இடுகைகள்

இந்தக் கதை எழுதியதற்கு நான் வெட்கப்படுகிறேன். மன்னித்து விடுங்கள் :-((

ஆக்ரோஷத்துடன் இருந்த அந்த இளைஞர்கள் கூட்டத்தைப் பார்க்கும்போதே மனதுள் கொஞ்சம் கிலி பரவியது.  இத்தனை நாட்களுக்குப் பிறகும் இதெப்படி இந்த நெருப்பு இன்னும் அணையாமல் இருக்கிறது என அர்விந்த் ரதோர் ஆச்சர்யப்பட்டான்.  கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் முடியப் போகிறது, அக்கோரச் சம்பவம் நடந்து.  நேர்மையான, துணிவான அதிகாரிதான் இந்தக் கொடூரத்தை விசாரிக்கவேண்டும், இதற்கு சரியான ஆள் இவர்தான் என்று பலரின் ஏகோபித்த ஆதரவுடன், கடைசியாய் அர்விந்த் தேர்ந்தெடுக்கப்பட்டான்.  அதன்படியே, அர்விந்த் மிகச் சரியான கோணத்தில், எந்த அரசியல் இடையூறுமின்றி, சாட்சிகளை சரியாகச் சேர்த்து, அந்தக் கொடுமைக்காரர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்களை அடுக்கி வைத்திருந்தான்.  நாடு முழுக்க பெருங்கோபத்தை கிளறி விட்ட இந்த பாலியல் வன்முறை வழக்கு, விரைவு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு வருவதால், இன்னும் ஓரிரு வாரத்தில் தீர்ப்பு வரும் நிலையை எய்தியுள்ளது.  நிச்சயம் ஒரு குற்றவாளி கூட தப்ப முடியாத அளவு, வலையைப் பின்னியிருந்தான் அர்விந்த்.  செண்டிமெண்ட் கேஸ் வேறு என்பதால் அதிகபட்ச தண்டனையை பெறுவார்கள் என அர...

குயிலினிது குழலினிதென்பார்.......

படம்
பெருந்திடுக்கிடலோடு விழித்தெழுந்தமர்ந்தேன்...... தீங்கனவுமில்லை எவரும் எழுப்பியிருக்கவுமில்லை....... க்ரிக் க்ரிக் க்ரிக் க்ரிக் ரீங்காரமட்டும் எங்கோரத்திலிருந்து கசிந்தோடிக் கொண்டிருந்தது ! நா வறண்டு குளிர்ந்த நீர்க் கோர....... அடுக்களை சென்று ஸ்விட்சைப் போட்டேன்...... வெள்ளமென வெளிச்சம் பாய பாய்ந்து பதுங்கின கரப்பான்கள் ஏழெட்டு ! தேகம் கூசி அருவெறுப்பில் சிலிர்த்தேன்...... இவ்வுலகில் வெறுக்கப்படும் தலையாய ஜந்தல்லவா அது...... தாகத்தை தவிக்க விட்டுவிட்டு பூச்சிக்கொல்லி திரவத்தை பார்வையால் துழாவினேன் ! மழலைப்பருவத்தில் பாடப்புத்தகத்தில் பெரிதாய் வரைந்திருந்ததை தவறாய் ஊகித்து....... தேனீக்கள் எங்கிருக்கும் என்ற கேள்விக்கு 'கக்கூஸில்' என்று பதிலளித்த..... மீரான்தான் கற்றுக்கொடுத்தான் எப்படியெல்லாம் துன்புறுத்திக் கொல்லலாம் கரப்பான்களை என்று ! என்னை ஓர் அறையில் பூட்டிவைத்து...... ஒரு பறக்கும் கரப்பானை விட்டுவிட்டால் பயத்தில் மரணித்தே விடுவேன்...... அதன் எண்ணற்ற கால்களும் கால்கள் முழுக்க முடிகளும் அரையடி மீசையும் ச்சீ ச்சீ ! ஆத்திரம் தீருமட்டும் தெளித்தவாறே இருந்தேன்......

வா வா வால்மார்ட் ........!

