நாட்டுக்கு இதெல்லாம் அவசியமாய்யா ?
நான் ரசித்த ஆளுமைகளெல்லாம் சிறுகச் சிறுக சரிந்து கொண்டே வருவதை கண்ணுறுகிறேன் ! 2010 ல் என்னுடைய டாப் 10 தமிழ் சினிமா இயக்குனர்களாக நான் பட்டியலிட்டவர்கள் :- மணிரத்னம், ஷங்கர், பாலா, அமீர், கவுதம்மேனன், செல்வராகவன், மிஷ்கின், வெங்கட்பிரபு, சேரன், வசந்தபாலன் ! மணியின் பலம் இராவணனிலேயே தெரிந்துவிட்டது, சரி இனி இவரை க்ளாஸிக் வரிசையில் சேர்த்துவிடலாம் என முடிவு செய்த வேளையில் கடல் வந்து, அப்படி சேர்க்காவிட்டால் ’நீ முட்டாள்’ எனச் சொன்னது, ஆக, அந்த இடம் வெற்றிடமாய் உள்ளது. ஷங்கரைப் பொறுத்தவரையில் அவருடைய எந்திரன் & நண்பன் அபார வெற்றிதான் வணிகரீதியில். ஆனால் முன்னதை குப்பை என்றும், பின்னதை ரீமேக்தானே என்றும் மேதைகள் மட்டம் தட்ட முயல்கிறார்கள். அதைப்பற்றி ஷங்கர் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் தன்னுடைய எஸ் ப்ரொடக்ஷன் மூலம் நட்டத்தைத்தான் சந்தித்துள்ளேன் என்கிறார். வணிக சினிமா மூலம் இவர் சம்பாதித்தால்தான் பிற புது சிந்தனையாளர்கள் மூலம் நல்ல படம் கிட்டும். எனவே பட்டியலில் இவருக்கே இப்போது முதலிடம் கொடுக்க வேண்டும். ஆனாலும் ஐ வந்துவி...