எக்சிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும்- CHARU NIVEDITA

சாருவின் இந்த முதல் நாவல், இலக்கியத் தாகமும், புதுமை விரும்பிகளுக்கும் மிகப் பிடித்த ஒன்று.
ஒரு தலைமுறைக்கு அப்பாலும் இந்த நாவல் தொடர்ந்து இதுப் போன்ற ஆட்களால் மட்டுமே சிலாகிக்கப்படக் காரணம், சாருவின் 'எழுத்து நடை' (கமா, முற்றுப்புள்ளிகள் இல்லாமல் நீளும் இரண்டு பக்கப் பத்திகள்) மற்றும் வெளிப்படையான 'கதாபாத்திர நிகழ்வுகள்'.


.அதேசமயத்தில் என்னைப் போன்ற 'அறம்சார்ந்த' மற்றும் 'பல்ப்' வகை நாவல் வாசிப்பாளர்களுக்கு 'அவைகளே' படிக்கமுடியாமலும், படித்ததை ஜீரணிக்க முடியாமலும், அளவுமீறி மானை விழுங்கிய மலைப்பாம்பைப் போல், தவித்துக்கிடக்க வைத்தன.

சாருவுடனான சந்திப்பின் போது இதுபற்றி விவாதித்து விட வேண்டும் என்ற தீர்க்கமான முடிவுகளும், அவரை நேரில் கண்டபின் கிணற்றில் வீசிய கல்லாய் காணாமல் போவது வாடிக்கை ஆனது.

சிறுமலையில் வீசிய குளிகாற்று எனக்குச் சாதகமாய் வீசிய அதிர்ஷ்டக் காற்று. 'ஜீரோ டிகிரி' பற்றி பிரவீன் கேட்ட ஒரு கேள்விக்கு பதிலுரைக்க ஆரம்பித்தவர் எதேச்சையாக ஒரு கருத்தைப் பகிர்ந்தார்.

// நீங்கள் 'வாழ்க்கையில் ஒரு முறையாவது நாகூருக்குச் செல்ல நேரின், அவசியம் அங்குள்ள 'கொசத் தெரு'வை பார்த்துவிட்டு வரவும். நூற்றாண்டுகள் ஆகியும் துளியும் மாறாத ஒரு 'சேரியை' (SLUM ) நீங்கள் அங்கு காணலாம். தங்களின் 'கலாச்சாரத்தை' இத்தனை அறிவியல் கண்டுபிடிப்புகள் வந்த பின்னரும் மாற்றிக்கொள்ள விரும்பாத சமூகம் இன்னமும் அங்குள்ளது.

வெள்ளைக்காரன் காலத்து குடிநீர் குழாய், தெருப்பலகை, துருபடிந்து, சிதிலமடைந்து, ஆனால் அதை யாரும் மாற்ற முயலாமல் அப்படியே கிடக்கும் நிலையை விளக்கி என் மாமா முப்பது வருடங்களுக்கு முன்னால் எனக்கு காட்டிய அந்தப் பொருட்கள், நான் சமீபத்தில் நாகூர் போனபோதும் காண நேர்ந்தது. நீங்கள் போனாலும் காண முடியலாம்.

ஆக, இப்படி தன்னை சிறிதும் மாற்றிக்கொள்ள விரும்பாத ஒரு சேரியில் வளர்ந்தவன் நான், அதில் நடந்த நிஜங்களை நான் கிஞ்சித்தும் மாற்றாமல் அப்படியே எழுதும் போது, 'சேரிக்கலாச்சாரத்தை' துளியும் அறியாத உங்களுக்கு அது அதிர்ச்சியையும், அசூயையும், கோபத்தையும், எள்ளலையும், ஒருங்கே என் மீதும், என் எழுத்தின் மீதும் கொள்ள வைக்கிறது" என்றார். //



இதோ, இப்போது மீள்வாசிப்பில் இந்த நாவல் ஓர் அதிசயமாகவும், ஆனந்த அனுபவத்தையும். கொடுக்கத் தொடங்கி விட்டது. (நாயுடு குடும்பக்கதைகள் உட்பட)
நன்றி சாரு :-)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடலோடி - நரசய்யா !!!

மெக்சிகோ சலவைக்காரி ஜோக்

கெட்ட வார்த்தை பேசுவோம் !!!