண்ணாயிருந்தால்.... நீங்கள் தாழ்த்தப்பட்டவராயிருந்தும், பிற்படுத்தப்பட்டவராயிருந்தும், ஆதிவாசியிருந்தும், ஏழையாயிருந்தும் படித்திருந்தால் .... ஆதிக்கச் சாதியில் பிறந்திருந்தால்.... இந்துவாயிருந்தால்..... இந்து அல்லாத வேற்று மதத்தினராய் இருந்தால்..... தமிழ் நாட்டில் வாழும் வேறு மாநிலத்தவராய்  இருந்தால்.... இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழும் தமிழனாய் இருந்தால்.... நாத்திகராய் இருந்தால்.... அரசியல்வாதியாய் இருந்தால்.... ஊழலை வெறுக்கும் கருத்துச்சுதந்திர வீரனாய் இருந்தால்.... ரொம்ப இழுத்தாச்சு, நீங்க இந்தியனா இருந்தா, ஏன் இந்தியாவுல இருக்கிற அன்னியனா இருந்தாலும் சரி, இந்தியச்  சுதந்திர தினத்தை  நீங்கள் மிகு உற்சாகமாக  கொண்டாடியே ஆகவேண்டும்.  முடியாது, இந்தக் கொண்டாட்டத்தை மறுக்கும் சுதந்திரம் எனக்குள்ளது என்று நீங்கள் கொதித்தால் அது, கொண்டாடும் நாங்களோ, அல்லது என் தாய்நாடோ உங்களுக்குப் போட்ட பிச்சை.  பிச்சைக்...

உத்தம எழுத்தாளனாக ஆவது எப்படி ?

தனிக் குடித்தன மனைவி பேறுகாலத்தில் பிரியும் போதுதான், சில விரும்பக்கூடிய, பலர் வெறுக்கக் கூடிய, விபத்துகள் நடந்து விடுகின்றன,  எனக்கு நிகழ்ந்ததா இல்லையா என்பது,  என்னை விட உங்களுக்குத்தான் முதலில் தெரியப்போகிறது.  இருங்கள், மிருதுளா உள்ளே நுழைகிறாள், நீங்கள் கொஞ்சம் அப்புறமாய் வாருங்கள். "இந்தாங்க டின்னர், நீங்க கேட்டா மாதிரி சிம்பிளா எடுத்துட்டு வந்திருக்கேன்" மிருதுளாவின் குரல் பெயருக்கு ஏற்றார் போல மிருதுவாகவெல்லாம் இல்லை, லேசாய் நம்ம அங்காடித் தெரு அஞ்சலி போலத்தான் இருக்கும், ஆனால் என்னுடன் பேசும்போது மட்டும் அவள் குரலில் கொஞ்சம் தேனைக் குழைத்துப் பேசுவாளா......அடடா அந்த கிக் எந்த சரக்கிலுமே கிடைக்காது.  மரபுப்படி இங்க மிருதுளாவை வர்ணிக்கணும், ஆனா குரலிலேயே இவ்வளவு போதை இருக்கிறப்போ, அதெதுக்கு வெட்டியா ?  உங்களுக்குப் புடிச்ச செம கட்டைய கற்பனை பண்ணிக்குங்க, அதுசரி, உங்களைத்தான் அப்பவே போகச் சொல்லிட்டேனே ? "யேய், நான் வேணாம்னுதாம்பா சொன்னேன், சாப்டுட்டேனே" என்றேன்.  இப்படி சீண்டினால்தான்  அவள் முறைக்கும் சாக்கில் தலையை சாய்த்து ஒரு பா...

ஒரு டைமிங் ஸ்டோரி :)

'ஏன் இவ இப்படி வற்புறுத்துரா ?  என்னாலதான் ஒழுங்கா எல்லா நாளும் இருக்க முடியாதே ?  நடு ராத்திரில மொதல்ல எழுந்திரிக்கவே முடியாது.  அப்புறம் சாயங்காலம் முடிக்கப் போகணும், என் ஆபிஸ் பக்கத்துல அதுக்கு எங்க போகணும்ன்னு இதுவரை தெரிஞ்சிகிட்டதில்ல. ஒரு மணி நேரத்துக்கொரு முறை டீ குடிக்கலன்னா தலைவலி வரும்.  அப்புறம் நைட்டு தூங்க அது வேணும், அதுவும் வேணும், புரிஞ்சி தொலைய மாட்டாளே லூசு,  நீதான் இருக்கல்ல, விடேன், நானும் வைக்கணுமாம், பசங்களும் வைக்கணுமாம்.......ஸ்பென்சரைத் தாண்டியவன், பச்சை மஞ்சளாகி சிவப்பானவுடன், தலைக்கு மேல் கையைத் தூக்கி சைகை காட்டியவாறு வண்டியை நிறுத்தினான் இம்தியாஸ். பச்சை ஒளிர்ந்தவுடன் வேகமாக வண்டியை முடுக்கினான்.  புது வண்டி, முப்பதாவது வினாடியிலேயே எண்பதைத் தாண்டியது.  மெட்ரோ வேலைகளில் ட்ராபிக் நெருக்கடி இல்லை, ஆனால் டைவர்ஷன்  தெரியாமல் புதிதாய் நுழைபவர்களுக்கு நிறைய குழப்பங்கள் உண்டு, பாவம் அவர்களுக்கு விளக்க ஆட்களும் இல்லை.  ஒழுங்கற்ற முறையில் யாராவது சிலர் ஓட்டியபடியேதான் இருந்தனர்.  தூரத்தில் தாராபோர் டவர் சிக்...

மன்னிக்கவும் இது ஒரு சுயதம்பட்டம் :(

அம்மா சென்டிமென்ட்டை விட உலகில் வேறேதும் பெரிய பாசப்பிணைப்பு இருந்துவிட முடியுமா என்ன ? என் தாய் என்னை மிகச் செல்லமாக, எல்லாச் சுதந்திரமும் கொடுத்து, அந்தச் செய்கையின் விளைவால் நிகழும் சங்கடங்களைச் சகித்து, தியாகத்தை உணர்த்தியவள். அப்பேற்பட்ட தாயே, மாமியார் எனும் ஒரு பதவி உயர்வு கிடைத்தவுடன், அதிகார போதையில், சற்றேத் தடுமாறி, என் மனைவியைக் கட்டுப்படுத்துவதாய் எண்ணி, என் உரிமையில் தலையிட ஆரம்பித்தாள்.  (வாரம் வாரம் அதென்ன சினிமா, நீதான் அவனுக்கு எடுத்துச் சொல்லணும், ஒரு பொண்ணு தலையில இத்தனை பூவ வச்சிட்டு, நக நட்ட போட்டுட்டு நைட்டு பன்னெண்டு மணிக்கு வந்தா என்ன அர்த்தம்,  வெளில சாப்டுட்டு வரணும்னு காலைலயே முடிவு பண்ணிருப்பீங்க,  அதச் சொல்லித் தொலச்சிருக்கலாம்ல்ல, ஏன் ஞாயித்துக் கிழம இப்படித் தூங்குறான், முன்னெல்லாம் இப்படியில்லையே....? நான் இன்றும் என் தாயை உயிராய் நேசிக்கிறேன், அம்மா பெயர் பொறித்த பலகையைத் தாங்கிய வீட்டைக் கட்டி, அங்கு அம்மாவின் கையால் பால் காய்ச்சி, வசிக்கவைத்து மகிழ்ந்தேன்.  ஆனால், என் கட்டுப்பாடற்ற சுதந்திரத்திற்காக, தாயைப் பிரிந்து வாடகை வீட்...