படம்
வால்மார்ட் வருகையால் திவாலாகப் போவது ரிலையன்ஸ் 'ப்ரஷ்' , நீல்கிரிஸ், மோர், பிக்பஜார், இன்னபிற பெரிய 'டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ்'  போன்ற ஜாம்பவான்களின் கடைகள் மட்டுமே.    பிறகெதற்கு சில்லறைக்கடை வியாபாரிகள் வாழ்வு  நாசமாகும், விவசாயிகள் அழிவார்கள்,  மக்கள் துயருருவார்கள் என்ற கூக்குரல்கள் ?   அது உண்மையா...........பார்ப்போமா ? வால்மார்ட் என்பது உலகத்தின் பெரிய டிபார்ட்மெண்டல் கடைகள் அமைக்கும் ஒரு நிறுவனம்.  கூகுள் சர்ச்சில் நீங்கள் தேடிய எல்லாமே ஏறக்குறைய கிட்டிவிடுமல்லவா ?  அதுபோல, இந்தக் கடையில் உங்களுக்கு வேண்டுவன உலகில் எந்த மூலையில் இருந்தும் கொண்டுவந்து கொடுக்கப்படும்.  எத்தனை கார்கள், எத்தனை பைக்குகள் வேண்டுமானாலும் நிறுத்திக் கொள்ள பார்க்கிங் வசதி இந்தக் கடையில் இருக்கும்.  பொருட்களை நீங்கள் கிஞ்சித்தும் சுமக்காமல், கேட்டதை உங்கள் காலடியில் வந்து கொட்ட பணியாட்கள் டை கோட்டுடன் வலம் வருவர்.  எல்லாக் கார்டுகளும் ஏற்கப்படும்.  வங்கி...

கப்பலோட்டிய தமிழன்

படம்
இன்று கப்பலோட்டிய தமிழன் பிறந்தநாள்.  இவரைப் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது.  எனினும், இவரைப் போன்ற நிஜக் கதாநாயகர்களைப் பற்றி, பேசிக் கொண்டே இருக்க வேண்டும்.  ஒன்றிரண்டு தெரியாதவர்கள் கூட அறிந்துதான்  ஆக வேண்டும் என்பதற்காக இந்த மிகச் சுருக்கமான பதிவு.  (பிறந்தநாள் அன்றாவது நினைக்கிறார்களே என்று அந்த ஆத்மா நிம்மதியாய் உலவட்டும்) பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதிகளிலும், இருபதாம் நூற்றாண்டு ஆரம்பங்களிலும்தான், நம் நாட்டில் சுதந்திர வேட்கை வீறு கொண்டது.  விடுதலைப் போரில், கோபாலகிருஷ்ண கோகுலே, பாலகங்காதர திலக், போன்ற முன்னோடி வீரர்களின் போட்ட,  பலமான அஸ்திவாரத்தில், மோகன்தாஸ், ஜவஹர்லால், பாரதியார், நேதாஜி போன்றோர் வீரமான கட்டிடத்தை எழுப்பினார்கள். மகாத்மா, வெள்ளையனுக்கு எதிரான போரில்,  தன்னுடைய புதுப் புது அஸ்திரங்களை எய்துக் கொண்டே இருந்தார்.  அதில் ஒரு சிறந்த  அஸ்திரம்தான் சுதேசிக் கொள்கை.  அது சரி, சுதேசி என்றால் என்ன ?  சுதேசி = சுய தேஷ் = சொந்தநாடு அவ்வளவுதான். வெள்ளையன், நம்முடைய பாரம்பரிய பயிர் முறைகளை பயிர...

நான் உளறிக்கொண்டே இருப்பேன் !!!

படம்
சுடச்சுட மட்டன் பிரியாணியும், உடன் கத்தரிக்காய் மற்றும் வெங்காயப் பச்சடி, முடிவாய் சாப்பிட பிரட்ஹல்வா என்று, இன்றைய மதியத்தை சிறப்பாய் ஆக்கிய நண்பனைக் கட்டிபிடித்து வாழ்த்துக்களை பரிமாறிவிட்டு, அப்படியே குட்டித்தூக்கம் போட்டிருந்தால் நிச்சயம் நிம்மதியாய் இருந்திருப்பேன், ஆனால் நம்ம அரசியல்வாதி லகுடபாண்டிகள் எப்போது நம்மைச் சுகமாக உலவ விட்டிருக்கிறார்கள் ? 'கொஞ்சமாய்த் திருடிக் கொள்ளுங்கள் என்று இருக்கிற ஓரிரு நல்ல அதிகாரிகளையும் லஞ்சம் வாங்க ஊக்குவித்த ஒன்று..... 'தீர்ப்பை விலை கொடுத்து வாங்கலாம்' என்று பணக்காரத் திருடர்களுக்கு நம்பிக்கை ஊட்டிய மற்றொன்று..... இதெல்லாம் ஓல்டு நியூசாச்சா,  இன்னிக்கு ஒன்னு ரம்ஜான் ஸ்பெஷலா உளறிருக்கு,  உளறின நாயகர் பெயர் 'பேனி பிரசாத் வர்மா' அவர் உதிர்த்த முத்துக்கள் 'விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்து அதனால் அவர்கள் லாபம் அடைவார்கள் என்பதால் பணவீக்கம் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது' என்னங்க, இவர் விவசாயிங்க, நல்லாருக்கனும்னு ஆசப்படுறாரு, அவரப் போயி தப் சொல்றீங்களேன்னு யாராவது கேட்டீங்கன்னா, நீங்க, 'பணவீக்கம் என்றால், ...

