புதன், 8 ஆகஸ்ட், 2012

உத்தம எழுத்தாளனாக ஆவது எப்படி ?

தனிக் குடித்தன மனைவி பேறுகாலத்தில் பிரியும் போதுதான், சில விரும்பக்கூடிய, பலர் வெறுக்கக் கூடிய, விபத்துகள் நடந்து விடுகின்றன,  எனக்கு நிகழ்ந்ததா இல்லையா என்பது,  என்னை விட உங்களுக்குத்தான் முதலில் தெரியப்போகிறது.  இருங்கள், மிருதுளா உள்ளே நுழைகிறாள், நீங்கள் கொஞ்சம் அப்புறமாய் வாருங்கள்.

"இந்தாங்க டின்னர், நீங்க கேட்டா மாதிரி சிம்பிளா எடுத்துட்டு வந்திருக்கேன்" மிருதுளாவின் குரல் பெயருக்கு ஏற்றார் போல மிருதுவாகவெல்லாம் இல்லை, லேசாய் நம்ம அங்காடித் தெரு அஞ்சலி போலத்தான் இருக்கும், ஆனால் என்னுடன் பேசும்போது மட்டும் அவள் குரலில் கொஞ்சம் தேனைக் குழைத்துப் பேசுவாளா......அடடா அந்த கிக் எந்த சரக்கிலுமே கிடைக்காது.  மரபுப்படி இங்க மிருதுளாவை வர்ணிக்கணும், ஆனா குரலிலேயே இவ்வளவு போதை இருக்கிறப்போ, அதெதுக்கு வெட்டியா ?  உங்களுக்குப் புடிச்ச செம கட்டைய கற்பனை பண்ணிக்குங்க, அதுசரி, உங்களைத்தான் அப்பவே போகச் சொல்லிட்டேனே ?

"யேய், நான் வேணாம்னுதாம்பா சொன்னேன், சாப்டுட்டேனே" என்றேன்.  இப்படி சீண்டினால்தான்  அவள் முறைக்கும் சாக்கில் தலையை சாய்த்து ஒரு பார்வை பார்ப்பாள், அந்த அழகை ரசிக்க, அடிக்கடி இதுபோல் செய்வேன்.  ஆனால் இன்று கொஞ்சம் உற்சாக மூடில் தெரிந்தாள்.  எனக்கு ஓரளவு பெண்ணின் உடல்மொழியைப் படிக்கும் திறனை ஆண்டவன் கொடையாய் அளித்துள்ளான் என்று புருடா விட விரும்பவில்லை.  இன்னும் ஆயிரமென்ன பத்தாயிரம் வருடமானாலும் பெண்ணின் உள்ளத்தையெல்லாம், ஆண்களால் கணிக்கவே முடியாது.  கணித்துவிட்டதாய் ஏமாறலாம், அல்லது ஏமாற்றலாம். 
இருந்தாலும் என் கணிப்பு இன்று என்னை ஏமாற்றாது என்று நான் நம்பினேன். 

மிருதுளா அலங்காரம் செய்துதான் அழகாத் தெரியவேண்டும் என்ற அவசியமில்லாத பிறவி, என்ன....அலங்காரம் செய்தால் சபலர்கள் பெருமூச்சு விட்டே சாவார்கள்.  ஆனால், தூங்கப்போகும் இவ்வேளையில் சன்னமாய் பவுடர் பூசி, லிப்ஸ்டிக் தீற்றல்களுடன், கூந்தல் உலரவைக்கும் உத்தியுடன் விரிந்து, மல்லிகைப் பூக்கள் அணிந்து,
ஃப்ரில் இல்லாத நைட்டியில் பொங்கிய நெஞ்சோடு, என்னது டமால்னு சத்தம்.......ச்சே, இதுக்கேவா கிறங்கி விழுவீங்க ?

"அல்லோவ், இந்த மாதிரில்லாம் சீன் போட்டீங்க, அப்புறம் ஒங்க கூட பேசவே மாட்டேன், என் ஃபிரன்ட் உங்கள ஸ்பெஷலா கவனிக்கச் சொல்லிருக்காங்க, அதனாலத்தான் கொண்டாந்தேன்" லேசாய் கோபமும், உனக்காக இல்லை என்று கண்ணில் பொய்யும் தெரிந்தது.

" ஓ, ஸ்பெஷலா கவனிக்கச் சொல்லிருக்காளோ ?"  என்று குறுகுறுப்புடன் அவளை கண்களால் மேய்ந்தேன்.  கையாலாகாத நிலையில் அவள் இருந்ததால் தவிக்க ஆரம்பித்தாள்.  (பொதுவாக நைட்டி மேல் டவல் போர்த்தி வருவாள்) 

"சாப்டறேன், ச்சும்மா சொன்னாக் கூட கோச்சுப்பாப்பா இவ" என்றவாறே அவள் கொடுத்த ஹாட்பேக்குகளை  வாங்கி டைனிங் டேபிளில் வைத்தேன். 

