இடுகைகள்

காந்தஹாரும் சில உண்மைகளும் !!!

படம்
கி.பி.1999 ல், கண்டிப்பாக நீங்கள் பிறந்திருப்பீர்கள்.  டெல்லியை ஜெயலலிதா பாஷையில் சொன்னோமானால் மைனாரிட்டி வாஜ்பேயி அரசு ஆண்டுக் கொண்டிருந்தது.  நேபாளத்தில் இருந்து டெல்லியை நோக்கி கிளம்ப ஏர்-இந்தியா இல்லையில்லை இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கிளம்பத் தயாராகிறது.   பயணிகளில் பெரும்பாலோர்  நன்கு சுற்றிக் களைத்து இன்னும் சில மணி நேரங்களில் ஊர் சென்று குழந்தைகளை/மனைவியை/அம்மாவை/யாரையோ பார்த்துவிடுவோம் என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் குபுக் என்று விமானம் விண்ணில் தாவுகிறது.  அதன்பின், கந்தசாமி தலைமையில், ராமசாமி, டேவிட்பில்லா,  சித்தார்த்தன், மகாவீர்ஜெயின், ஹர்பஜன்சிங் போன்ற பயங்கரவாதிகளால் அந்த விமானம் கடத்தப்படப் போவதாகவும், இனி எங்கள் கட்டுப்பாட்டில் அமைதியாக இருந்தால் உயிர் அல்லது சாவு என்று எச்சரிக்கை பிறப்பிக்கப் படுகிறது.  பயணிகள் முகத்தில் சவக்களை அப்பியது.  பைலட்டுகளிடம் விமானத்தை துபாய் நோக்கி செலுத்துமாறு கந்தசாமி மிகத் தாழ்மையுடன் கோரிக்கை வைக்கிறார்.  பைலட் மிகத் திமிராக, 'அவ்ளோவ் தூரம் போறதுக்கு பெட்ரோல் இல்ல' என்கிறார...

நான் ரசித்த ஹாலிவுட்(பழைய) படம் !!!

படம்
போன சனி இரவன்று விஜய் டிவியில் ஓர் அனிமேஷன் படம்.   அடடா......ஒரே ஒரு வினாடி கூட கண்களை திரையில் இருந்து அகற்றவே முடியவில்லை. படப்பெயர்  'RATATOUILLE'   என்ன   அற்புதமான உழைப்பு ?   ஒரு புத்திசாலி மூஞ்சூறு எலி , தன்னுடைய அதிசிறந்த மோப்பத் திறமையால் எலிகள் கூட்டத்தின் மத்தியில் பெரும் புகழ் பெறுகிறது.    ஆனால் , அந்த எலிக்கு தன்னுடைய கூட்டம் பரம்பரை பரம்பரையாக மனிதனிடம் திருடியே பிழைப்பு நடத்துகிறதே என்ற ஒரு வருத்தமுண்டு.   எனவே உழைத்துச் சாப்பிட வேண்டும் என ஓர் ஆவல் அதன் மனதில் உருவாகிறது. இருந்தாலும் வயிறு இருக்கிறதே......எனவே வழக்கமாய்த் திருடும் வீட்டுக்குச் செல்கிறது.   டிவியில் வரும் ஒரு சமையல் நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டே உணவுகளைத் திருடித் தின்கிறது.    அந்த சமையல் நிகழ்ச்சியில் வரும் 'Mr.குட்ஸ்வ் '  எனும் சமையல் கலைஞரின் பேச்சில் மயங்குகிறது.   அவர் சொல்கிறார் , ' எவர் வேண்டுமானாலும் சுவையாகச் சமைக்கலாம் ' , இதுபோக அருகில் அவருடைய சமையல் குறிப்புகள் அடங்கிய புத்தகத்தை பார்க்கிறது.    ...

இந்தக் கதை எழுதியதற்கு நான் வெட்கப்படுகிறேன். மன்னித்து விடுங்கள் :-((

ஆக்ரோஷத்துடன் இருந்த அந்த இளைஞர்கள் கூட்டத்தைப் பார்க்கும்போதே மனதுள் கொஞ்சம் கிலி பரவியது.  இத்தனை நாட்களுக்குப் பிறகும் இதெப்படி இந்த நெருப்பு இன்னும் அணையாமல் இருக்கிறது என அர்விந்த் ரதோர் ஆச்சர்யப்பட்டான்.  கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் முடியப் போகிறது, அக்கோரச் சம்பவம் நடந்து.  நேர்மையான, துணிவான அதிகாரிதான் இந்தக் கொடூரத்தை விசாரிக்கவேண்டும், இதற்கு சரியான ஆள் இவர்தான் என்று பலரின் ஏகோபித்த ஆதரவுடன், கடைசியாய் அர்விந்த் தேர்ந்தெடுக்கப்பட்டான்.  அதன்படியே, அர்விந்த் மிகச் சரியான கோணத்தில், எந்த அரசியல் இடையூறுமின்றி, சாட்சிகளை சரியாகச் சேர்த்து, அந்தக் கொடுமைக்காரர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்களை அடுக்கி வைத்திருந்தான்.  நாடு முழுக்க பெருங்கோபத்தை கிளறி விட்ட இந்த பாலியல் வன்முறை வழக்கு, விரைவு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு வருவதால், இன்னும் ஓரிரு வாரத்தில் தீர்ப்பு வரும் நிலையை எய்தியுள்ளது.  நிச்சயம் ஒரு குற்றவாளி கூட தப்ப முடியாத அளவு, வலையைப் பின்னியிருந்தான் அர்விந்த்.  செண்டிமெண்ட் கேஸ் வேறு என்பதால் அதிகபட்ச தண்டனையை பெறுவார்கள் என அர...