இந்தியச் சுதந்திரதினத்தை நான் ஏன் கொண்டாட வேண்டும் ?

படம்
நீங்கள் ஒரு இந்தியப் பெண்ணாயிருந்தால்.... நீங்கள் தாழ்த்தப்பட்டவராயிருந்தும், பிற்படுத்தப்பட்டவராயிருந்தும், ஆதிவாசியிருந்தும், ஏழையாயிருந்தும் படித்திருந்தால் .... ஆதிக்கச் சாதியில் பிறந்திருந்தால்.... இந்துவாயிருந்தால்..... இந்து அல்லாத வேற்று மதத்தினராய் இருந்தால்..... தமிழ் நாட்டில் வாழும் வேறு மாநிலத்தவராய்  இருந்தால்.... இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழும் தமிழனாய் இருந்தால்.... நாத்திகராய் இருந்தால்.... அரசியல்வாதியாய் இருந்தால்.... ஊழலை வெறுக்கும் கருத்துச்சுதந்திர வீரனாய் இருந்தால்.... ரொம்ப இழுத்தாச்சு, நீங்க இந்தியனா இருந்தா, ஏன் இந்தியாவுல இருக்கிற அன்னியனா இருந்தாலும் சரி, இந்தியச்  சுதந்திர தினத்தை  நீங்கள் மிகு உற்சாகமாக  கொண்டாடியே ஆகவேண்டும்.  முடியாது, இந்தக் கொண்டாட்டத்தை மறுக்கும் சுதந்திரம் எனக்குள்ளது என்று நீங்கள் கொதித்தால் அது, கொண்டாடும் நாங்களோ, அல்லது என் தாய்நாடோ உங்களுக்குப் போட்ட பிச்சை.  பிச்சைக்...

உத்தம எழுத்தாளனாக ஆவது எப்படி ?

தனிக் குடித்தன மனைவி பேறுகாலத்தில் பிரியும் போதுதான், சில விரும்பக்கூடிய, பலர் வெறுக்கக் கூடிய, விபத்துகள் நடந்து விடுகின்றன,  எனக்கு நிகழ்ந்ததா இல்லையா என்பது,  என்னை விட உங்களுக்குத்தான் முதலில் தெரியப்போகிறது.  இருங்கள், மிருதுளா உள்ளே நுழைகிறாள், நீங்கள் கொஞ்சம் அப்புறமாய் வாருங்கள். "இந்தாங்க டின்னர், நீங்க கேட்டா மாதிரி சிம்பிளா எடுத்துட்டு வந்திருக்கேன்" மிருதுளாவின் குரல் பெயருக்கு ஏற்றார் போல மிருதுவாகவெல்லாம் இல்லை, லேசாய் நம்ம அங்காடித் தெரு அஞ்சலி போலத்தான் இருக்கும், ஆனால் என்னுடன் பேசும்போது மட்டும் அவள் குரலில் கொஞ்சம் தேனைக் குழைத்துப் பேசுவாளா......அடடா அந்த கிக் எந்த சரக்கிலுமே கிடைக்காது.  மரபுப்படி இங்க மிருதுளாவை வர்ணிக்கணும், ஆனா குரலிலேயே இவ்வளவு போதை இருக்கிறப்போ, அதெதுக்கு வெட்டியா ?  உங்களுக்குப் புடிச்ச செம கட்டைய கற்பனை பண்ணிக்குங்க, அதுசரி, உங்களைத்தான் அப்பவே போகச் சொல்லிட்டேனே ? "யேய், நான் வேணாம்னுதாம்பா சொன்னேன், சாப்டுட்டேனே" என்றேன்.  இப்படி சீண்டினால்தான்  அவள் முறைக்கும் சாக்கில் தலையை சாய்த்து ஒரு பா...