"சாப்பிட்டு அப்படியே வைங்க, கழுவில்லாம் கொடுக்கக் கூடாது, நான் அப்புறமா வர்றேன்" என்றாள்.

"சரி, சரி, இன்னிக்கு செம விருந்துதான், பொறுத்தார் மிருதுளா ஆள்வார்" என்று உற்சாக மிகுதியில் சொல்லிவிட்டேன்.  ஆனால், அதன் பின்னர்,  மிரண்டேன்.  பார்வையில் பலமுறை இவளிடம் எல்லை மீறியிருக்கிறேன், ஆனால் பேச்சில் இன்றுதான்.  என்ன ஆகுமோ என்று பயந்தேன். 

ஆகா, பயந்தபடியேதான் நடந்தது, லேசே கலங்கிய விழிகளோடு அவள் விருட்டென்று திரும்பி, என் வீட்டு வாசற்கதவை ஓங்கி அறைந்து வெளியேறினாள்.  'ஷிட், இன்னும் கொஞ்சம் பேசவிட்டு, வலய விரிச்சிருக்கலாம், இத்தனை வருஷம் கழிச்சு கிடச்ச வாய்ப்ப, இப்படியா பேசிக் கெடுப்பேன் ?' என்று நொந்தபடியே அடுத்து என்ன செய்வது ? என்று விழித்தேன். 

அவளின் கணவனிடமும், என்னுடைய மனைவியிடமும் சொல்லி விடுவாளோ என்ற சிந்தனை லேசே வயிற்று வலியைக் கொடுத்தது.   மனைவி  கைக்குழந்தையுடன் தாரைத் தாரையாய்க் கண்ணீர் வழிய, "நாங்க எங்கங்க போவோம் ?" என்று ஒரு காட்சி ஓடியது.  மிருதுளாவை கைபேசியில் அழைத்தேன்.  'கலக்கப் போவது யாரு....? நீதான்'.......எனக்கு மிகப்பிடித்த பாடல்.  திரும்ப, திரும்ப அழைத்தும் அதே பாட்டு, நோ ரிப்ளே....... கைகள் லேசே நடுங்க 'SORRY ' என்று மெசேஜ் அனுப்பினேன்.

ஓகே இனி நீங்க வரலாம், ஒரு சமூக அக்கறையுள்ள எழுத்தாளன் என்றால் இங்கே END போட்டுவிட்டு அடுத்த கதை எழுதப் போனால், அவனுக்கு நிறைய பெண் வாசகிகள் கிடைப்பர். 'உத்தம எழுத்தாளன்' என்ற பட்டமும் கிட்டும்.  நாட்டுக்கும் நல்லது வீட்டுக்கும் நல்லது.  Best Of Luck.  நன்றி போய் வருக !!!    

உங்களை அனுப்பிவிட்டு கொஞ்சமாய் கண்ணசந்தேன்,  'டுக் டுக் டுக்' கென்று ஒரு சத்தம்  அது என்  மொபைல் மெசேஜ்  டோன்.
' Y Sorryppa, Swapna thoonga, cel silent mode il vaiththu vitten, ippathaan unga missed call & msg parthen, saaptavunna call pannunga :) '


                                                            - -  MY END - -
            

    

4 கருத்துகள்:

  1. நான் உத்தம எழுத்தாளனாக இருக்கவே ஆசைப்படுகிறேன்...அப்படின்னு இதுக்கு கம்மென்ட் போடலாம்னு நெனச்சேன்! அப்புறம்தான் யோசிச்சதுல "அவள் எஸ் எம் எஸ் மட்டும்தான அனுப்புனா! அதுக்கப்புறம் என்ன நடந்ததுன்னு நீங்க சொல்லவே இல்லையே! ஒருவேளை அவள் வந்து அவருக்கு அறிவுரை வாரி வழங்கி இருக்கலாம். அதைக் கேட்டு நம்மாளு "நல்லா" மனம் திருந்தி இருக்கலாம்" அப்படின்னு கன்னாபின்னான்னு ஏதேதோ தோணுச்சி...ஹி ஹி..அதெல்லாம் சொல்லனுமா என்ன?

    பதிலளிநீக்கு
  2. மிக நன்றாக இருக்கிறது, ஒரு விறுவிறுப்பு, கிளுகிளுப்பு இப்படி கலந்து. நல்ல நடையாக இருக்கிறது. நிறைய எழுதுங்கள்

    பதிலளிநீக்கு