ஏன் கசந்தார் சாரு எனக்கேன் கசந்தாரோ ?
சாருவின் அதி தீவிர வாசக மற்றும் ரசிகர்களே..... அழகாய் ஒரு காதல் வந்தவுடன் , காதலி சொன்னாள் என சில நண்பர்களைத் துறப்பதில்லையா ......... மனைவி வந்தவுடன் அத்தனை நாள் அன்பு காட்டிய அம்மா திடுமென வில்லியாகத் தோன்றுவதில்லையா .......... மக்களுக்கொரு கருத்தும் , தனக்கொரு கருத்துமாய் வாழும் கொளுத்த அரசியல்வாதியை விட்டு வெளியேறி , எதிர்கட்சியால் கொஞ்சம் செழிப்பான தொண்டன் , முன்னாள் தலைமையை தூற்றுவதில்லையா ......... அதுபோலத்தான் , கொஞ்சம் நல் இலக்கிய அறிவு எனக்கு கிட்டக் கிட்ட , உங்களின் பார்வைக்கு நிறைகளாய் தெரிவதே எனக்குக் குறைகளாய் தென்பட ஆரம்பித்தது . எனவேத்தான் என்னுடைய இந்த நிலை மாற்றம் . இயன்றவரை சாருவின் எழுத்துகளில் இருந்துதான் விமர்சித்துள்ளேன் . ஒரு சில இடங்களில் மட்டும் தனிப்பட்ட , ஆனால் சாட்சியங்கள் இருக்கும் சில சம்பவங்களைச் சொல்லியுள்ளேன் . கண்ணதாசன் , " எழுத்தாளனின் எழுத்துக்களைப் பின்பற்று , அந்த எழுத்தாளனை அல்ல " என்கிறார் . எனவே எழுத்துகளை எழுத்தாளனுடன் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல் , சாருவின் எழுத்துக்களை விமர்சிக்கும் என்னுடைய எழுத்துக்களில் ...